வெண்ணெய் ஏன் உண்டாய்?

உண்டாய் உலகுஏழ் முன்னமே

….உமிழ்ந்து மாயையால் புக்கு

உண்டாய் வெண்ணெய்ச் சிறுமனிசர்

….உவலை யாக்கை நிலை எய்தி

மண்தான் சோர்ந்தது உண்டேலும்

….மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்

அண்டாவண்ணம் மண் கரைய

….நெய் ஊண் மருந்தோ, மாயோனே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (திருவாய்மொழி #2726)

பாடியவர்: நம்மாழ்வார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மாயோனே,

அந்தக் காலத்தில் ஒரு பெரிய வெள்ளம் வந்தது. அதில் ஏழு உலகங்களும் மூழ்கி அழிந்துவிடுமோ என்கிற நிலைமை வந்தபோது, நீ அந்த உலகங்களை விழுங்கிக் காப்பாற்றினாய். வெள்ளம் வடிந்தபிறகு, அவற்றைத் திரும்ப வெளியே உமிழ்ந்துவிட்டாய்.

பின்னர், நீ கண்ணனாக மனித அவதாரம் எடுத்தாய். ஆயர்ப்பாடியின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் நுழைந்து வெண்ணெயை அள்ளி அள்ளிச் சாப்பிட்டாய். ஏன்?

குழந்தைகள் மண்ணைத் தின்றால் ‘சோகை’ என்கிற நோய் வரும். நீ முன்பு ஏழு உலகங்களையும் உண்டு, உமிழ்ந்தபோது அதில் கொஞ்சம் மண் உன் வயிற்றிலேயே தங்கியிருக்குமோ? அதனால், இப்போது மனிதனாக இருக்கிற உனக்கும் அந்த நோய் வந்துவிடுமோ? அந்த மண் கரைவதற்கும், ‘சோகை’ நோய் உன்னை நெருங்காமல் தவிர்ப்பதற்கும் இந்த நெய் சோறுதான் மருந்தோ?

079/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், கண்ணன், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி. Bookmark the permalink.

11 Responses to வெண்ணெய் ஏன் உண்டாய்?

 1. மிக “ஜா”லியான கவிதை:)
  கவிஞருக்கும் கண்ணனுக்கும் நடக்கும் உரையாடல் கவிதை!

  //மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்//
  – கண்ணன் Beer எல்லாம் குடிப்பான் போல! Which one? = Black Lager or Pale Ale? Amstel or Heineken or Alesmith? :))

 2. இறைவன்: “என்ன மாறனே, என் குணம், செயல் இதெல்லாம் ஒமக்கு நல்லாத் தெரியுமே”

  ஆழ்வார்: “ஒம்ம செயலைத் தெரிஞ்சி எனக்கென்ன ஆவப் போது? அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது” 🙂

  இறைவன்: “சரி, என்னைப் பற்றி நானே சொல்கிறேன்! கேளுங்களேன்”

  ஆழ்வார்: “சரி சரி, சொல்லும்”:)

  இறைவன்: “நளிர்மதிச் சடையரும் நான்முகக் கடவுளும்,
  நில நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்,
  முழுவதும் அகப்படக் கரந்து,
  மத்து உறு கடை வெண்ணெய் களவினிலே
  உரல் இடை ஆப்பு உண்டு!”

  ஆழ்வார்: “சுத்தம்…ஒன்னும் புரியல”:)
  —————-

  இறைவன்: “இருங்க! அவசரப்படாதீங்க! பிரளய காலத்தில் நான் மொத்த உலகமும் உண்டேன் அல்லவா? அப்போ கொஞ்சூண்டு மண்கட்டி மட்டும், மீண்டும் வெளி வராமல், என் வயிற்றுக்குள்ளேயே தங்கிருச்சி! ஒரே வயித்து வலி!!

  நல்ல மருத்துவத்துக்கு எதுக்கு அமேரிக்கா போவோணும்? அதான் பாரதத்துக்கு வந்தேன் கண்ணன் அவதாரமாய்!

  அனாசின், க்ரோசின், ஜெலுசில் மாதிரி சாதா மருந்து=வெண்ணெய்!
  கொஞ்சூண்டு தின்னவுடனேயே, அது வயிற்றில் இளகி, மண்ணைக் கரைச்சிருச்சி”
  —————-

  ஆழ்வார்: “டேய்…ஒரு வரிக்கு பத்து பொய் சொல்லுற? நீ தின்னது கொஞ்சூண்டு வெண்ணையா?
  உலகம் உண்டது எப்போ? கண்ணன் அவதாரம் எப்போ?
  அது வரைக்கும் வயித்து வலியிலேயே தான், மீன் to இராம அவதாரம் வரை எடுத்தியோ?”

  இறைவன்: “ஏய், என்ன என்னை மடக்குறீரு?”

  ஆழ்வார்: “பொய்யனே எம் ஐயனே!
  பிரளயத்துல தின்ன மண்ணுக்கும், கண்ணன் வெண்ணைய்க்கும் என்னா connection?
  தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டுச்சா?”:))

  இறைவன்: “ஆகா! இப்படி மடக்கிட்டீரே! சரி, நீரே சொல்லும்! நான் எதுக்கு வெண்ணைய் தின்னேன்?”….

 3. இறைவனின் விளக்கத்தையே மறுத்து, ஆழ்வார் சொன்ன காரணம்:
  >ஆச்ரயித்த சிறுமனிசர்களின் சம்பந்தம் பெற்ற வஸ்துவே உனக்குத் தாரகமாதலால், வெண்ணையை உண்டாயேயன்றி வேறு காரணங்களாக நீவிர் நவிலப்போதுதல் பரமஹாஸ்யம்<

  – ஏதாச்சும் புரியுதா? இது திருவாய்மொழி ஆறாயிரப்படி ஈட்டில் உள்ள வரிகள்!:) அதாச்சும், என்ன-ன்னா…

  எளியவர்களான ஆயர்ச்சேரி மக்களோடு (சிறுமனிசர்) உறவாடவே உனக்கு ஆசை!
  அதனால் அவர்களின் அடிப்படைப் பொருளான வெண்ணையைத் தின்றாய்! அதுவும் மாட்டிக் கொள்வது போல் யாராச்சும் திருடிச் சாப்பிடுவாங்களா?

  வேண்டுமென்றே இவ்வாறு நீ செய்ய காரணம்:
  இது நாள் வரை, ஏதோ ஒரு நோக்கம் வச்சிக்கிட்டு அவதாரம் செய்தாய்….பூமியை நிலைநிறுத்த, குழந்தை நம்பிக்கையை மெய்ப்பிக்க, உலகு அளக்க, இராகவனாய் ரொம்பத் தான் அரச வீறாப்பு காட்ட….

  ஆனால், அதெல்லாம் எதுவுமே இல்லாமல், "ஜா"லிக்காக, எளிய வாழ்க்கைக்காக, எளிய மக்களோடு ஒட்டி உறவாட அல்லவா, கண்ணனாய் வந்தாய்?
  இந்த எளியோர் உறவு தான் = வெண்ணெய் திருடக் காரணம்
  நீ சொல்லுற மத்த காரணம் எல்லாம் பரம ஹாஸ்யம்=செம காமெடி!…ன்னு ஆழ்வார் பாடுகிறார்!
  —————————-

  மனிசர்க்கு ஆகும் பீர்
  = பீர்-ன்னா வெள்ளைத் திரவம்! (அல்லது வெள்ளைப் பட்டுப் போதல்…இரத்த சோகை-ன்னு சொல்வோம்-ல்ல? சிவப்பே இல்லாம, வெள்ளைப்படுதல்)
  = பீர்+க்கங் காய் கூட, இதே வெள்ளைப் பால் காய் தான்!

  = வெள்ளைத் திரவ Beer கூட இருக்கு! Black Lager போல வண்ணமின்றி, Pale Ale Beer கூட இருக்கு! ஒரு வேளை அதை ஒரு கண்ணபிரான் குடிக்கலாம்!:)))

 4. நம்மாழ்வார் பாசுரம், 365paa-வில் இதான் முதல் முறை-ன்னு நினைக்கிறேன்! நன்றி @nchokkan!

  திவ்யப் பிரபந்தம் = அருளிச் செயல்
  விஷ்ணு = திருமால்
  எனக்காக…கொஞ்சம் label-இல் மாத்துங்களேன்! Plz:)

 5. பாசுரம் = பா+சுரம் (கவிதை+இசை)
  இப்படி அதுக்குள்ள ரெண்டுமே இருக்கும்!

  ஆழ்வார்களின் பாசுரங்களைத் ஒன்னாத் தொகுத்தவர்கள், அவற்றுக்கு “அருளிச்செயல்”-ன்னு பேரு தான் முதலில் வச்சாங்க! ஆனா கோயில்களில் எடுபடலை!

  1000 yrs back..சம்ஸ்கிருதம் மட்டுமே ஆலய பூசைகளில் கோலோச்சிய நாட்கள்!
  ஆழ்வார்களின் தெய்வத் தமிழை உள்ளே நுழைக்கப் பெரும் போராட்டம்! அப்படி நுழைக்க முயற்சித்த இராமானுசருக்கு உணவில் விஷமே வைக்கப்பட்டது!

  அர்ச்சகர்களின் ஆதரவையும் பெற வேண்டி,
  * அதுக்கு “திவ்ய பிரபந்தம்”-ன்னு பேரு குடுத்து,
  * ஒரு சம்ஸ்கிருத மந்திர effect குடுத்து,
  * திருவரங்கம் கோயில் சாவிகளைச் சாதுர்யமாக வாங்கி….
  ஒரு வழியாத் தமிழ் கருவறைக்குள் நுழைந்தது, 1000 yrs back!

  இதுக்காக வச்ச பேரு=“திவ்யப் பிரபந்தம்”! அதுவே நாளடைவில் நின்று விட்டது!
  ஆனால் அதன் மெய்யான பெயர் = “ஆழ்வார் அருளிச்செயல்”!!!

  ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி
  தாழ்வாது மில்குரவர் தாம்வாழி – ஏழ்பார்
  உய்ய-அவர் உரைத்த வைகள் தாம்வாழி
  செய்யமறை தன்னுடனே சேர்ந்து! – Thatz how even the compilation வெண்பா calls it = “அருளிச்செயல்”!

 6. பல ஆழ்வார் பாசுரங்கள் இருந்தாலும், நம்மாழ்வார் என்னும் காரிமாறன் கவிதைக்கு மட்டும் ஒரு தனித்த ஏற்றம் = தமிழ் வேதம்!

  இது குறித்து, எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்ட என்னோட விளக்கம்= http://www.jeyamohan.in/?p=13066

  திருவாய்மொழி மட்டுமே = திராவிட வேதம், தமிழ் வேதம் என்று பேசப்படுகிறது!

  இப்படி அதுக்கு “தமிழ்வேதம்”-ன்னு பேரு வைச்சவர், யாரோ ஒரு வைணவர் அல்ல!
  சிறந்த சிவநெறிச் செல்வர், பெரும் சித்தரான = இடைக்காட்டுச் சித்தர்!

 7. அது இன்னா, திருவாய்மொழி மட்டும் தமிழ்வேதம், மத்த “புஸ்தகம்” எல்லாம் கிடையாதா?-ன்னு சிலர் கேப்பாய்ங்க:)
  சொல்லப்போனா, மற்ற ஆழ்வார் பாசுரம் கூட, தமிழ்வேதம் கிடையாது! Only Thiruvaaimozhi! Why?

  * வடமொழி வேதங்கள், அந்தணர்-க்கு மட்டுமே உரிமை!
  * முதல் மூன்று வருணத்தார் மட்டுமே காதுபடக் கேட்கலாம்!
  * தாழ்த்தப்பட்ட மக்கள், நாலாம் வருணம்், காதால் கேட்கக் கூடக் கூடாது
  * பெண்கள், அது அந்தணப் பெண்களாயினும், ஓதவே கூடாது….
  ———————–

  இப்படியெல்லாம்…விதிச்சி வைச்சிருந்த காலத்தில்…
  * பல இறைச் சூட்சுமக் கருத்துக்கள் எல்லாருக்கும் சென்று பயன்பட வேணும்-ன்னு நோக்கத்தில்…
  * முதன் முதலாக, வேதம் தமிழாக்கிய முயற்சியே = திருவாய்மொழி

  * இதைத் துணிஞ்சி செஞ்சது, நாலாம் வருணத்து தெக்கத்திச் சீமை இளைஞன் = நம்மாழ்வார்! 32 வயசு வரையே வாழ்ந்தவர்!
  * வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்-ன்னு, சிவச் செல்வர்களான சித்தர்கள் கூடக் கொண்டாடிய நல்ல நோக்கம்!
  ———————-

  நாமளே “தமிழ் வேதம்”-ன்னு சொல்லிக்கிட்டாப் போதுமா?
  இதன் பெருமையை லேட்டாக உணர்ந்து கொண்ட, வடமொழி வல்லுநர்களும்…ஒரு வழியா…இதைத் “திராவிட வேதம்”-ன்னு ஒத்துக்கிட்டாங்க! ஒரு சுலோகமும் எழுதி, ஒத்துக்கிட்டாங்க!:)))

  பக்தாம்ருதம் விஸ்வ ஜனானு மோதனம்
  சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
  சகஸ்ர சாகோ உபநிஷத் சமாம்யகம்
  நமாம்யஹம் “திராவிட வேத” சாகரம்!!!

  இப்படி இரும்பு-மண்டையரான அவங்களயே ஒப்புக்க வச்சது தான் வியப்பு:))
  ———————

  வேதம் போலவே, திருவாய்மொழியும் பொதுவாத் தான் இருக்கும்…முதல் பாகத்தில்! “நாரணன்”, “திருமால்”-ன்னு சாமி பேரெல்லாம் வரவே வராது!
  “இறைவன்” என்று பொதுவா மட்டுமே பேசி…பல வேதக் கருத்துக்களை எடுத்து வைத்து…

  அப்பாலிக்கா…சங்கத்தமிழ் அகப்பாடல்களாக, தலைவி-தலைவன்-ன்னு வரும்போது தான், “மாயோன்”, “திருமால்” என்ற பெயர்களே வர ஆரம்பிக்கும்!

  இப்படி, எல்லாருக்கும், சாதி/மத பேதமின்றி, வேதம் சென்றடைய வேணும் என்ற “முதல் முயற்சிக்கு” மதிப்பளிக்கத் தான் = திருவாய்மொழி = தமிழ் வேதம்!!! சொன்னது இடைக்காட்டுச் சித்தர்!

 8. திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்!
  திருவாய்மொழிக்கு உருகாதார், ஒரு வாய்மொழிக்கும் உருகார்!!

 9. Sundar Vel says:

  சொக்கன் ஸார் ”கடித்துக் கரும்பினை கண் தகர நூறி
  இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும்” என ஒரு நாலடியார் பாடல் உண்டு. அதற்கும் பொருள் எழுதுங்களேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s