நெஞ்சம் அவள் வாங்க…

தண்டு தழுவாத் தாஅவு நீர் வையையுள்

கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க

நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க

நேர் இழை நின்று உழிக்கண் நிற்ப நீர் அவன்

தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப

ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ…

நூல்: பரிபாடல் (பாடல் #11ன் ஒரு பகுதி)

பாடியவர்: நல்லந்துவனார்

சூழல்: வைகை ஆற்றில் நிகழும் ஒரு காதல் காட்சி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஓர் இளைஞன் தண்ணீரில் பாய்கிறான். வாழை மரத் துண்டைத் தழுவியபடி ஆனந்தமாக நீந்தி விளையாடுகிறான்.

பக்கத்தில் சில பெண்கள் நின்றிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியை அவன் பார்த்தான். காதல் கொண்டான்.

விரைந்து ஓடும் வைகை நதி அவனுடைய உடம்பைப் பிடித்து இழுத்தது, இந்தப் பெண்ணின் அழகு அவனுடைய நெஞ்சத்தைப் பிடித்து இழுத்தது.

அவளுக்கும் அவன்மீது ஆசைதான். தண்ணீரில் நீந்துகிற அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

அடடா, இந்த ஆற்றுக்குக் காதலர் மனம் புரியவில்லையே, அவனை அவள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லாமல் வேறு எங்கோ இழுத்துப்போகிறதே. இதென்ன நியாயம்?

அவன் நீரோட்டத்தில் செல்வதைப் பார்த்து இவள் துடித்தாள். தன்னுடைய தோழியரை மறந்து அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.

துக்கடா

 • ’பரிபாடல்’ தொகுப்பில் உள்ள எல்லாப் பாடல்களுமே மிக நீண்டவை. ஆனால் நமக்கு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்தவற்றில் இப்படி எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைய. பக்தி, இயற்கை வர்ணனை, காதல் என எல்லாம் கலந்த வித்தியாசமான சங்க இலக்கிய நூல் இது
 • //தோழியரை மறந்து அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்// விவேக்காழ்வார் அருளிய ‘ஃபிகரைப் பார்த்ததும் ஃப்ரெண்டைக் கட் பண்றியேடா’ என்ற வாசகம் அந்தக் காலத்திலேயே வழக்கத்தில் இருந்திருக்கிறதுபோல 😉
 • ஆற்றில் நீந்துவது சரி. எதற்கு வாழைத் தண்டு?
 • சும்மா ஒரு விளையாட்டுதான். பாத்டப்பில் குளிக்கிறவர்கள் ரப்பர் வாத்துகளை வைத்து விளையாடுவதுபோல், அந்தக் கால நீச்சல் துணை வாழை மரத் தண்டு!
 • இன்றைய அரிய சொல் : ஆயம் = குழு / கூட்டம்
 • உதாரணங்கள்:
 • 1. ’நீதிமன்ற ஆயம்’ என்று செய்திகளில் கேட்கலாம். நீதித்துறை நிபுணர்களின் தொகுப்பு, Bench என்ற பொருளில் பயன்படுகிறது (சாஃப்ட்வேர் கம்பேனிகளில் உள்ள பெஞ்ச் அல்ல 😉
 • 2. ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே! : தேவாரம்
120/365
Advertisements
This entry was posted in இயற்கை, காதல், நாடகம், பரிபாடல், வர்ணனை. Bookmark the permalink.

One Response to நெஞ்சம் அவள் வாங்க…

 1. amas32 says:

  இது கண்டதும் காதல். “விரைந்து ஓடும் வைகை நதி அவனுடைய உடம்பைப் பிடித்து இழுத்தது, இந்தப் பெண்ணின் அழகு அவனுடைய நெஞ்சத்தைப் பிடித்து இழுத்தது.” மிக அழகான வர்ணனை!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s