கீச்சுக் கீச்சு

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன்

கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்

பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தாக்கால்

கீச்சுக்கீச்சு என்னும் கிளி.

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: ஔவையார்

சூழல்: சோழன் சபை. அரைகுறை ஞானம் கொண்ட சில புலவர்கள் அலட்டலாகத் தங்களுடைய புகழைத் தாங்களே ‘பாடி’க்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த ஔவையாருக்குச் சிரிப்புதான் வந்தது. இந்தப் பாடலைப் பாடினார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

சிலர் வீட்டில் கிளி வளர்ப்பார்கள். அதற்கு நான்கைந்து வார்த்தைகளைச் சொல்லித்தந்து பழக்கப்படுத்துவார்கள். அதுவும் எந்நேரமும் அதே வார்த்தைகளைப் பேசியபடி உட்கார்ந்திருக்கும்.

ஆனால், இப்படி நில்லாமல் பேசுகிற கிளியின் முன்னால் ஒரு பெரிய பூனை வந்து நின்றால் அவ்வளவுதான். பேச்சையெல்லாம் மறந்து உயிர் பயத்தில் கீச்சுக் கீச்சென்று கத்த ஆரம்பித்துவிடும்.

அதுபோல, உண்மையான ஞானம் கொண்டவர்களைப் பார்க்காதவரை நாம் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் கத்தலாம். கற்றவர்கள் முன்னால் பணிவாக நிற்காமல் வாய் திறக்கக்கூடாது.

துக்கடா

 • நவராத்திரி நவரசப் பாடல் வரிசையில் இது இரண்டாவது, ஹாஸ்யம் – நகைச்சுவை!
 • ஔவையார் எப்போதோ பாடிய இந்தப் பாடல் சமகாலத்தில் யாரையேனும் குறிப்பிடுவதுபோல் தோன்றினால் அதற்குக் கம்பேனி பொறுப்பேற்காது 😉

086/365

Advertisements
This entry was posted in ஔவையார், கிண்டல், குறும்பு, தனிப்பாடல், நவரசங்கள், வெண்பா. Bookmark the permalink.

11 Responses to கீச்சுக் கீச்சு

 1. nvaanathi says:

  இந்தப்பாட்டை இங்கே சொன்னதிலேயே சில பல உள்குத்து இருக்கு. இதுல டிஸ்க்ளெய்மர் வேற.. 😉

 2. சமகால உரை வரைக. 😉

 3. “நீட்டோலை வாசியா நின்றான்” என்பது போல சிரிப்பான காட்சிகளை காட்டுவதில் பாட்டி ஒரு வல்ல வள்ளல்:)

  சமகாலத்தில் யாரையேனும் குறிப்பிடுவது போல் வாசகர்கள் கிசுகிசுத்தால் அதுக்கு மட்டும் கம்பேனி பொறுப்பேற்கும்!:))

 4. ரெண்டு வருஷம் முன்னாடி திடீர்னு ஒரு கற்றோர்சபைல எஸ்க்டெம்போரா பேச வேண்டிய சூழல். இந்த பாட்டை மேற்கோளா சொல்லி ஆரம்பிச்சேன்.

  அந்த அவையடக்கத்தை இங்கே ஜம்பம் அடிச்சிக்கிட்டு என் முதுகை நானே தட்டிக் கொடுத்துக்கறேன் 🙂

 5. GiRa says:

  நல்ல பாடல். நகைச்சுவையில் நம் புலவர்கள் திறமைசாலிகள்தான். நிறைய பாடல்களை எடுத்துச் சொல்லலாம்.

  இந்தப் பாடலை எழுதிய ஔவை பிற்கால ஔவையாக இருக்கலாம். இவருடைய பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் தனியாக இருக்கிறது. பின்னொரு ஔவையின் பாடல்கள் இன்னொரு பகுதியாக இருக்கிறது.

  இந்தப் பாடலை எழுதிய ஔவை கம்பருக்குச் சமகாலத்தவராக இருந்திருக்க வேண்டும் என்று திரட்டு சொல்கிறது.

  எந்த ஊர் என்று கேட்ட சோழனுக்கு நொந்தேன் என்று பாட்டெழுதியிருக்கிறாள். காவிரி சூழ் நாடா என்று சிறிய கிண்டலும் உண்டு.

  சோழன் கம்பன் பாட்டை வியந்ததற்குப் பாடியதாகக் குறிப்போடு இன்னொரு பாட்டும் உள்ளது.
  விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
  விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
  பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் – அவர்கவிதை
  நஞ்சேனும் வேம்பேனும் நன்று

  கம்பனைப் போலக் காப்பியம் பாட முடியுமா என்று கேட்டதற்குத்தான் வான்குருவியின் கூடு பாடலைப் பாடினார் என்று நூல் கூறுகிறது.

  கம்பரும் கூத்தரும் நன்னிலையில் செழிப்பாகத்தான் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்கள் இருந்த பொழுதும் பாண்டி நாட்டுப் புகழேந்தி சோழநாட்டில் தன்னை நிலைநாட்டினான். வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி. அவன் புகழ் ஏந்திதான் நாமும் தமிழ் கற்க வேண்டும்.

 6. அப்போதே சொல்ல நினைத்து மறந்து போனேன்!
  “தனிப் பாடல்கள்”-ன்னாலே, தமிழ் பயில்வோர் கொஞ்சம் விழிப்புடன் தான் படிக்கோணும்! ஏன்னா பல கதைகள் இவற்றின் மேல் ஏற்றப்பட்டிருக்கும் :))

  பொதுவா ஒட்டக் கூத்தர்-ன்னாலே ஏதோ ஒரு பெரிய வில்லன் போல் சித்தரிப்பது, பின்னாளில் Fashionஆகி விட்டது!:)
  அதுக்கேத்தாப் போல விறுவிறு கதை, ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்-பழமொழி, ஒரு song, ஒரு dance-ன்னு….சினிமா ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டாங்க ஒரு கூட்டம்!:) சினிமாவில் சொன்னதே “உண்மை”:)

  சொல்லப் போனால், புகழேந்தி, கூத்தருக்கு 100 ஆண்டு பிந்தியவர்! :))
  ஆனா நாம தான், Dramatic Effects குடுப்பதிலும், அடுக்கு மொழியிலும், “தரவு”-களை மறந்து விடுவோமே!
  நமக்கு எது “பிடிச்சிருக்கோ” அதான் வரலாறு! பிடிச்சது மாறிப் போச்சுனா, அப்போ தமிழும் ஆரியமாகிவிடும்:))
  —————-

  ஒட்டக் கூத்தர் பெருங் கவிஞர்! தேவி உபாசகர்! அவரு நாம நினைக்கற அளவுக்கெல்லாம் “வில்லன்” கிடையாது:)

  ரொம்ப வயசு வாழ்ந்தவர்! மூனு சோழ மன்னர்களைப் பார்த்தவர்! = விக்கிரம சோழன்,குலோத்துங்க சோழன் II,இராசராச சோழன் II = மூவர் உலா பாடியவர்!
  என்னா, கொஞ்சம் வெறி, ஓவர் கெத்து காட்டக் கூடியவர்!

  மத்தபடி புலவர்களை/ புகழேந்தியை, ஒட்டக் கூத்தர் சிறையில் அடைச்சாரு, தப்பாப் பதில் சொன்னவங்களைத் தூக்குல ஏத்துனாரு! புகழேந்தியை அரங்கேற்றத்தில் கேள்வி கேட்டு Torture குடுத்தாரு = எல்லாம் பின்னாள் புலவர் கப்சா:)

  புகழேந்தி, இவருக்கு 100 வருசம் பின்னாடி!
  அபிதான சிந்தாமணி போன்ற நூல்களும், மூவருலா சோழர் காலமும், புகழேந்தி பாடும் மன்னனான சந்திரன் சுவர்க்கி/கொற்றண்டை-யின் காலத்தை வச்சிப் பார்த்து அறிஞர்கள் கால நிர்ணயம் செய்துள்ளனர்!
  ——————–

  ஒட்டக் கூத்தர், கம்பன் காலமும் ஏறக்குறைய ஒன்றே!
  ஆனா கூத்தர் = மூத்தவரு!
  கம்பன் = இளையவரு!
  ரெண்டு பேருக்கும் தமிழ்ப் புலமை அளவிலே சிறுசிறு போட்டி/பிணக்குகள் உண்டே தவிர, தனக்குள்ள அரசகுரு அந்தஸ்தால், கம்பனை வாழவிடாமத் துரத்தினாரு என்பதெல்லாம் “செவிவழிக் கதைகளே”:)

  என்ன, கூத்தருக்குக் கொஞ்சம் சமய வெறி! குலோத்துங்கன், தில்லைப் பெருமாளைக் கடலில் போட்டு மூழ்கடித்ததை, மூவர் உலாவில், சற்று “பெருமையோடு” பாடிக்குவாரு:))
  ஆனா, அதுக்காக, அவர் தான் மன்னனை அப்படித் தூண்டினாரு என்பதற்கெல்லாம் ஆதாரம் இல்லை!

  எதுவாயினும், கூத்தரும், ஒரு கவிச் சக்கரவர்த்தியே!
  என்ன, அவர் வயதும், ஓவர் கெத்தும், கொஞ்சம் மமதையும், அவருக்கு எதிராப் போயிருச்சி! பல செவிவழிக் கதையும் கெளம்பிருச்சி:)
  மற்றபடி, கூத்தரின் நூல்கள் = உத்தர காண்டம், தக்கயாகப் பரணி, மூவருலா, ஈட்டி எழுபது…எல்லாம் நல்ல தமிழ் வளம் கொண்டவை!

  சுருக்கமாக: ஒட்டக் கூத்தர் = வில்லன் அல்லர்!:)

 7. வெண்பாவிற் “புகழேந்தி” என்ற பெரும் சிறப்பு கொண்ட கவிஞன்! = ஒட்டக் கூத்தர்/கம்பன் காலத்துக்குப் பிந்தியவன்!
  கம்பனின் வரிகளை அப்படியேவும் எடுத்தாளுவார் புகழேந்தி!

  நள வெண்பா என்னும் காவியம், கம்பன் காவியத்துக்கு இணையானது!
  ஏனோ, இராமன் வணங்கப்படுபவன் ஆதலால், இராமாயணம் பிரபலமாக உள்ளதே தவிர…
  மனித-குண நலன்களால் நளன்-தமயந்தி காவியம், காதலர்க்கெல்லாம் ஒரு கொடுப்பினை! படிப்பினை!

  மத்தபடி ஒட்டக்கூத்தர் – ரெட்டைத் தாழ்ப்பாள் – புகழேந்தி லடாய் எல்லாம் வரல்-ஆறு அல்ல! வராதலாறு:))
  ——————-

  மேலும், புகழேந்தி, நம்மாழ்வார் என்னும் மாறனைப் பாடியே, தன் காவியம் = நள வெண்பாவைத் துவக்குகிறார்!
  அதன் பின்பே திருமால், சிவபிரான், முருகப்பெருமான் என மூவரையும் பாடுகிறார்!

  மறைத்து வைக்கப்பட்ட வேதத்தை, அனைவரும் அறிய, தமிழிலே செய்தமை…அப்போதைய நாளில் பலரும் போற்றினர்! சிவச் செல்வரான இடைக்காட்டுச் சித்தரே, திருவாய்மொழிக்கு “தமிழ்வேதம்” எனப் பெயர் தந்தவர்! அதே மரபை ஒட்டி, புகழேந்தியும் புகழ் ஏந்துகிறார்!

  மாமகிழ் மாறன்புகழாம் வண் “தமிழ்வேதம்” விரித்த
  மாமகிழ் மாறன்தாள் மலர்
  என்பது நளவெண்பா பாயிரம்!
  “மல்லிகையே வெண் சங்காய் வண்டூத” – என்ற நளவெண்பாவின் வரியும் மிக்க புகழ் மிக்கது!

 8. சுருக்கமாக:

  1. ஒட்டக் கூத்தர் – புகழேந்தி லடாய் எல்லாம் “கதைகளே”!

  2. தனிப் பாடல்களைப் பாடல் சுவைக்காக மட்டும் படித்தாலே போதும்! அதன் கதைகள் = நம்பத் தகுந்தவை அல்ல!

  3. இந்தத் தனிப்பாடல் ஒளவை, வேறு ஒளவை….
  வெண்பாவும் சற்று “லோக்கலாகவே” இருக்கும்:)
  கூத்தன்/கம்பன் காலத்தில் இந்தப் பிற்கால ஒளவை ஒரு சிறு புலவராக இருக்க வாய்ப்புண்டே தவிர, பெரிதாக எதையும் அறுதி இட முடியாது!

 9. GiRa says:

  தனிப்பாடல் பற்றிப் பேசியவர், இந்த ஔவை பல ஔவைகளில் ஒருவர் என்றுதான் சொல்லியிருக்கிறார். கூத்தரையொன்றும் சொல்லவில்லையே. குட்டிக் குடமுருட்டல்.

 10. Balu Natarajan says:

  அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
  அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/

  Please follow

  (First 2 mins audio may not be clear… sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s