அகம் கோயில்

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

நூல்: திருமந்திரம்

பாடியவர்: திருமூலர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நம் உள்ளம் ஒரு பெரிய கோயில், ஊனாகிய இந்த உடம்பு ஓர் ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான் அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீ(சீ)வன்)தான் கடவுள் (சிவலிங்கம்), நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம் நிறைந்த ஐந்து புலன்களும்தான் இருட்டைப் போக்கும் மணிவிளக்குகள்

துக்கடா

 • இந்தப் பாடலில் ’கள்ளப் புலன்கள்’ என்பது மிக முக்கியமான வார்த்தை – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின்பக்கம் இழுத்துவிடக்கூடியவை கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள். ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைத்தார்கள் – கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகவேண்டும் என்பது பொருள்
 • இன்றைய அரிய வார்த்தை – காளம் = இருட்டு (காளா = இருட்டு இல்லாத)
 • உதாரணங்கள்:
 • 1. காளக உடையினன் – சீவக சிந்தாமணி
 • 2. காளக உருவு கொண்ட கடுவினை… – கந்த புராணம்
099/365
Advertisements
This entry was posted in தத்துவம், திருமந்திரம், திருமூலர், பக்தி. Bookmark the permalink.

14 Responses to அகம் கோயில்

 1. nvaanathi says:

  எனி நேயர் விருப்பம்?
  இந்தப்பாவை தெரியாது என்று சொன்னால் அடிக்க வருவார்கள் ஊர்ப்பக்கம் 🙂

 2. GiRa says:

  காளமேகத்தை விட்டுட்டீங்களே. காளம் லேசாப் புரிஞ்சிருக்கும்

 3. அரிய சொல் இன்னொன்று அதே திருமந்திரத்தில் இருந்து. முன்னி – நினைந்து, நினைத்து (முடியால் வணங்கி முதல்வனை முன்னி)

 4. GiRa says:

  சுண்ணாம்புக் காளவாயில். அந்தக்காளமும் இருட்டுதான் 🙂

 5. //உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்//

  நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம் என்ற தாயுமானவர் பாட்டுக்கு முன்னோடி…இந்த வரிகள்!
  —————-

  யாராச்சும் “முருகா”-ன்னு உரக்கக் கூப்பிடும் போது என் நெஞ்சைப் பிடிச்சிக்கத் தோனும்…
  அங்கிருந்து அவன் குதிச்சி வந்துருவானோ?-ன்னு…. 🙂

  இந்தப் பாட்டிலும் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான்! – 1.வள்ளல் பிரான் 2. “கள்ள” (சந்தேகமே இல்லாம அவனே தான்:))

 6. ஒன்னு கேட்கட்டுமா? (யாரும் கோச்சிக்கிட வேண்டாம்)

  //உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்//
  கோயில் வேற, ஆலயம் வேறயா?

  உள்ளம் = கோயில்
  உடம்பு = ஆலயம்
  -ன்னு அதையே இரண்டு முறை சொல்றாரே! திருமூலர் mistake எல்லாம் பண்ண மாட்டாரு! இதற்கு என்ன பொருள்?

  • it may be like the difference between home & house. கடவுள் வசிக்கும் இடம் ஆலயம். கடவுளுக்காக கட்டப்படும் கட்டிடம் கோவில்.

   • ஓரளவு சரியான பார்வை!
    ஆனால் கோயில் வெறும் கட்டிடம் மட்டும் அல்ல!
    ஆ+லயம் = ஆன்மா லயிக்கும் இடம்!

    கோயில், ஆலயம் இரண்டுக்குமே, தமிழில் தனித்த பொருள் உண்டு!
    திருமூலப் பெருமான், ஒரு காரணமாகவே, இப்படிக் குறிக்கிறார்! பாட்டிலேயே அதற்கான வேறுபாடும் இருக்கு!:)

 7. தேவாரத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல் = திருமந்திரம்!
  தமிழ்ச் சைவ சித்தாந்தம் என்பதற்கு “அடி நாதம்” = திருமூலரின் இந்த நூல் தான்!

  பின்னாளில்…சந்தான குரவர்கள் நால்வர் =
  1 மெய்கண்டார்
  2 அருள்நந்தி சிவம்
  3 மறைஞான சம்பந்தர்
  4 உமாபதி சிவம்
  – நால்வரும், இதையொட்டியே, சைவ சித்தாந்த அடிப்படைகளை வகுத்தனர்!
  ———-

  தமிழிலே, முதன் முதலாக, வேதங்களை ஆக்கிக் கொடுத்த காரிமாறன் என்னும் நம்மாழ்வாரின் கருத்துக்கள் பலவும், அப்படியே ஒத்துப் போகும் அழகிய நூல் = திருமந்திரம்!

  சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் கொள்கை = பசு, பதி, பாசம்/ சத்-சித்-ஆனந்தம்!
  மாறன் ஆக்கியதும், இதே முப்பொருள் தான் = அறிவுள, அறிவில, இறைவன்/ சித்து-அசித்து-ஈசன்

  இன்னும் பலப்பல ஒற்றுமைகள்!
  சிவபெருமான்-திருமால் என்ற பெயர் வேற்றுமை தவிர, கொள்கைகள் ஒன்றே போல் இருக்கும்!

  என்ன தான் உயிர்கள், இறுதியில் ஈசனிடம் கலந்தாலும், உயிர் உயிர் தான், அது ஈசனாக முடியாது…போன்ற பலவும் அப்படியே ஒத்துப் போகும்!

  வடமொழியில் கிளைத்த அத்வைதம்…இதற்கு முற்றிலும் மாறுபட்டு, ஈசனும் உயிரும் ஒன்னே…அஹம் பிரம்மாஸ்மி…நானே கடவுள் என்றெல்லாம் சொல்ல…:))

  தமிழில் கிளைத்த நெறிகளோ….வட தத்துவங்களுக்கு மாறுபட்டு,
  ஆனால் தமிழ் நெறிகளுக்குள் ஒன்றோடு ஒன்று இயைந்து இருப்பது, வியப்பு + சிறப்பு!
  ————

  சைவ சித்தாந்தப் பொருளுக்கு மூல நூலாய் இன்றும் ஒளி வீசித் திகழும் நூல் = திருமந்திரம்!

  அதிகம் கவிதையாய் இல்லாது, தத்துவக் குவியலாய், சரியை, கிரியை, யோகம், ஞானம்-ன்னு சமய வல்லுநர்களுக்குத் தோண்டத் தோண்டச் சுரக்கும் நற்கேணி = திருமந்திரம்!

  • இன்னொன்று – கண்மூடித்தனமான பக்தியெல்லாம் திருமந்திரத்தில் இல்லை. உ-ம் ‘வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்’, ‘எண்ணிலி கோடியும் நீர் மேலெழுத்தே’, ‘விதிபல செய்து ஒன்றும் மெய்மை உணரார்’.

   • very nice! thanks for the extra tid-bits:)
    இந்தப் பாடலுக்கு வருவோம்!

    * கோயில்-ஆலயம் = என்ன வேறுபாடு?
    * ஏன் உள்ளம்=கோயில், உடம்பு=ஆலயம்?
    * எப்படி, புலன் 5, ஒரே விளக்கு?

    இதைத் தேடி, அனைவருக்கும் பயனாய், அறியத் தாருங்களேன்!

 8. KRS, my two cents

  The first one could be shrine and temple

  The other one could be the lamp with five faces:-) Not sure though

 9. \\இன்றைய அரிய வார்த்தை – காளம்\\

  திருமோகூர் காளமேகப் பெருமாளையும், கவி காளமேகத்தை நினைக்கும்தோறும் இது இன்னமும் புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாகவே படுகிறது.

  அவ்ளோ சீக்கிரம் ரிடயர்மென்ட் தராதீங்க:-))

 10. Balu says:

  திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  Please follow

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

  (First 2 mins audio may not be clear… sorry for that)

  (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s