தவிர்க்கவேண்டிய மூன்று

ஐங்குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வுற்ற

எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சுஅமர்ந்த

கற்புடையாளைத் துறத்தலும் இம்மூன்றும்

நற்புடை இலாளர் தொழில்

நூல்: திரிகடுகம் (#98)

பாடியவர்: நல்லாதனார்

தீயவர்கள் (நன்மையின் பக்கம் நிற்காதவர்கள்) செய்கிற மூன்று விஷயங்கள்:

  • ஐந்து வகைப் பெரியோரின் கட்டளைக்குப் பணிய மறுப்பது
  • ஆர்வத்துடன் நட்பாகப் பழகியவர்களிடம் பொய் சொல்லுவது
  • மனத்தில் இடம் பிடித்த கற்புடையாளை(காதலி / மனைவியை)ப் பிரிந்து செல்வது
துக்கடா
  • இந்தப் பாடலில் சொல்லப்படும் ஐந்து வகைப் பெரியவர்கள்: அரசர், ஆசிரியர், தந்தை, தாய் மற்றும் அண்ணன். இவர்கள் இடும் கட்டளையை எப்போதும் மீறக்கூடாதாம்!
  • ’பொய்வழக்கு’ என்றால் கோர்ட் சமாசாரம் இல்லை, பொய் வழங்குதல், அதாவது பொய் பேசுதல் 🙂
  • ’திரிகடுகம்’ என்றால் மூன்று மூலிகைகளைக் கொண்ட மருந்து – சுக்கு, மிளகு, திப்பிலியின் கலவை – இந்த மருந்து உடலுக்கு நன்மை செய்வதுபோல், ஒவ்வொரு பாட்டிலும் மூன்று நல்ல கருத்துகளைக் கலந்து சொல்லும் நூல் என்பதால் இந்தப் பெயர் பெற்றது
  • ‘திரிகடுகம்’போலவே மருந்துப் பெயர் கொண்ட இன்னொரு பழந்தமிழ் நூல் ‘ஏலாதி’ அதைப்பற்றி ஏற்கெனவே #365paa வரிசையில் பார்த்திருக்கிறோம் –> https://365paa.wordpress.com/2011/08/07/033/
  • திரிகடுகத்தில் ஒவ்வொரு பாடலிலும் 3 கருத்துகள், ஏலாதியில் தலா 6 கருத்துகள், நான்மணிக்கடிகையில் தலா 4 கருத்துகள், கிட்டத்தட்ட powerpoint presentation – bullet pointsபோலதான், ஆனால் சகலமும் வெண்பாவில்!
060/365
Advertisements
This entry was posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா. Bookmark the permalink.

One Response to தவிர்க்கவேண்டிய மூன்று

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s