முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: காளமேகம்
சூழல்: விகடராமன் என்ற பந்தா பேர்வழி, ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தான். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு, ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது, மூன்று பேர் வேண்டும்.
அப்போதும் அந்தக் குதிரை ஓடிவிடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் தள்ளவேண்டும்.
இப்படி ஐந்து பேரால் ‘ஓட்டப்படும்’ அந்தக் குதிரை, அதிவேகமாக ஓடும், மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும்!
துக்கடா
- ’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்
- இதேபோல் சாண், முழம், சிறுகோல், கோல், பெருங்கோல் என்று இன்னும் பல தமிழ் நீட்டல் அளவுகள் உண்டு. அவற்றைப்பற்றி இங்கே படிக்கலாம் –> http://ezilnila.com/archives/1329
078/365
எனக்கு மட்டும் தான் இந்தக் குதிரையைப் பார்த்தால் ஆபீஸ் ப்ராஜெக்ட் ஞாபகம் வருதா?
this vikata raman kuthirai reminds me of some recurring meetings!
to front push = 3
to back push = 2
and for every meeting = no value added talk, except nice coffee from starbucks:)
eod, task complete = 0.01%,
worse than last meeting, but better than next:)