வரமாத்தேன், போ!

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வார் இரும் கூந்தல் வயங்கு இழை ஒழிய

வாரேன், வாழிய நெஞ்சே! ….

…..

வேலினும் வெய்ய கானம், அவன்

கோலினும் தண்ணிய தட மென் தோளே!

நூல்: பட்டினப் பாலை (வரிகள் 218, 219, 220, 300 & 301)

பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்

சூழல்: பாலைத் திணை – போர் காரணமாகக் காதலியைப் பிரிந்து செல்லவேண்டிய சூழல், காதலன் தவித்துப் பேசுகிறான்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

என் நெஞ்சே, நீ வாழ்க!

நீண்ட, கருப்பான கூந்தலை உடையவள் என் காதலி, சிறந்த ஆபரணங்களை அணிந்திருக்கிறவள், குறையே இல்லாத காவிரிப் பூம்பட்டினமே எனக்குக் கிடைத்தாலும்கூட இவளைப் பிரிந்து நான் உன்னோடு வரமாட்டேன்!

நான் போர் செய்யச் செல்லும் காடுகள் மிகக் கொடுமையானவை, பகைவர்மீது எறியப்படும் வேலைவிட வேதனையான தனிமை வலியைத் தரக்கூடியவை.

என் மன்னன் கரிகால் பெருவளத்தானின் செங்கோலைவிட, என் காதலியின் பெரிய, மென்மையான தோள்கள்தான் குளிர்ச்சியானவை. ஆகவே, இவளை விட்டு நான் எங்கேயும் வரமாட்டேன், போ!

059/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, காதல், நெஞ்சுக்குச் சொன்னது, பத்துப் பாட்டு, பாலை, பிரிவு. Bookmark the permalink.

4 Responses to வரமாத்தேன், போ!

 1. //அவன் கோலினும் தண்ணிய தட மென் தோளே!//

  >என் மன்னன் கரிகால் பெருவளத்தானின் செங்கோலைவிட,
  என் காதலியின் பெரிய, மென்மையான தோள்கள்தான் குளிர்ச்சியானவை<

  பாடல் அகப்பாட்டாச்சே! மன்னன் பேரு இருக்காதே! எப்படி கரிகால் பெருவளத்தான்-ன்னு எடுத்துக்கிறது? Pl explain:)

 2. //வேலினும் வெய்ய கானம்//
  கானம் = காடு,
  கானம் = பாட்டு-ன்னு எடுத்துக்கிட்டா…என் முருகன் வேலை விடக் “கொடியது” அவன் பாட்டு! :))
  அதுனாலத் தான் அவனைச் சேவல் “கொடியவன்”-ன்னு திட்டுவேன்!:))

 3. G.Ragavan says:

  நீண்டகால ஐயங்களில் ஒன்று.

  பட்டினமா? பட்டணமா? புகார்ச் செட்டியார்கள் பட்டினம் பல அணியும் திறத்தவராயினும் பட்டணம் என்றே படித்த நினைவு.

  வாரியார் சுவாமிகளும் பட்டணத்தடிகள் என்றுதான் சொல்கிறார். முவ எழுத்திலும் பட்டணம் எனப்படித்த நினைவு. பட்டணம் பொடி வேறு இருக்கிறதே

 4. in my humble opinion (not as against to vaariyar swamigaL, but from sanga tamizh)
  பட்டி’ன’ம் என்பதே சரி!

  புகார் நாகரமும் = காவிரிப் பூம் பட்டி’ன’ம் தான்!
  சிலப்பதிகாரம்….மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம்…ன்னு இரண்டு இடங்களைச் சுட்டும்!
  மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர
  மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
  பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்

  பட்டினம் = நெய்தல் நில ஊர்!

  முல்லை = பாடி, சேரி
  குறிஞ்சி = சிறுகுடி, பெருங்குடி
  மருதம் = பேரூர், மூதூர்
  நெய்தல் = பட்டினம், பாக்கம்

  இங்குப் புகேன்மின், புகேன்மின்
  பண்டன்று, பட்டினம் காப்பே! – என்பது ஆழ்வார் பாசுரம்!
  புனிதா என்னும் காரைக்கால் அம்மையும் பட்டினம் என்றே காரைக்காலைப் பாடுவார்கள்!

  மடத்துப் பெரியவாள், ‘பட்டணப் பிரவேசம்’ -ன்னு ஆக்கி, ஆக்கி,
  மதராஸ் பட்டணம், பட்டணம் பொடி, பட்டணத்துக்குப் போவலாம்-ன்னு…எழுதி எழுதி…
  எது ‘ஸ்பஷ்டமா’ எழுதப்பட்டதோ, அதுவே நிலைத்துவிட்டது!:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s