அஞ்சாதே

குவளை நாறும் குவை இரும் கூந்தல்

ஆம்பல் நாறும் தேன் பொதி துவர் வாய்

குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன

துண் பல் தித்தி, மாஅயோயே

நீயே, ‘அஞ்சல்’ என்ற என் சொல் அஞ்சலையே

யானே, குறுங்கால் அன்னம் குவவு மணல் சேர்க்கும்

கடல் சூழ் மண்டலம் பெறினும்,

விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே!

நூல்: குறுந்தொகை (#300)

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்

சூழல்: குறிஞ்சித் திணை – காதலன் தன்னைப் பிரிவானோ என்று காதலி வருந்துகிறாள், அவன் அவளுக்கு உறுதியும் ஆறுதலும் சொல்கிறான்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

குவளையின் மணம் வீசுகின்ற வளமான, கருத்த கூந்தல், ஆம்பலின் மணமும் தேனின் சுவையும் பொதிந்து சிவந்த வாய், ஆழமான நீரில் மலர்ந்த தாமரைப் பூவின் மகரந்தத்தைப் போல் சிறிய பல தேமல் புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டவளே,

நான் உன்னைப் பிரிவேனோ என்று நினைத்து நீ அஞ்சவேண்டியதில்லை. குறுகலான கால்களை உடைய அன்னப் பறவைகள் நிறைந்த மணலைக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த நில மண்டிலம் மொத்தமும் எனக்குக் கிடைத்தால்கூட, நான் உன்னைப் பிரியமாட்டேன். கவலைப்படாதே!

துக்கடா

 • நவராத்திரியை முன்னிட்டு இன்றுமுதல் 9 நாள்களுக்கு #365paa வரிசையில் ‘நவரச’ப் பாடல்கள் இடம்பெறும். முதலாவதாக இன்று, சிருங்காரம்!
 • ’மாமை’ என்பது மாந்தளிர் நிறம், பொன் நிறம், ____ நிறம் (உங்களுக்குப் பிடித்தவரின் நிறத்தை நிரப்பிக்கொள்ளவும் 😉 )
 • இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகளைப் படிக்கும்போது ‘இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே’ என்ற ஆழ்வார் பாசுரம் உங்கள் நினைவுக்கு வந்தால், தப்பில்லை – எல்லாம் காதல்தானே 🙂
085/365
Advertisements
This entry was posted in காதல், குறிஞ்சி, குறுந்தொகை, நவரசங்கள், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம். Bookmark the permalink.

6 Responses to அஞ்சாதே

 1. Venkat says:

  Paadalum, porulum arumai..

  ippodhu purigiradhu, sinimaa kavigal eppadi paadal ezhudhugiraargal ena.. 🙂

  AANAAL, navarathiri bhakthikku undaana naatkal. ingu poi srungaaramaa ? hmmm…

 2. nvaanathi says:

  இந்தப்புலவருக்கு பெயர்க்காரணம் ஏதும் உள்ளதா? #ஆர்வம். 😉 #வடையைச் சாப்பிடச் சொன்னால், துளைகளை எண்ணும் கூட்டம் இது.

  • ஆதன்+தந்தை = ஆதந்தை = ஆந்தை
   தன் மகனின் பேரால் அறியப்பட்ட சங்கக் கவிஞரு இவரு! சிறைக்குடி இவரு சொந்த ஊரு!
   பறவைகள்-காதல் பற்றி ரொம்ப பாடுவாரு!:)

   வடையின் துளைகளை இப்போ எண்ணியாச்சா வானதீ?:)

 3. GiRa says:

  எடுத்தாழல் எல்லாப் பொழுதிலும் உண்டு. முன்ன எங்கயிருந்து எடுத்தோம்னு சொல்லீருவாங்க. இப்பல்லாம் தாங்களே எழுதியதுன்னு சொல்லீருவாங்க. ஆழ்வார் குறுந்தொகை படிச்சாரான்னு தெரியலை. ஆனாலும் ஒப்புமை அழகு 🙂

 4. ஆழ்வார்களும் அருணகிரியும் சங்க இலக்கியத்தில் கை தேர்ந்தவர்கள், மனந் தேர்ந்தவர்கள்!
  பல சங்கத் தமிழ் வரிகளை, திருக்குறளை, அப்படியே எடுத்தாளுவார்கள்!

  கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்,
  இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்,
  கொன்றை அம் தீங்குழல் கேளோமோ தோழீ…
  = சிலப்பதிகார குரவைக் கூத்து

  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி (ஆண்டாள் திருப்பாவை:24)
  ———————

  ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
  நீராக நீளும்இந் நோய் – திருக்குறள், காமத்துப்பால்

  ஊரவர் கெளவை எரு விட்டு
  அன்னைசொல் அதனை நீர்மடுத்து – நம்மாழ்வார்
  ———————-

  முதலாழ்வார் மூவரும் சங்கம் மருவிய காலத்தவர்…அவர்கள் பாடல்களிலும் சங்கச் சொல்லாட்சியின் வீறு இருக்கும்! சங்க கால உரிப்பொருள்கள் பலவும் பயின்று வரும்…

  சமண இலக்கியம், புத்த இலக்கியம் என்ற பேதமோ, சமணக் காழ்ப்போ இல்லாது…சிலம்பு, மணிமேகலை வரிகளையும், கோதை அப்படியே கையாளுவாள்!
  அப்படிக் கையாளணும்-ன்னா அந்தப் புத்தகங்களைப் படிச்சிருக்கணும் அல்லவா?:)

  இப்படிச் சங்க இலக்கியத்தில் தோய்ந்ததில் தானோ என்னவோ…
  தான் பாடிய நூலுக்கு, “சங்கத் தமிழ் மாலை” முப்பதும் தப்பாமே-ன்னு பேரும் வைத்தாள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s