தொழுது அழுது உள்ளம் நெக்கு

கிளியனார் கிளவி அஞ்சேன், அவர் கிறி முறுவல் அஞ்சேன்,

வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்

துளி உலாம் கண்ணர் ஆகித் தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு

அளி இலாதவரைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சும் ஆறே!

நூல்: திருவாசகம் (அச்சப்பத்து #3)

பாடியவர்: மாணிக்கவாசகர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கிளி போல் பேசுவோரின் கொஞ்சுமொழியைக் கேட்கும்போது எனக்குப் பயம் இல்லை, அவர்களுடைய வஞ்சகமான புன்சிரிப்பைப் பார்க்கும்போதும் அச்சம் இல்லை.

வெண்மையான திருநீறில் மூழ்கிய மேனியை உடைய சிவபெருமானின் திருவடிகளைச் சரணடைந்து, கண்களில் நீர்த்துளிகள் பொங்கத் தொழுது, அழுது, உள்ளம் நெகிழ்ந்து கனிந்துபோகாதவர்களைப் பார்த்தால்தான் நான் மிகவும் அஞ்சுகிறேன்.

துக்கடா

  • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது ஏழாவது, பயம்!
  • மாணிக்கவாசகரின் ‘அச்சப்பத்து’ முழுவதுமே இதுபோன்ற ‘பய’ங்கள் நிறைந்துள்ளன. அவற்றை உரையுடன் இங்கே வாசிக்கலாம் –> http://goo.gl/xgQcl
  • இன்றைய திருவாசகப் பாடலை இளையராஜா இசையில், குரலில் கேட்க: (4வது நிமிடத்தில் தொடங்கி)
  • இதே பாடலை ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில் கேட்க: (1:08 நிமிடத்தில் தொடங்கி) –> http://www.raaga.com/player4/?id=58370 (இந்தச் சுட்டியை அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி)
  • இன்றைய வார்த்தை: அளி = அருள் செய் / இரக்கம் / கருணை காட்டு / (Not-so-rare பயன்பாடு) கொடு
  • உதாரணங்கள்:
  • 1. கொடை, அளி, செங்கோல், குடிஓம்பல் நான்கும் உடையான் ஆம், வேந்தர்க்கு ஒளி – திருக்குறள்
  • 2. அளிநிலை பொறாது அமரிய முகத்தள் – அகநானூறு
  • நாளைக்குச் சரஸ்வதி பூஜை என்பதால் எதையும் எழுதுவது ஆகாது. ஆகவே #365paa விடுமுறை 🙂 வியாழக்கிழமை சந்திப்போம்
091/365
Advertisements
This entry was posted in சிவன், திருவாசகம், நவரசங்கள், பக்தி, மாணிக்கவாசகர், Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தொழுது அழுது உள்ளம் நெக்கு

  1. aravind says:

    thanks for this.. i read this and listened to Illayaraja composing.. cant explain in words..

  2. Balu says:

    திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear… sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

    Online Books
    http://www.vallalyaar.com/?p=409

    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s