எங்கே எழுதுவீர்?

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்துக்கு நேர்

நூல்: வாக்குண்டாம் (#2)

பாடியவர்: ஔவையார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நல்லவர்களுக்குச் செய்த உதவி, கல்மேல் எழுத்துபோல – அவர்கள் அதை என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.

ஆனால், நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களுக்குச் செய்த உதவி, நீர் மேல் எழுத்துபோல – அடுத்த விநாடி மறந்துவிடுவார்கள்.

049/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஔவையார், வாக்குண்டாம், வெண்பா, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எங்கே எழுதுவீர்?

  1. அப்போ கூடப் பாருங்க! ஈரம் இல்லாதவங்க கிட்ட தான் தண்ணி இருக்கு:)
    அவங்க = ஈரம் இலா நெஞ்சம்
    அவங்க உதவி = நீர் (ஈரம்) மேல் எழுத்து
    பாட்டி kalakkufying in முரண்தொடை! 🙂

  2. G.Ragavan says:

    ஔவை சொன்னதுல ஒரு தவறு இருக்கு. நல்லாருக்குச் செய்தது தொடர்ந்து வந்து உதவும். அல்லார்க்குச் செய்தது உதவியே ஆனாலும் தொடர்ந்து வந்து படுத்தும். இதுதான் இன்னைக்கு நிலைமை. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s