சீர் இளமைத் திறம் வியந்து

பல்உயிரும் பல உலகும்

….படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்

எல்லைஅறு பரம்பொருள்முன்

….இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும்

….கவின்மலையாளமும் துளுவும்

உன் உதரத்து உதித்து எழுந்தே

….ஒன்று பல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக்கு

….அழிந்து ஒழிந்து சிதையா உன்

சீர் இளமைத் திறம்வியந்து

….செயல்மறந்து வாழ்த்துதுமே!

நூல்: மனோன்மணீயம்

பாடியவர்: சுந்தரம் பிள்ளை

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தமிழ் அன்னையே,

உன்னுடைய வயிற்றிலிருந்து கன்னடமும், மகிழ்ச்சி தரும் தெலுங்கும், அழகு நிறைந்த மலையாளமும், துளுவும் பிறந்து செழித்துக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் உன் இளமை குறையவில்லை. ஆரிய மொழியாகிய சமஸ்கிருதம்போல் தமிழ் வழக்கு ஒழிந்து சிதையவில்லை.

இங்கே பல உயிர்களும் பல உலகங்களும் திரும்பத் திரும்ப உருவாகி அழிந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், எல்லை இல்லாத பரம்பொருள் எப்போதும் ஒரேமாதிரி நிலைத்திருக்கிறது. அதுபோல்தான் நீயும். உன்னுடைய அழகிய இளமைத் திறத்தை வியக்கிறேன், செய்வதறியாது நிற்கிறேன், வாழ்த்துகிறேன்!

துக்கடா

 • ’நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் நமது அதிகாரப்பூர்வமான ’தமிழ்த்தாய் வாழ்த்து’ப் பாடல் ‘மனோன்மணீயம்’ நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று பலருக்குத் தெரியும். ஆனால் அதில் நீக்கப்பட்ட பகுதி ஒன்று உண்டு என்பது தெரியாது. அதுவே இன்றைய #365paa

082/365

Advertisements
This entry was posted in தமிழ், நாடகம், மனோன்மணீயம், வாழ்த்து. Bookmark the permalink.

6 Responses to சீர் இளமைத் திறம் வியந்து

 1. Excellent song! Aptly chosen as “தமிழ்த் தாய் வாழ்த்து”!

  எல்லைஅறு பரம்பொருள், முன்இருந்தபடி இருப்பதுபோல் = என்னவொரு உவமை!
  தமிழுக்கு, பரம்பொருளையே உவமை சொல்லுதல் தான் எத்தனை சிறப்பு!
  ————-

  ஒரு சின்னக் கதை:)

  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய நாடகத்தில், கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வரும் தமிழ்த் தாய் வாழ்த்தில், மொத்தம் இரண்டு பத்திகள்!
  * முதல் பத்தி தான் = நீராரும் கடல் உடுத்த = நாம் பள்ளி, அரசு விழாக்களில் எல்லாம் கேட்பது!
  * இந்த இரண்டாம் பத்தி…நல்லாத் தான் இருக்கு! ஆனால் சில பல காரணங்களுக்காக, இசையாக்கப் படவில்லை!

  1968 – உலகத் தமிழ் மாநாடு
  தேசிய கீதமான = ஜன கண மன போல,
  தமிழ்க் “கீதம்” ஒன்றும் வேண்டும்-ன்னு உலகத் தமிழ் மாநாட்டில், பல தமிழறிஞர்கள் விரும்பினர்!
  ஆனால் அதைச் செயல்படுத்துவதற்குள், முதலமைச்சர் அண்ணா இறந்து விட்டார்!

  பின்பு வந்த முதல்வர், திரு.மு.கருணாநிதி, அதைச் செயல்படுத்த முனைந்தார்!
  எப்படி, தேசிய கீதம், தாகூர் கவிதையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அதே போல், தேர்ந்தெடுக்க முனைந்தார்கள்!

  நாட்டுப் பண்ணுக்குப் போட்டிப் பண்ணாக யாரும் கருதி விடக் கூடாது என்று தமிழறிஞர்களாலேயே சொல்லப்பட்டது!

  இது நாட்டை வாழ்த்துவது போல், தமிழையும் வாழ்த்துவது மட்டுமே என்று சொல்ல…
  மனோன்மணீயம் நூலில் “தமிழ்த் தாய் வாழ்த்து”-ன்னே ஒன்னு இருக்கே, அதையே பயன்படுத்தினால் என்ன?-ன்னு பார்த்த போது, முதலமைச்சருக்கும் இந்தப் பாட்டின் அழகு மிகவும் பிடிச்சிப் போக….இதே தேர்வானது!

  ஆனால் இரண்டு பத்திகள் மிகவும் நீளம், ஒரே பத்தி-கம்பீரமான இசை என்பதே நோக்கம்!
  மேலும், இரண்டாம் பத்தியில், சம்ஸ்கிருதம் பற்றிய சில வரிகள் வருகின்றன!

  “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா”மல் இருக்கும் தமிழே-ன்னு வருகிறது!
  = இது உண்மை தான் எனினும், ஒரு சிலருக்கு “நெருடல்” ஏற்படலாம்! மூதறிஞர் இராஜாஜி-யும் இந்த வரிகள் வேண்டாமே என்று கருதினார்!

  எல்லாரும் சேர்ந்து பாட வேண்டிய பாட்டு = தமிழ்த் தாய் வாழ்த்து!
  ஒன்றை வாழ்த்த, இன்னொன்றைத் தாழ்த்தல் என்றுமே தமிழ் மாண்பு ஆகாது!
  பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே – இது தான் உண்மையான தமிழ் உள்ளம்!
  – “நீச பாஷை” என்றெல்லாம் தமிழ், எம்மொழியையும் ஒதுக்காது!

  அதனால்…..
  எல்லாருக்கும் பொதுவான அரசுப் பாடலில், இந்த வரிகளைத் தவிர்த்து விடலாம்-ன்னு,
  நாமக்கல் கவிஞர், டாக்டர் மு.வ, நீதியரசர் மு.மு. இஸ்மாயில் போன்ற சில தமிழறிஞர்கள் எடுத்துச் சொல்ல…
  முதலமைச்சரும் அதற்கு ஒப்புக் கொண்டார்!

  இரண்டாம் பத்தி தவிர்த்த, முதல் பத்தியே…
  = நீர் ஆரும் கடல் உடுத்த
  என்று, எல்லாரும் இசையுடன் முழங்கும் “தமிழ்த் தாய் வாழ்த்து” என்று ஆனது!

 2. மெல்லிசை மன்னர் MSVக்கு தேசிய விருது ஒன்னும் கிடைக்கலியே-ன்னு சிலர் கவலைப்படலாம்!
  ஆனா இந்த ஒரு பாட்டு – அவர் இசையமைத்த பாட்டு – இது ஒன்னே…காலத்துக்கும் அவர் பேர் தாங்கி நிற்கும்!

  சுசீலாம்மா, TMS குரலில்…கம்பீரமாக…எத்தனை முறை வேணும்ன்னாலும் கேட்கலாம்! ஆகா!

  இதுக்குப் பிறகு எத்தனையோ மாநாடு, செம்மொழி மாநாடு-ன்னு வந்துருச்சி! எத்தனையோ beat & music! ஆனா…”நீர் ஆரும் கடல் உடுத்த” போல மனசுல கம்பீரமா நிக்குதா?
  அதான்…இந்தப் பாட்டுக்கும் + இசைக்கும் ஆன மதிப்பு!!!

 3. MSV இதுக்கு மொத்தம் 21 ட்யூன் போட்டாராம்!

  இந்த இசை project கிருஷ்ணன் பஞ்சுவிடம் ஒப்படைக்கப்பட்டது! இசையில், அப்போதைய முதலமைச்சர் தலையிடவில்லை! ஆனா, MSVக்கு ஒரே ஒரு குறிப்பு மட்டும் சொல்லப்பட்டது!
  = “ஜன கண மன”-க்கு எப்படியொரு மதிப்பு இருக்கோ, அப்படி வரணும் இசை!

  MSV லேசுப்பட்டவரா என்ன? மெல்லிசை மன்னர், “மெல்” இசையா இல்லாம, கம்பீர இசையாப் போட்டாரு!
  மொத்தம் 21 Tune!
  அதுல திரு. கருணாநிதி தேர்ந்தெடுத்துக் குடுத்தது இந்த ட்யூன்!:)

  பின்னாளில், MSV பேசும் போது, “நான் 21 tune போட்டாலும், முதன்முதலில் என்ன போட்டேனோ, அதைத் தான் முதல்வரும் தேர்ந்தெடுத்து இருக்காரு”-ன்னு சொன்னாராம்! ஆகா! = செய்வன திருந்தச் செய்! தோன்றிற் புகழொடு தோன்றுக! DIRFT (do it right, first time) :-))

 4. சுப இராமனாதன் says:

 5. ராதாகிருஷ்ணன் says:

  :))) நன்றி

 6. ‘ஆரியம்போல்…..’ என்பதை மட்டுமா எடுத்தார்கள்? ‘கன்னடமும் களிதெலுங்கும்…..’ என்பதைக்கூடத்தான் எடுத்தார்கள். காரணம் வெட்ட வெளிச்சம். தமிழர், தெலுங்கர், கன்னடர்….. சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்பதுதான்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s