எல்லாம் உனது!

நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது

ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்! எனக்கு உள்ளம் எல்லாம்

அன்றே உனது என்று அளித்துவிட்டேன். அழியாத குணக்

குன்றே, அருள்கடலே, இமவான் பெற்ற கோமளமே!

நூல்: அபிராமி அந்தாதி (#95)

பாடியவர்: அபிராமி பட்டர்

அபிராமியே, மலை அரசன் பெற்ற கோமளவல்லியே, என்றும் அழிவில்லாத குணக் குன்றே, அருள் கடலே,

என்னுடைய உள்ளத்தையெல்லாம் உன்னுடையது என்று கொடுத்துவிட்டேன். இனிமேல் எனக்கு ஒன்றும் தெரியாது, நல்லது, கெட்டது எதையும் நான் அறியேன், எல்லாம் உன் செயல்!

துக்கடா

 • இந்தப் பாடலில் உள்ள அனைத்துமே இன்றும் புழக்கத்தில் இருக்கிற நல்ல தமிழ்ச் சொற்கள்தாம். ஆகவே, தீபாவளியை முன்னிட்டு ‘அரிய சொல்’லுக்கு இன்று விடுமுறை 🙂
 • அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
112/365
Advertisements
This entry was posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர். Bookmark the permalink.

One Response to எல்லாம் உனது!

 1. amas32 says:

  தீபாவளிக்கு ஏத்த நல்ல பா. “அழியாத குணக்
  குன்றே, அருள்கடலே, இமவான் பெற்ற கோமளமே!” இந்த வரியினை சொல்லிக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
  It succinctly explains who She is. Happy Deepavali to you too and may you be blessed with all great things in life for the service you are
  doing!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s