நண்பர் படைப்பு – 2

இந்தப் பதிவை எழுதியவர், நண்பர் கிரி சுப்ரமணியம்:
நீங்களும் உங்களது விருப்பப் பாடல்களை எளிய விளக்கத்துடன் எழுதி அனுப்பலாம் :) (ஈமெயில் முகவரி nchokkan@gmail.com)
.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தயும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே!

நூல்: குறுந்தொகை (#40)

பாடியவர்: செம்புலப் பெயனீரார்

திணை: குறிஞ்சி

சூழல்: நம் எல்லோர்க்கும் ரொம்பவும் நெருக்கமான காதற்சூழல்
உன் தாயும் என் தாயும் யார் யார் என நாம் அறிந்தவர்களில்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் என்பதையும் நாம் அறியோம். நானும் நீயும் கூட இதுவரை சந்தித்தவர்களில்லை.  இருந்தும் செம்மண்ணில் கலந்திட்ட மழை நீர்போல நம் இருவரின் அன்பு நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டனவே.
துக்கடா:
 • செம்புலம் என்ற வார்த்தை “செம்மண், பாலை” என இரு பொருள்களையும் கொண்டது. ”பாலை மண்ணில் கலந்த நீர்போல் கலந்திட்டோமே” எனப் பொருள் கூறுபவர்களும் உண்டு
 • இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் உண்மையான பெயர் தெரியவில்லை. ஆதலால் இவர் இயற்றிய புகழ்பெற்ற இப்பாடலில் இடம்பெற்ற உவமையின் பெயராலேயே இவர் வழங்கப்படுகிறார்
This entry was posted in குறிஞ்சி, குறுந்தொகை, நண்பர் படைப்பு, நண்பர் விருப்பம். Bookmark the permalink.

8 Responses to நண்பர் படைப்பு – 2

 1. Vijay says:

  கிரி, சொக்கன் இருவரும் இந்தப் பதிவையும் அதிலுள்ள embedded video-வும் பாருங்க. 

  அப்படியே என்னொட வலைப்பூவிலிருந்து துக்கடா + சுயவிளம்பரமும் பாருங்க.

  • //red earth and pouring rain:
   mingled beyond parting//
   – very nice and very apt translation, doctor!

   செம்புலம் = red earth!
   பெயநீர் = pouring rain!
   தமிழ் சுருங்கச் சொல்லுது! ஆங்கிலம் விரியச் சொல்லுது!:)

   • @scanman

    how about


    Like red earth and pouring rain
    Our hearts have mix’d in twain

    எனக்குள்ள ஒரு விஜய டி.ஆர் எப்பவும் அலெர்ட்டா இருக்கான்!

    ஏ.கே.ராமானுஜன் இந்தப்பாட்டை மொழிபெயர்த்து பிரபலமாயிருச்சு. “Red Earth and Pouring Rain”னு விக்ரம் சந்திரா ஒரு நாவல் எழுதிருக்காப்ல.

    நானும் ஒரு வெளம்பரம்….

 2. சுப. இராமனாதன் says:

  ரொம்ப நாளாக இந்த இருவர் திரைப்படப்பாடலின் வரிகளை புரிந்து கொள்ள எண்ணிக்கொண்டிருந்தேன். நன்றி சொக்கன். அப்படியே அப்பாடலின் மற்ற வரிகளுக்கும் விளக்கம், வரும் நாட்களில் வரும் என நம்புகிறேன். 🙂

  ஆதி செம்புலப் பெயனீரார் எனினும், என்றும் யாம் வைரமுத்துவின் ரசிகர் தாம்.

  • >அப்படியே அப்பாடலின் மற்ற வரிகளுக்கும் விளக்கம்<

   நறுமுகையே நறுமுகையே – நளினா நீ கொஞ்சம் நில்லாய்! – http://isaiinbam.blogspot.com/2007/09/blog-post.html

   • சுப. இராமனாதன் says:

    நன்றி கண்ணபிரான்.

    இந்த நாளை இனிதடையச் செய்தீர்கள்.
    நாளை காலை தயிர்வடையை மெல்வீர்கள். (ஒரு rhyming flow-ல வந்திரிச்சு 🙂 )

 3. கிரி, அழகான பாடல் தேர்வு! துக்கடா-வும் நல்லாக் குடுத்து இருக்கீங்க! செம்புலம் = பாலை மணலையும் குறிக்கும் தான்!

  இந்தப் பாட்டில் இன்னொரு குறிப்பும் இருக்கு!
  யாயும் ஞாயும்
  எந்தையும் நுந்தையும்
  யானும் நீயும்
  -ன்னு தனித்தனியாச் சொல்லிக்கிட்டு வந்தவரு…
  ‘என் நெஞ்சமும் உன் நெஞ்சமும்’-ன்னு சொல்லலை! நெஞ்சங்கள்-ன்னு பன்மையிலும் சொல்லலை! பன்மையில் துவங்கி, ஒருமையில் முடிக்கிறாரு:)
  //அன்புடை நெஞ்சம்// -தாம் கலந்தனவே!

 4. Pingback: செம்மண்ணில் கலந்த தண்ணீர் | தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s