பித்தா!

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!

நூல்: தேவாரம்

பாடியவர்: சுந்தரர்

சூழல்: நேற்றைய #365paa காண்க

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பித்தா, பிறை சூடியவனே, பெருமானே, அருளாளனே, பெண்ணை நதியின் தென்கரையில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருள்துறையில்எழுந்தருளியிருக்கும் என் தந்தையே,

என் மனத்தில் நீ குடியேறிவிட்டாய், உன்னை எந்த வகையிலும் மறக்காதவனாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.

நான் என்றென்றும் உன் பக்தன்தான். ஆனால் விதிவசத்தால் அதை மறந்தேன். ‘நான் உனக்கு அடிமை இல்லை’ என்று வீம்பாகப் பேசினேன். நீ யார் என்று உணர்ந்தபிறகு, இனி அப்படிச் சொல்லமுடியுமா?

துக்கடா

 • நேற்றைய, இன்றைய #365paa காட்சிகளைத் திரை வடிவத்தில் பார்க்கவும், இன்றைய பாடலை இசை வடிவத்தில் கேட்கவும் இங்கே செல்லலாம் – ‘திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்திலிருந்து வரும் காட்சிகள் இவை:
 • Part 1 –> http://www.youtube.com/watch?v=anm0FHSR7RM
 • Part 2 –> http://www.youtube.com/watch?v=wa73TTQoUdE
 • Part 3 –> http://www.youtube.com/watch?v=P9MIsaVgU3o
 • ‘பித்தா! பிறைசூடி!’ பாடலை வேறு வடிவங்களில் கேட்கச் சில இணைப்புகள்:
 • டி. எம். சௌந்தர்ராஜன் குரலில் –> http://ww.smashits.com/thevaram/pitha-pirai-soodi/song-207318.html
 • திருத்தணி என். சுவாமிநாதன் குரலில் –> http://www.raaga.com/play/?id=44363
 • சேர்ந்திசை வடிவத்தில் –> http://www.youtube.com/watch?v=z67ah4gwAD8
 • இன்னும் உங்களுக்குத் தெரிந்த வேறு ஒலி வடிவங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், சேர்த்துவிடுகிறேன்

076/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சினிமா, சிவன், சுந்தரர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

17 Responses to பித்தா!

 1. amas32 says:

  You take so much effort for us to enjoy such beautiful poetry and at the same time instil the greatness of God through the Bhaava of Bhakthi. You will be richly rewarded.
  amas32

 2. G.Ragavan says:

  சுந்தரரின் இயற்பெயர் நம்பி ஆரூரன். இவருடைய தந்தையார் சடையனார். தாயார் இசைஞானியார். தமிழைப் போற்றும் அந்தணர் குடியில் பிறந்தார். ஆகையால்தான் அருமையான தமிழ்ப்பெயர்கள் அவர்களுக்கு.

  • “ஆலாலசுந்தரன்” என்பதே ஆதிப்பெயர்!
   தமிழ் கொழிக்கும் தென்பெண்ணை ஆற்றங்கரையில், பிறந்தவரல்லவா? அதான் தமிழ் கொஞ்சுகிறது பெயரிலும்=நம்பி ஆரூரர்!
   இவரை வளர்த்த குறுநில மன்னனும் அப்படியே! = நரசிங்க முனை அரையன்!
   திருமுனைப்பாடி நாட்டு மன்னன்! அருபத்து மூவருள் இவனும் ஒருவன்! சுந்தரரைத் தத்தெடுத்து வளர்த்தவன்!

 3. G.Ragavan says:

  திருமணக் கோலத்தில் இறைவன் தடுத்தாட்கொண்டதால் சுந்தரர் என்று பிற்காலப் பெயர் உண்டாயிற்று. இவருடைய பாடல்கள் திருப்பாட்டு என்றழைக்கப்பட்டன. பின்னாளில் அப்பர் பாடிய தேவாரம் என்ற பெயர் ஏற்றம் பெற்று சுந்தரரும் சம்பந்தரும் பாடியவை கூட தேவாரம் என்று அழைக்கப்பட்டன.

  • திருமுறை
   1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
   4,5,6=தேவாரம் (அப்பர் பெருமான்)
   7=திருப்பாட்டு (சுந்தரர்)
   8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)

   9=திருவிசைப்பா (சேந்தனார், கண்டராதித்தர் முதலானோர்)
   10=திருமந்திரம் (திருமூலர்)
   11=பிரபந்தம் (காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்…முதலானோர்)
   12=பெரிய புராணம்(சேக்கிழார்)
   ————————

   என்ன காரணமோ…அப்பர் பெருமான் மட்டுமே சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தார்!
   உடலால் உழைத்து தொண்டு செய்ததும் இவரே!

   படிக்காசு பெறுதல், முத்துப்பந்தல் பெறுதல், காதல்/காமத்துக்கு தூதுபோதல் போன்ற சொகுசான பலன்கள் எதுவும் இவருக்கு வாய்க்கவில்லை!

   ஈசனருளால், அதை ஈடுகட்டத் தானோ என்னவோ…
   காலப்போக்கில்…மூவர் பாட்டும்,
   இன்றைய தேதியில்…மற்ற எல்லார் பாட்டும் கூட…
   “தேவாரம்” என்னும் இவர் நூலின் பேராலேயே அடங்கி விட்டது!

   இன்னிக்கு
   தேவார/திவ்ய பிரபந்தம்-ன்னாலும்,
   தேவாரப் பயிற்சிப் பள்ளி-ன்னாலும்,
   தேவார இசை-ன்னாலும்,
   தேவார ஓதுவா மூர்த்திகள்-ன்னாலும்…
   …தேவாரம் = மொத்த திருமுறையும் குறிக்கும் குறிச்சொல் ஆகி விட்டது!

 4. பித்தா….

  சம்பந்தர், அப்பர், சுந்தரர்-ன்னு மூவர் அருளிய பாடல்கள் – ஒவ்வொன்னும் முதல் பாட்டில் திட்டித் தான் ஆரம்பிக்கும்! அல்லது மங்கலச் சொல் இல்லாமல்…என்ன-ன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்!:)

  மாணிக்கவாசகர் மட்டுமே….நமசிவாய வாழ்க…ன்னு திருவைந்தெழுத்தோடு துவங்குவார்!

  • * சம்பந்தர் = தோடுடைய செவியன்
   தோடு=பெண்கள் போட்டுக் கொள்வது! ஆண்கள்-=கடுக்கண் தான்!:)
   ஆனாலும் சிவனை, தோடுடைய செவியன்-ன்னு அம்மை-அப்பனாய்த் தொடங்குவாரு!

   * அப்பர் = கூற்றாயினவாறு விலக்ககலீர்
   கூற்று-ன்னு துவங்குவாரு:)

   * சுந்தரர் = பித்தா, பிறைசூடி பெம்மானே அருளாளா..
   பித்தா-ன்னு துவங்குவாரு!:)

   * மாணிக்கவாசகர் மட்டுமே…
   நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க-ன்னு துவக்கம்! குருவாய் வந்து சொன்னபடியால்!

 5. gragavanblog says:

  இது போன்ற பாடல்களில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுந்தரருக்கு ஈசனே ஆருயிர்த் தோழன் ஆயினார் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். நட்பு அப்படி இருக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்படலாம். ஆனால் புரிய வேண்டியது வேறு. ஈசனுடைய நட்புக்குத் தன்னை அனைத்து வகையிலும் பொருத்தமானவராக வைத்திருந்தார் சுந்தரர். அந்தச் சிறப்பு இல்லாதவருக்கு நட்பு சாதாரண மனிதரோடாயினும் சிறக்காது.

  எல்லாரும் கூப்பிடுகிறோம். ஆனாலும் சம்பந்தன் அழைத்த போது தானே அன்னை வந்தாள். இந்தத் தூணில் என்று பிரகலாதன் காட்டிய போதுதானே நரசிங்கம் வந்தது. அப்படித்தான் இதுவும்.

  நட்பு இப்படியிருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு, அதற்குத் தகுதியும் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பது சுந்தரர்-ஈசன் நட்பின் வழியாக நாம் அறியலாம்.

 6. //அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!//

  அத்தா என்றால் என்ன?
  பித்தா-வுக்கு எகனை மொகனையா போட்டுட்டாரோ?:))

  அத்தன்=அப்பா!
  அச்சன்-ன்னு மலையாளத்தில் சொல்றாப் போலத் தான்!
  அம்மம்மா=பாட்டி! அதே போல அத்தத்தா=தாத்தா!

  அன்னையையும், ‘அத்த’னையும் அன்றே நீத்தாள்
  தன்னை மறந்தாள்…தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே! -ன்னு அப்பர் பெருமானும் “அத்தா”-ன்னே பாடுவாரு!

  உச்சரிப்பில் கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோணும்!
  * அத்தன் = அப்பா (திருமால்)
  * அத்தான் = அவன்:)

 7. //அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!//

  “அத்தா” என்றால் என்ன?
  பித்தா-வுக்கு எகனை மொகனையா அத்தா-வா?:))

  அத்தன்=அப்பா!
  அச்சன்-ன்னு மலையாளத்திலும் உண்டு!
  பாட்டியை =அம்மம்மா என்பது போல், தாத்தாவை =அத்தத்தா என்பதும் ஒரு வழக்கம்!

  அன்னை-யையும், அத்தன்-ஐயும் அன்றே நீத்தாள்…
  தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே-ன்னு அப்பர் பெருமானும், “அத்தா” என்றே பாடுவாரு!
  என்ன, உச்சரிப்பில் கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்!
  அத்தன் = அப்பா (திருமால்)
  அத்தான் = அவன் 🙂

 8. சுந்தரர் – தன்னை யாதொரு பொருத்தத்திலும் வைத்துக் கொள்ளவில்லை!:))
  தகுதியை வைத்துக் கொண்டு தான், நட்பு பாராட்டல் என்றால், அது…அது…அது…

  “அன்னே, உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே” என்னும் ஒரே “தகுதி” தான் சுந்தரருக்கு!
  அது தகுதியும் இல்லை!
  எல்லாம் அவனே என்னும் விகுதியே அது!

  இந்த மனக் கேண்மை தான், ஈசனையும் இழுத்து வந்து சேர்த்தது!
  ஒரு காதலுக்கு ஈசனைத் தூது அனுப்பத் துணிந்தவர், இன்னொரு இடத்தில், ஈசனிடமே மறைக்கவும் எண்ணினார்! ஆனால் அப்போதும் ஈசன் இவரை விட்டாரில்லை!
  என்னாயினும்…நின் புகழுள் புகழாய், பழியுள் பழியாய்…

  அன்னே, உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!!!
  அன்னே, உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!!!

 9. பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
  அத்தா! உனக்கு ஆளாய், இனிஅல்லேன் எனலாமே!

  நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்து உன்னைப்
  ஆயா! உனக்கு ஆளாய், இனிஅல்லேன் எனலாமே!

  மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
  அன்னே! உனக்கு ஆளாய், இனிஅல்லேன் எனலாமே!

  கொடியேன், பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ
  அடிகேள்! உனக்கு ஆளாய், இனிஅல்லேன் எனலாமே!

  தகுதி ஒன்றில்லேன், தேறேன், மனத்து உன்னைத்
  தரித்தே வாழ்கின்றேன், இனிஅல்லேன் எனலாமே!

 10. சுந்தரரின் ‘தகுதி’யை வைத்துக் கொண்டே, ஈசன் நட்பு பாராட்டினான்-ன்னு படிச்ச போது, மனம் வலிச்சிப் போயிருச்சி! அதான்! மன்னிச்சிரு இராகவா!
  மாற்றுக் கருத்தாய்ச் சொல்லணும்-ன்னு சொல்லலை! இருந்தாலும், sorry na?

  சீகாழியிலே ஒரு பிள்ளைக்கு பால் தந்த அன்னை, மற்றவர்களுக்கு வாராளோ?
  தூணில் ஒருவனின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு, அன்று வந்து அப்பன், இன்று வாரோனோ?…என்றால்…

  அவையெல்லாம் எழுதப்பட்ட கதைகள்! அதனால் நாம் அறிந்து வைத்துள்ளோம்…
  எழுதப்படாத எத்தனையோ வாழ்வுகள்…அவர்களுக்கும்-அவனுக்கும் மட்டும் அறிந்த ஒன்றாய் உள்ளன!
  அதான் வெளியுலகுக்குத் தெரிவதில்லை! They also serve, who only stand and wait!

  I am Sorry, again, for this viewpoint! naa?
  அன்னே, உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!!!
  முருகா, இனி யாரை நினைக்கேனே! இனி யாரை நினைக்கேனே!

 11. gragavanblog says:

  அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு சிந்தித்தால் சொல்ல வந்த கருத்து சரியாகப் புரியாது.

  ஈசன் தகுதியைப் பார்த்து நட்பாக இருந்தார் என்று சொல்லவில்லை. ஆனால் ஈசனுடைய நட்புக்குப் பொருத்தமாக சுந்தரர் இருந்தார் என்பதுதான் கருத்து.

  இறைவன் நம் செயல், எண்ணம் அனைத்தும் அறிவான். அவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அது சுந்தருக்குத் தெரியாதா? தெரிந்தும் மறைத்தார் என்று சொல்வது சரியன்று. தான் சொல்லாமல் வைத்தார். அதுதான் உண்மை. ஆக ஈசன் அறியாத எதையும் சுந்தரர் செய்ததுமில்லை. செய்திருக்கவும் முடியாது. அப்படிச் செய்ய முடிந்திருக்குமானால் ஈசன் ஈசனேயில்லை.

  இன்னொன்று நினைத்துப் பார்க்க வேண்டும். ஈசனோடு நட்பு என்பதை அப்படியே மானிட நட்போடு பொருத்திப் பார்க்கவும் முடியாது. எத்தனையோ நண்பர்கள் வருகிறார்கள். சிலர் உயிர் என்கிறார்கள். பிறகு மயிர் என்றாகிறது. அப்படி நட்புப் பாராட்டும் பொழுது அவர்களிடம் நேர்மையாக இருக்கின்றோமா என்ற கேள்விக்கு தனக்குத் தானே உண்மைச் சொல்கின்றவர் விடை “இல்லை” என்பதே உண்மை.

  ஈசன் ஒருவனே. அப்பர் ஒரு விதமாய்ப் பார்த்தார். சம்பந்தர் ஒரு விதமாய்ப் பார்த்தார். சுந்தரர் ஒருவிதமாய்ப் பார்த்தார். அவர்களுக்கு அவர் அவரவராகவே இருந்தார் ஈசன். இவர்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் என்பது ஈசனுக்குத் தெரிந்ததுதான் இருந்தது. அந்த வகையில் பொய்யுரைக்கவில்லை. அதுதான் நட்புப் பொருத்தம்.

  • ஈசன்=”எல்லாம் அறிந்தவர்” என்பது, ஈசனை, ஈசனாய்ப் பார்க்கும் போது….
   சுந்தரர் ஈசனைத் தோழனாகவே கண்டார்!

   ஈசனுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்திருந்தால் சுந்தரர்…தன் ‘பொய்’ச் சத்தியத்தை ஈசன் அறிய வேணாம் என எண்ணி, “ஈசரே எனக்காகச் சற்று விலகி இருங்கள்”, என்று சொல்வாரா? எங்கும் நிறைந்திருக்கும் ஈசனால் ஒரு இடத்திலிருந்து விலகி இருக்கத் தான் முடியுமா?…இருப்பினும்…
   இதுவே சுந்தரர்-ஈசன் தோழமை!

   என்னாயினும்…
   நின் புகழுள் புகழாய், பழியுள் பழியாய்…
   இதுவே சுந்தரர்-ஈசன் தோழமை!

   பொருத்தங்கள் எதிர்பாரா பொருத்தம் எனலாமே!
   இதுவே சுந்தரர்-ஈசன் தோழமை!

   அன்னே! உனக்கு ஆளாய்,
   இனிஅல்லேன் எனலாமே!
   இனி யாரை நினைக்கேனே?
   இனி யாரை நினைக்கேனே?

 12. arul selvan says:

  appapa krs onnoda bakthiya paarthu poraamaya irukku

 13. Manion says:

  முதலிரண்டு வார்த்தை மட்டும் தெரிந்த எனக்கு நாலுவரியையும் மனப்பாடம் பண்ணவைத்துவிட்டது! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s