போரில்லா உலகு

பேர்அமர் மலர்க்கண் மடந்தை! நீயே

கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே

போர் உடை வேந்தன் பாசறை

வாரான் அவன் எனச் செலவு அழுங்கினனே.

நூல்: ஐங்குறுநூறு (#427)

பாடியவர்: பேயனார்

சூழல்: முல்லைத்திணை – போர் தொடங்கும் சூழல், அவளுடைய காதலன் ஒரு படைவீரன், போர் ஆரம்பமானதும் அவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று இவள் பதறுகிறாள், காதலன் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பெரிய, மலர் போன்ற கண்களை உடைய மடந்தையே,

நான் போருக்குப் புறப்படுவதாக இருந்தேன். ஆனால் நீயோ ‘இப்போதுதான் கார் காலம் தொடங்கியிருக்கிறது’ என்று சொல்லி என்னை விடமறுத்தாய்.

கவலைப்படாதே, இப்போது நான் எங்கேயும் செல்லப்போவதில்லை. காரணம், இந்தப் போருக்கு ஏற்பாடு செய்திருக்கும் அரசனும் அவனுடைய காதலியைப் பிரிந்து இருண்ட பாசறைக்கு வரமாட்டானாம்!

069/365

This entry was posted in அகம், ஐங்குறுநூறு, பிரிவு, முல்லை. Bookmark the permalink.

8 Responses to போரில்லா உலகு

 1. ஐங்குறுநூறு கவிதையின் அழகே அழகு!
  என்னவொரு குறுகிய வடிவம்,
  அந்தக் குறுகில் விரியும் பொருளின்பம்!
  குறுநூறு & குறுந்தொகை = சங்கத் தமிழ் haiku:)

  காதலிக்கு, காதலனை அனுப்பவே மனசில்லை! எப்பவும் அவன் இறுக்கத்திலேயே இருக்கணும்!
  அதே சமயம் போருக்கு அனுப்பாமல் முரண்டு செய்வதா, வீரத் தமிழ்ப் பெண்ணுக்கு அழகு?

  இன்னும் போர் தொடங்கலியே! போர் தொடங்கும் சூழல் மட்டும் தானே உருவாகி இருக்கு!
  அதனால், இருக்கும் கொஞ்ச நாளில், அவனைத் தூங்க விடாது, பேசிப்பேசியே, ஆசை தீர அனுபவிச்சிறணும்:)

  அவனுக்கும் அதே ஆசை தான்! ஆனாப் போர் ஏற்பாடுகளிலும் ஒரு கண்!
  ஆற்றுல ஒரு கால், சேற்றுல ஒரு கால்!

  பொதுவா கார் காலத்தில் (மழைக் காலம்) போர் வைக்க மாட்டார்கள்! அதனால் இரண்டு தரப்பும், கார் காலம் முடியும் வரை, போருக்கான உத்தி, ஆயத்தங்களில் ஈடுபடுவார்கள்!
  பகலெல்லாம் போர் உத்தி செய்தவனுக்கு, இரவெல்லாம் இன்ப உத்தி அல்லவா செய்ய வேண்டும்?:)))
  அதுவும் மழைக்காலக் குளிரும், கதகதப்பும் வேற!:)

  அவள், “மழையா இருக்கே, போகணுமா? போகணுமா?-ஏங்க?ன்னு ஏங்க ஏங்க….
  அவன், “பகைவனுக்கும் உன்னை மாதிரி ஒருத்தி ஏங்க ஏங்க-ன்னு ஏங்குறாப் போல!…இப்போத்தைக்கு அவன் போருக்கு வராப் போலத் தெரியலை…
  அதனால் வாடி, நாம போர் புரியலாம்-ன்னு சொல்லுறான்! அவளோட போரா? எங்கே, எப்படி, எவ்ளோ நேரம்…ஐயோ…நான் சொல்ல மாட்டேன்..வெக்கமா இருக்கு, முருகா!:))

 2. //பேர்அமர் மலர்க்கண் மடந்தை! நீயே//

  அடியே
  உன் கண்ணு = மலர்க் கண்-ன்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்!
  ஆனா நீ ஏங்குற ஏக்கம்…போர்க் கண்ணாக-வும் மாறிடுச்சிடீ!

  பேர்+அமர்=பெரும்+போர்
  அமர்+களம்=போர்+களம்
  அமர்=போர், அமளி-துமளி, disturbance!

  இப்படி, அமர் செய்யும் கண்கள், என்னைப் போருக்கு வா வா-ன்னு அழைக்குது!
  கிட்டக்க வந்தாலோ, நீ அத்தான்-ன்னு பார்க்கும் பார்வையில், மலர் பூப்பது போல் குழையுது!

  இப்படி மாறி மாறி, போரும்-இன்பமும் ஆன கண்களை உடையவளே! = பேரமர்+மலர்க்கண் பெண்ணே…
  வா, கார் காலப் போர், கட்டிலின் மேலே…..

 3. பேர்-அமர், மலர்க்-கண் என்பது தான் கவிதையின் சொல்லூற்று!

  பேர்-அமர்=போரா? என்று ஒரு சின்னக் குழப்பம், ட்விட்டரில் வீசியது!

  போர் செய்யும் உன் கண்கள்-ன்னு சொன்னா, அதில் அவ்வளவு நயம் இல்லை! ஒரு கண்ணும் இன்னொரு கண்ணும் தங்களுக்குள் போர் செய்யுது = வாள் விழி = வேகமாத் துடிக்குது-ன்னு சும்மாச் சொல்லலாம்!

  ஆனா, உன் கண்கள் ஒன்றுக்கொன்று போர் செய்து கொள்ளாமல், “போருக்கு வா வா”, என்று என்னையே அழைக்குது என்னும் போது….
  அவனுக்குப் போர் என்னும் வெறியும் அடங்கினாப் போல் ஆச்சு!
  காதல் என்னும் நெறிக்குள் ஒடுங்கினாப் போலும் ஆச்சு!

  இந்தப் “பேரமர்” என்னும் சொல், சங்க இலக்கியத்திலும், பின்னர் ஆழ்வார் பாசுரங்களிலும், அதிகம் ஆளும்!
  அமர் = போர்-ன்னு மட்டும் கொள்ளாம, அதன் வீறு, அமளி-துமளி, war like effect எல்லாமும் குறிக்கும்

  * நீரலைச் சிவந்த “பேரமர்” மழை = அப்படியொரு ‘ஆக்ரோஷ’மான மழை — நற்றிணை

  * “பேரமர்” காதல் கடல்புரைய கவ்வை = இவங்க லவ் மேட்டர் வதந்தி(கவ்வை) பரவி, ஊரே அமளி-துமளி (பேரமர்) — ஆழ்வார் பாசுரம்

  பேர்-அமர்=போரா? என்று ஒரு சிறு குழப்பம், ட்விட்டரில்! வழக்கமாச் சொல்லும் பாசுரமும் நினைவில் இருந்து உடனே சொல்ல முடியலை!
  கொஞ்சம் தேடிப் பார்த்தேன்…இவை கிடைத்தன! இன்னும் நிறைய இருக்கலாம்! ஆனா மணி 2:30…தூங்கப் போறேன்! என் முருகன், கண்களால் போருக்கு வா-வாச் சொல்லுறான் :)))

 4. chinnapiyan v.krishnakumar says:

  ரசிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி

 5. அழகான பாட்டு.
  கார்காலம்-ங்கறதை வச்சு வேற ஒரு பாட்டு நியாபகத்துக்கு வருது. எதுலன்னு தெரியலை.

  ‘கார்காலத்துல திரும்பி வந்துருவேன்’-னு சொல்லிட்டு போயி, இன்னும் வராத தலைவனுக்காக, தலைவி வருந்தப்போறாளேன்னு, தோழி சமாதானப்படுத்த வரா.

  ‘கொன்றை பூத்திருச்சு அப்படிங்கிறதுக்காக எல்லாம் இதை கார்காலம்னு நம்ப முடியாது, அவர் சொன்ன சொல் தவற மாட்டார். அவர் வரலை. அதனால இன்னும் கார்காலம் வரலைன்னு தான் அர்த்தம்’னு தலைவி சொல்ற மாதிரி ஒரு சுவையான பாட்டு வரும்.

  கார்காலமா இல்லையான்னு வானத்தைப் பார்த்துத்தான் இந்தத் தலைவியும் சொல்றான்னு நம்புறதுக்கில்லை 🙂

  • புதுப்பூங் கொன்றைக் கார் எனக் கூறினும்
   யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே
   -ன்னு வரும்:)
   முழுப்பாடல் ஞாபகம் இல்லை! ஆனா குறுந்தொகை தான்! ஓதலாந்தையார் பாட்டு:)

 6. G.Ragavan says:

  நல்ல பாடல். அருமையான விளக்கங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s