இடை ஒரு கொடி

என்றும் நுடங்கும் இடை என்ப, ஏழ் உலகு

நின்ற கவிகை நிழல்வேந்தே – ஒன்றி

அறுகால் சிறுபறவை அம் சிறகால் வீசும்

சிறுகாற்றுக்கு ஆற்றாது தேய்ந்து

நூல்: நளவெண்பா (சுயம்வர காண்டம் #34)

பாடியவர்: புகழேந்தி

சூழல்: சுயம்வர மண்டபத்துக்கு வருகிறாள் தமயந்தி. அவளது அழகை வர்ணிக்கும் பாடல்களில் ஒன்று இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

உன்னுடைய வெண்கொற்றக்குடை நிழலின்கீழ் ஏழு உலகங்களையும் காப்பாற்றுகின்ற அரசனே,

ஆறு கால்களைக் கொண்ட சிறு பறவை வண்டு. அதன் அழகிய சிறகுகள் படபடக்கும்போது சிறிய அளவு காற்று வீசும். அந்தக் காற்றைக்கூடத் தமயந்தியின் மென்மையான இடையால் தாங்கமுடியாது. துவண்டுவிடும்.

துக்கடா

 • தமயந்தியின் இடை மிகவும் மெலிதானது என்பதைச் சொல்வதற்காக, ’வண்டின் சிறகுகள் படபடக்கும் காற்றுக்குக்கூடத் துவண்டுவிடும்’ என்று மிகைப்படுத்திப் பாடுகிறார் புகழேந்தியார். இது ’உயர்வு நவிற்சி அணி’ வகையில் சேரும்
 • இன்றைய அரிய சொல் : அம் = அழகிய
 • உதாரணங்கள்:
 • 1. அங்கயற்கண்ணி = அம் + கயல் + கண்ணி = அழகிய மீன்களைப் போன்ற கண்களைக் கொண்டவள்
 • 2. கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி : குறுந்தொகை
103/365
Advertisements
This entry was posted in நளவெண்பா, வர்ணனை, வெண்பா, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இடை ஒரு கொடி

 1. amas32 says:

  Waiting for other learned people’s comments! அருமையான பா. பெண்ணுக்கு சிறு இடையும் ஆணுக்கு பறந்த தோள்களுமே அழகு.
  amas32

  • ஆணுக்கு கூட சின்ன இடை தான் அழகு! 🙂 முருகனைப் பாருங்க! Gymக்கு எல்லாம் போக மாட்டான்! ஆனாலும் எப்படியோ maintain பண்ணுவான்:))

   • amas32 says:

    உண்மை தான், அதுவும் என் வடபழனி முருகனை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் இடையைப் பார்ப்பதா அல்லது கண்ணைப் ரசிப்பதா, குமிழ் சிரிப்பைக் கண்டு மகிழ்வதா, அல்லது திருவடியை நோக்குவதா என்றே தெரியாது. அத்தனை அழகு 🙂
    amas32

 2. GiRa says:

  இந்தப் பாடல் முழுக்க முழுக்க உயர்வு நவிற்சி. அதுவும் ஒன்னுல்ல. ரெண்டு.

  ஏழ் உலகு நின்ற கவிகை நிழல்

  ஒரு அரசனின் ஆளுமையைக் குறிக்கும் பொழுது அவன் வெண்கொற்றக்குடையையும் செங்கோலையும் குறிப்பார்கள்.

  அவை செல்லும் தொலைவுதான் அரசனுடைய ஆளுமைத் தொலைவு.

  இந்த மன்னரிடம் இருந்த கொற்றக்குடை மிகவும் பெரியது. ஏழு உலகங்களும் அதன் கீழ் வருகின்றனவாம். 🙂

 3. GiRa says:

  அறுகால் சிறுபறவையைப் படிக்கும் பொழுது பூநக்கி ஆறுகால் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • எப்பவாச்சும், இந்தக் காளமேகப் பாட்டைப் போடுங்க சொக்கரே!
   பூநக்கி =ஆறுகால்! புள்இனத்துக்கு = ஒன்பதுகால்;
   ஆனைக்கு = கால் பதினேழ் ஆனதே! :))

 4. சொக்கரே, ஒரு ஐயம்!
  உயர்வு நவிற்சி-க்கும், தற்குறிப்பேற்ற அணிக்கும் எப்படி வேறுபாடு காண்பது?
  வண்டின் காற்றுக்கு இடை நுடங்கும் என்பது, உயர்வு நவிற்சி போலவும் இருக்கு! தன் குறிப்பை ஏற்றுவதும் போலவும் இருக்கே! அதான் இந்த ஐயம்! தீர்த்து வையுங்கள்!:)

  • அனுஷா says:

   தற் குறிப்பு ஏற்றம் என்பது, இயல்பாக நடக்கும் செயல் மீது தன் கருத்தை ஏற்றுவது. சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகர் ஏகும்போது, மதில் சுவர் மேலிருந்த கொடிகள் காற்றில் அசைந்ததை, “வாரல் என்பன போல் கை காட்ட” என சொல்லியிருப்பார் இளங்கோவடிகள். அது தற்குறிப்பேற்றம்.
   வண்டின் காற்றுக்கு இடை நுடங்கும் என்பது இயல்பாக நடப்பது அன்று. அது உயர்வு நவிற்சியே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s