அழகை இழக்கிறாள்

’வேப்பு நனை அன்ன நெடுங்கண் கள்வன்

தண் அக மண் அளை நிறைய நெல்லின்

இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்

பெரும்கவின் இழப்பது எவன் கொல்? அன்னாய்!’

நூல்: ஐங்குறுநூறு (#30)

பாடியவர்: ஓரம் போகியார்

சூழல்: மருதத் திணை. தன் காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் பெண் கேட்டு வருகிறான் காதலன். பெண் வீட்டார் ‘இவன் யாரோ தெரியவில்லையே, இவனை நம்பி நம் மகளைக் கல்யாணம் செய்து கொடுக்கலாமா?’ என்று யோசிக்கிறார்கள், அவனை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். அப்போது தோழி விஷயத்தைப் போட்டு உடைக்கிறாள். ‘உங்கள் மகளுடைய காதலன்தான் இவன். அவள் இவனையே நினைத்து உருகிக்கொண்டிருக்கிறாள். நீங்கள் தயங்காமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று மறைமுகமாகச் சொல்கிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அன்னையே,

வேப்பம்பூவின் அரும்பைப்போல நீண்ட கண்களை உடையது நண்டு. அந்த நண்டின் வீடு, குளிர்ந்த மண் அளை. வயலில் உள்ள அந்த நண்டு வளைமுழுவதும் இப்போது நெல்லின் பூ உதிர்ந்து நிறைத்திருக்கிறது. அப்படிப்பட்ட வளம் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் இவன்.

என்னுடைய தோழி, உங்கள் மகள் இவனுக்காக உருகித் தன் அழகை இழந்துகொண்டிருக்கிறாள். அது ஏன்? கொஞ்சம் யோசிங்களேன்!

துக்கடா

 • இன்றைய அரிய சொல் : கள்வன் = நண்டு (’களவன்’ என்றும் சொல்வது உண்டு. ஆனால் ‘கள்வன்’ என்பதுதான் சரியான வார்த்தை. நண்டு ஒரு கள்வன் / திருடனைப்போல் இரவில் வெளியேறுவதால் இந்தப் பெயர் என்று சொல்கிறார்கள். இந்தக் காரணம் சரியா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.)
 • உதாரணங்கள்:
 • 1. கள்வன் மண் அளைச் செறிய… : அகநானூறு
 • 2. கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல்… : கலித்தொகை
105/365
Advertisements
This entry was posted in அகம், ஐங்குறுநூறு, கதை கேளு கதை கேளு, காதல், தோழி, நாடகம், பெண்மொழி, மருதம், வர்ணனை. Bookmark the permalink.

4 Responses to அழகை இழக்கிறாள்

 1. இந்தத் தோழியை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!:)
  காலம் அறிந்து காதலைச் சேர்க்கும் இவ ரொம்ப நல்ல பொண்ணு:))
  ——————

  //வேப்பம்பூவின் அரும்பைப்போல நீண்ட கண்களை//
  வேப்பம் பூவே பொடிசு பொடிசாத் தானே இருக்கும்? எப்படி “நீண்ட”? ஒரு வேளை அந்த நண்டுக்கு நீண்ட-வா? 🙂
  —————-

  யாருப்பா அது? ஒருத்தர் வந்து என்னைய கேட்பாரே….
  காதல் சேதி உடைக்கும் நேரத்தில்…வேப்பம்பூ, வயல், நண்டு, நெல்பூ-ன்னு கிட்டு…
  சம்பந்தமே இல்லாமல், சங்க காலக் கவிஞரு பாடுறாரே-ன்னு கேட்பாரே ஒரு 365paa அன்பர்…அவரு எங்கே?:)))

 2. சொல்ல மறந்துட்டேனே….
  Love Marriage-ஐ Arranged Marriage ஆக்கும் technique, அப்பவே நம்ம பசங்களுக்குத் தெரிஞ்சிருக்கு:…பாருங்க 🙂

  வேப்பம் பூ, நெல்பூ படங்களை, அன்பர்கள் யாரேனும் தரவும்!

 3. amas32 says:

  அது என்னமோ சங்கக கால இலக்கியத்தில் தோழிகளுக்கு தான் நிறைய முக்கியத்துவம். நாயகி தன விரக தாபத்தையும் தோழியிடம் தான் சொல்லுவாள். நாயகியின் மனக்கொதிப்பயையும் தோழி தான் நாயகனிடமோ, பெற்றோரிடமோ எடுத்துக் கூறுவாள். Nice intermediary!
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s