பாதம் பணிந்தபின்னே…

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த

அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்

பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே

பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே

நூல்: அபிராமி அந்தாதி (#24)

பாடியவர்: அபிராமி பட்டர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அபிராமியே,

மணியே, அந்த மணியின் ஒளியே, ஒளிர்கின்ற மணிகளைச் சேர்த்துக் கோர்த்த அணி(நகை)யே, அந்த நகையின் அழகே,

உன்னை நம்பி நெருங்காதவர்களுக்கு நோயாகவும், விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறவளே, தேவர்களுக்கெல்லாம் பெருவிருந்தாக வரம் அருளும் அன்னையே,

உன்னுடைய தாமரைப் பாதங்களைப் பணிந்து வணங்கியபின், வேறு எவரையும் நான் வணங்கமாட்டேன்!

துக்கடா

 • அபிராமி அந்தாதி முழுமைக்கும் கண்ணதாசன் உரை எழுதியுள்ளார். அதனை இங்கே இலவசமாகப் படிக்கலாம் / டவுன்லோட் செய்துகொள்ளலாம் –> http://www.archive.org/details/AbiramiAnthathi
 • அதே கண்ணதாசன் ‘ஆதி பராசக்தி’ என்ற படத்தில் அபிராமி பட்டரின் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு சூழலுக்குப் பாட்டெழுதியிருக்கிறார். ‘சொல்லடி அபிராமி’ எனத் தொடங்கும் அந்தப் பாடலின் தொகையறாவாக அபிராமி அந்தாதியின் ஒரு பாடலே பயன்படுத்தப்பட்டது. அதுதான் இன்றைய #365paa
 • கே. வி. மகாதேவன் இசையில் டி. எம். சௌந்தர்ராஜன் குரலில் இந்த அபிராமி அந்தாதிப் பாடலையும் கண்ணதாசனின் ‘சொல்லடி அபிராமி’யையும் கேட்க, பார்க்க இந்த வீடியோ –> http://www.dailymotion.com/video/xfhxjg_solladi-abhirami_school
068/365
Advertisements
This entry was posted in அபிராமி, அபிராமி பட்டர், சினிமா, பக்தி, வர்ணனை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பாதம் பணிந்தபின்னே…

 1. PVR says:

  Thanks Chokkan. Brilliant. Top in my most fav ones are: ஆண்டாள், அபிராமி அந்தாதி, காவடிச்சிந்து etc. In fact I lost count of the ‘kaavadi sindhu by Sowmya’ CDs I hv bought and lent/ gifted.

  You are doing an extremely valuable work in this series. I wonder how you manage yr time! Look fwd to your writing on Kavadi Sindhu also. 🙂

 2. T.P.Anand says:

  இந்த சிறந்த முயர்ச்சிக்காக, நான் உங்கள் பாதம் பணிந்தேன்.

  என் போன்ற தமிழ் தெரியாத அதே சமயம் தமிழில் ஆர்வம் உள்ளவருக்கு மிகவும் பயனுள்ள ஒரு முயற்ச்சி.

 3. //அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே//

  🙂
  ஒரு உணர்ச்சியில் அபிராமி பட்டர் இப்படிப் பாடிட்டாரு-ன்னு நினைக்கிறேன்! நெருப்புக் குழியில் இருந்து பாடுறாரு-ல்ல? அதான் போல!
  மத்தபடி, குழந்தைகள் அணுகினா மருந்து, அணுகாட்டி நோய்-ன்னு ஒரு தாய் இருப்பாளா?
  அபிராமி அன்னை=நல்லன எல்லாம் தரும்! என் முருகனையும் எனக்குத் தரும்!

 4. G.Ragavan says:

  அருமையான பாடல்.

  அணுகாதவர்க்குப் பிணியே என்று பட்டர் சொன்னதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பிணி என்பது எப்பொழுதும் துன்பம் தருவதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

  முப்பிணியும் உண்டாகட்டும் என்ற காளிதாசன் வாழ்த்து நமக்கெல்லாம் தெரிந்ததுதானே.

  பிணியே என்று சொல்லி விட்டு, அந்தப் பிணி போக்கும் மருந்தே என்று சொல்வதிலிருந்து அன்னையின் கருணை எங்கு கொண்டு செல்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

  அணுகாத தருமசேனனுக்குச் சூலை என்னும் பிணிதானே வந்தது. வந்த பிணியும் அம்மையப்பன் அருளால் விலகியதே. அப்படித்தான் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s