கிள்ளாதே

மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை

ஒற்கப் பட முயலும் என்றல் இழுக்கு ஆகும்

நற்கு எளிது ஆகி விடினும் நளிர்வரைமேல்

கல் கிள்ளிக் கை உய்ந்தார் இல்.

நூல்: பழமொழி நானூறு (#48)

பாடியவர்: முன்றுரையரையனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

குளிர்ந்த மலை மேலே பாறைகள் கிடக்கின்றன. அவற்றைச் சும்மா கிள்ளிப் பார்க்கலாமே என்று நினைப்பது ரொம்பச் சுலபம். கிள்ளினால் நம் கைதான் வலிக்கும். அந்தப் பாறைக்கு எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடாது.

அதுபோல, அறிவு நிறைந்தவர்கள், சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறவர்கள் வருந்தும்படி தீய செயல்களைச் செய்யலாம் என்று எண்ணுவது தவறு. அதனால் நமக்குதான் துன்பம்.

துக்கடா

  • கிட்டத்தட்ட இதேமாதிரியான கருத்தைச் சொல்லத் தமிழில் இன்னும் பல வாசகங்கள் உண்டு : சூரியனைப் பார்த்து நாய் குரைப்பது, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆனால் அவற்றைவிட ‘கல்லைக் கிள்ளினால் கைதான் வலிக்கும்’ என்பது ரொம்பச் சுலபமாகவும் practicalலாகச் செய்து காட்டக்கூடியதாகவும் உள்ளது 🙂
  • இன்றைய அரிய சொல் : நளிர் = குளிர்
  • உதாரணங்கள்:
  • 1. நாணமும் அன்பும் முன்பு நளிர்வரை ஏற… : பெரிய புராணம்
  • 2. நாகம்தான் கயிறாக, நளிர்வரை அதற்கு மத்தாக… : தேவாரம்
119/365
Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், பழமொழி நானூறு, வெண்பா. Bookmark the permalink.

2 Responses to கிள்ளாதே

  1. PVR says:

    //ஆனால் அவற்றைவிட ‘கல்லைக் கிள்ளினால் கைதான் வலிக்கும்’ என்பது ரொம்பச் சுலபமாகவும் practicalலாகச் செய்து காட்டக்கூடியதாகவும் உள்ளது // Very true. 🙂

  2. amas32 says:

    முன்பெல்லாம் அரசியலிலும் ஆன்மிகத்திலும் மிகவும் மதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். இப்பொழுது இரண்டும் மிகக்குறைந்து விட்டது. அதனால் இந்த அறிவுரையை, நம் தினப்படி வாழ்கையில் நாம் சந்திக்கும் நம்மை விடப் பெரியோரை இகழாமல் இருப்பதற்கு நினைவில் வைத்துக் கொள்வது நமக்கு நன்மையளிக்கும் 🙂
    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s