நலம் கொடுக்கும் நலமே

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,

……காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,

……மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,

……நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,

……என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா (#4128)

பாடியவர்: ராமலிங்க வள்ளலார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்ற மகிழ்ச்சியானவனே, உன்னைப் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எல்லாருக்கும் பார்வை தரும் கண்ணாக இருக்கின்றவனே,

ஒரு செயலைச் செய்யும் வல்லமை கொண்டவர்களுக்கும், செய்யமுடியாதவர்களுக்கும் அதைச் செய்து முடிப்பதற்கான வரத்தை அருளும் வரமே, உன்னை மதிப்பவர்களுக்கும் மதிக்காதவர்களுக்கும் அறிவாக இருக்கும் அறிவே,

நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் நடுவில் நின்று எல்லாருக்கும் அருள் புரிகின்றவனே, மனிதர்கள், தேவர்கள் எல்லாருக்கும் நலம் தரும் நலமே,

இப்படி எல்லா வகையானவர்களுக்கும் பொதுவாக நடனம் ஆடுகின்ற சிவனே, நான் சொல்லும் பாராட்டுப் பாமாலையை அணிந்துகொண்டு அருள் செய்!

துக்கடா

 • ’ராகா’ இணைய தளத்தில் இந்தப் பாடலை எம். எஸ். சுப்புலஷ்மி அவர்கள் பாடக் கேட்கலாம் –> http://www.raaga.com/play/?id=139202 (இணைப்பு வழங்கிய நண்பர் @kryes அவர்களுக்கு நன்றி!)
 • இன்றைய பா போஸ்ட் செய்தபின்னர் இணையத்தில் இதற்கான வேறு விளக்கங்கள் உள்ளதா என்று தேடியபோது ஒரு சுவாரஸ்யமான இணைப்பு கிடைத்தது. ‘எல்லோருக்கும்’ என்று எழுதுவது தவறு, ‘எல்லாருக்கும்’ என்பதுதான் சரி என்று தெரிந்துகொண்டேன் –> http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/3fc52384495e6252
 • சட்டென்று இங்கே வந்து தேடினால், நான்கு இடங்களில் ‘எல்லோருக்கும்’ என்று எழுதியிருக்கிறேன் 😦 திருத்தினேன், நீங்களும் கவனமாக இருங்கள்

071/365

Advertisements
This entry was posted in சிவன், திருவருட்பா, பக்தி, வர்ணனை, வள்ளலார். Bookmark the permalink.

7 Responses to நலம் கொடுக்கும் நலமே

 1. PVR says:

  @ Chokkan: vaLLalaar – Another treasure trove. It’s not often that one comes across a very simple prayer, rather Desire, in good Tamil, as this:
  ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
  உத்தமர்தம் உறவுவேண்டும்
  உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
  உறவுகல வாமைவேண்டும் …..

  You hv chosen a song that praises Shiva. I really am envious of KRS also. (பிறந்தது: தருமம் மிகு சென்னை. VaLLalaar line !) How quickly and aptly he responds . Excellent in both response time and response quality by KRS.

 2. G.Ragavan says:

  பெயரிலேயே வள்ளமை கொண்ட இராமலிங்க வள்ளலாரை வணங்குவோம்.

  பொருள் வழங்கி வள்ளல் ஆனோர் ஊரில் சொல் வழங்கி வள்ளல் ஆன அன்பாளர்.

  அவருக்குத் தொலைக்காட்சி கண்ணாடிதான். அதில் தன்னைப் பாராது முருகன் தொலைக்காட்சி பார்த்த அருளாளர்.

  அருட்பெருஞ்சோதி. தனிப்பெருங்கருணை.

 3. இந்தப் பாடலை, துக்க சமயங்களிலும், தேவார ஓதுவா மூர்த்திகள் பாடுவார்கள்!
  விழுப்புரம் விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு, ஆறுதல் வேண்டி, இந்தப் பாடலை அஞ்சலி செய்கிறேன்!

  இன்னும் இரயில் பெட்டிகளின் அடியில் சிலர் சிக்கிக் கொண்டு இருக்காங்களாம்!
  உயிர் இருந்தும் இல்லாமல் இருப்பது…மிக மிகக் கொடிது! முருகா, உனக்கே தெரியும், பார்த்திருக்க!..சிக்கியவர்கள் சீக்கிரம் இடிபாட்டில் இருந்து மீளவும்….இப்பாடல் ஒரு காணிக்கை!
  அருட்பெருஞ் சோதி! தனிப் பெருங்கருணை!
  தனிப் பெருங்கருணை! அருட்பெருஞ் சோதி!

 4. கந்த கோட்டத்துக் களிப்பை – என் செல்ல முருகனை – பார்க்க…திருவொற்றியூரில் இருந்து, பாரிமுனை வரை, கால்நடையா வருவாராம் வள்ளலார்!
  வள்ளலாருக்கு மேனி அழகு! செக்கச் செவேல்!

  தன்னைப் பார்த்து, இளம் பெண்கள் யாரேனும்..மனம் பேதலித்து விடக் கூடாதே-ன்னு…வெள்ளைத் துணியை…இழுத்து மூடியபடி…தலை குனிஞ்சிக்கிட்டே வருவாராம்! :))
  = இதென்ன புனித பிம்பமா? புண்ணியாத்மா-வா? இல்ல…இவரு மனசே இப்படித் தானா?

  தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர், தவம் ஓங்கு கந்தவேளே!
  தண்முகத்துய்ய மணி, உள்முகச் சைவமணி, சண்முகத் தெய்வமணியே!

  நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு
  தாருண்ட சென்னையில்…கந்த கோட்டத்துள் வளர், தவம் ஓங்கு கந்தவேளே!

 5. இந்தப் பாடல்…வள்ளலார் வாழ்வில் ஒரு திருப்புமுனை!

  மென்மையே உருவான வள்ளலார்…
  கல்லு போல் உறுதியா நின்னு…
  பலரின் பகையைச் சம்பாதித்துக் கொண்ட பாடலும் கூட!

  சைவ சமயம், சில போலியாளர்கள் கையில் சிக்கி, சாதி/மடத்தலைவர்கள்-ன்னு மாட்டிக் கொண்ட போது…
  அன்பே சிவம்-ன்னு சொல்லிட்டு, வார்த்தைகளால் வெறுப்பை வளர்ப்பதையே வழக்கமாகக் கொண்ட இவர்களின் போக்கைக் கண்டு மனம் வெம்பிப் போன வள்ளலார்…சொல் ஒன்று, செயல் ஒன்று 😦

  யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயலைச் செய்தார்!
  வள்ளலாரா இப்படி-ன்னு பலரும் ஆடிப் போயிட்டாங்க…

  இனிமேல்…தில்லை அம்பலத்தில் ஈசன் இல்லை!
  //பொதுவில் நடம் இடுகின்றவன்// இதோ இங்கு வந்து விட்டான்-ன்னு பாடி..
  வடலூரிலே சிற்றம்பலம் காட்ட..
  பலரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்!:((

  போட்டிச் சிற்றம்பலமா? இது அருட்பா அல்ல, மருட்-பா-ன்னு சொல்லி, court/caseன்னு அவரை அலைய விட்டாங்க!:(
  ஆனால் முருகன் வள்ளலார் பக்கமே நின்று, வழக்கை முடித்துக் குடுத்தான்!

  முதலில் இருந்தே, உள்முகச் சைவ மணி-ன்னு, சைவ சமயத்தை உள்-முகமாவே பாடுவாரு வள்ளலார்! சமயத்தைத் தூய்மையாக்கி…மேன்மை கொள் நீதி…என்ற அவர் கனவு…..கடைவிரித்தேன் கொள்வாரில்லை-ன்னு ஆகிவிட்டது :((
  ————————

  இப்படியான வடலூர் – “புதிய” சிற்றம்பலத்திலே,
  நஞ்சுண்ட கருணையான் ஈசனை…ஒவ்வொரு பூசையாச் சொல்லி, சிற்றம்பலம் ஏற்றுவிக்கும் பாட்டு!
  அலங்கல் அணிந்தருளே
  தோளில் அணிந்தருளே
  கழலில் அணிந்தருளே-ன்னு விதம் விதமா வரும்!

  திருவருட்பா கடேசித் திருமுறை (6ஆம் திருமுறையில்)…அருள்விளக்க மாலை என்னும் தொகுதியில் உள்ளது!
  தில்லை அம்பலத்தில் எதெல்லாம் அன்னிக்கி இல்லாமல் இருந்ததோ, அதையெல்லாம் இங்கு இருக்குமாறு செஞ்சி, அம்பலம் ஏற்றுகிறார்!

  * கல்லார்க்கும் கற்றவர்க்கும்
  * காணார்க்கும் கண்டவர்க்கும்
  * வல்லார்க்கும் மாட்டார்க்கும்
  * மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
  * நல்லார்க்கும் பொல்லார்க்கும்
  = எல்லார்க்கும் பொது! இந்த வள்ளலார் சிற்றம்பலம்! அதில் நடம் இடுகின்ற சிவமே…

  என் முருகுக்குத் தந்தையே! அன்புடை மாமனும் நீ! யான் புகலும் இசையும் அணிந்தருளே!
  அருட்பெருஞ் சோதி! தனிப் பெருங்கருணை!
  தனிப் பெருங்கருணை! அருட்பெருஞ் சோதி!

 6. Did u notice? Today is paa inside paa! = Arut paa in 365 paa:)

 7. PVR says:

  @KRS: I salute you – what a command over language and devotion to Kandhan. God bless. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s