இனிது! இனிது!

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்

மனைவாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்

நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்

தலையாகத் தான் இனிது நன்கு

நூல்: இனியவை நாற்பது (#2)

பாடியவர்: பூதஞ்சேத்தனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

செல்வம் உடையவன் அதை மற்றவர்களுக்கு வழங்குவது / தானம் தருவது இனிமையானது.

கணவனும் மனைவியும் ஒத்துப்போனால், குடும்ப வாழ்க்கை இனிமையானது.

இந்த உலகம் நிலையில்லாதது என்பதை உணர்ந்து நம்முடைய ஆசைகளைத் துறந்து வாழப் பழகுவது இவை எல்லாவற்றையும்விட மிக இனிமையானது.

துக்கடா

  • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் நிறைவாக, ‘அமைதி’
  • ‘அமைதி’ என்ற ’ரச’த்துக்கு வெவ்வேறு அர்த்தங்கள் / கோணங்கள் / விளக்கங்களைச் சொல்லலாம். நிம்மதியான வாழ்க்கை என்ற அர்த்தத்தை நான் எடுத்துக்கொண்டு இந்தப் பாடலைத் தேர்வு செய்திருக்கிறேன்
  • ’இனியவை நாற்பது’ பாடல்கள் அனைத்தையும் உரையுடன் வாசிக்க –> http://goo.gl/5vpon
  • இன்றைய வார்த்தை – மாணுதல் = மாண்பு / பெருமை (’மாணா’ என இன்றைய பாட்டில் வருவது இதன் எதிர்ப்பதம்)
  • உதாரணங்கள்:
  • 1. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா / உவகையும் ஏதம் இறைக்கு – திருக்குறள்
  • 2. மாணா உரையாள் தானே தரும் – கம்ப ராமாயணம்
093/365
This entry was posted in அறிவுரை, இனியவை நாற்பது, நவரசங்கள், Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s