யானையை இழுத்த எலி!

மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்

பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார்

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ

எலி இழுத்துப் போகின்ற(து) என்!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: காஞ்சிபுரத்தில் விநாயகர் உற்சவம். பெருச்சாளி மூஞ்சூறு வாகனத்தில் உலா வந்தார் பிள்ளையார். அதைப் பார்த்த காளமேகம் வியப்போடு பாடுகிறார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

உலகத்துக்கே முதல்வனான சிவபெருமானின் ஆயுதம் ‘மழு’, ’முராரி’ எனப் புகழ் பெற்ற திருமாலின் ஆயுதம் திருச் சக்கரம், பிரமனின் ஆயுதம் கதை…

இப்படி மும்மூர்த்திகளும் ஆளுக்கு ஒரு பெரிய ஆயுதம் வைத்திருந்து என்ன புண்ணியம்? பெரிய, வலிமை மிகுந்த யானையை இங்கே ஓர் எலி இழுத்துக்கொண்டு செல்கிற ஆச்சர்யத்தைப் பாருங்கள், இதை அவர்களால் தடுக்கமுடியவில்லையே!

துக்கடா

 • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது எட்டாவது, வியப்பு!
 • இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்க்கும்போது கடவுளை இழிவுபடுத்துவதுபோல் இருக்கும். ஆனால் உண்மையில் இதுவும் ‘பக்தி’ப் பாடல்தான். இழிவுபடுத்துவதுபோல் புகழ்வதை ‘நிந்தாஸ்துதி’ என்பார்கள். இந்தவகையில் காளமேகம் நிறையப் பாடல்கள் எழுதியுள்ளார்
 • இதற்கு நேர் எதிராக, புகழ்வதுபோல் இழிவுபடுத்துவதும் இலக்கியத்தில் உண்டு, ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’
 • இன்றைய வார்த்தை ‘வாரணம்’ = யானை
 • உதாரணங்கள்:
 • 1. வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து – நாச்சியார் திருமொழி
 • 2. வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில் – அகநானூறு
092/365
This entry was posted in காளமேகம், தனிப்பாடல், நவரசங்கள், பிள்ளையார். Bookmark the permalink.

2 Responses to யானையை இழுத்த எலி!

 1. mbell1983 says:

  பெருச்சாளி என்று சொல்லலாமா? நான் அறிந்த வரையில் வினாயகனின் வாகனமாக “மூஞ்சுறு ” -ஐ சொல்வதுண்டு!

 2. என். சொக்கன் says:

  அப்படிக் குறிப்பிட்டது தவறுதான் நண்பரே. மன்னிக்கவும். திருத்திவிட்டேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s