அறிமடம்

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும் – சொல்லில்

நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப,

அறிமடமும் சான்றோர்க்கு அணி!

நூல்: பழமொழி நானூறு (#361)

பாடியவர்: முன்றுரையரையனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நெருங்கிய மடல்களையும் பூக்களையும் கொண்ட தாழைகள் நிறைந்த கடற்கரையின் தலைவனே,

அந்தக் காலத்தில் ஒரு மன்னன் (பாரி) முல்லைக் கொடி படர்வதற்குத் தன்னுடைய தேரைக் கொடுத்தானாம், இன்னொரு மன்னன் (பேகன்) மயில் குளிரால் நடுங்குகிறது என்று நினைத்து அதற்குப் போர்வை போர்த்தினானாம். நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிற சமயங்களில் பெரிய அறிவாளிகள்கூட இப்படி மடத்தனமாக நடந்துகொள்வார்கள், அதுவும் அவர்களுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான்.

துக்கடா

053/365
Advertisements
This entry was posted in நண்பர் விருப்பம், பழமொழி நானூறு, வள்ளல். Bookmark the permalink.

3 Responses to அறிமடம்

  1. hari says:

    good selection sir

  2. க்ரேட்! உதவி பண்ணப் போகும்போது மத்தவங்க ‘ஸில்லி’ன்னு சொல்லுவாங்கன்னுல்லாம் யோசிக்காம, உதவியை மட்டும் பாருங்க’ன்னு சொல்றார். சரிதானா?

    பை தி வே, நம்ம முன்றுரையரையனார் (சரியா?) பத்தி நம்ம ஜவஹர் சார் ஒரு பதிவு எழுதியிருக்கார். அதற்கான லிங்க் இங்கே

  3. asksukumar says:

    பொட்டில் அடித்துபோல் உறைக்கிறது! அருமை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s