கடுகும் தெரியும்

வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்

பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்

காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்

கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்

நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்

இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்

இலங்குநீர் வரைப்பில் கலம்கரை விளக்கமும்

விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்

மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும்

கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்

எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி

இடிக்கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்

கடிப்பகை காணும் காட்சியது ஆகிய

நூல்: சிலப்பதிகாரம் (புகார்க்காண்டம், கடல் ஆடு காதை)

பாடியவர்: இளங்கோவடிகள்

சூழல்: கோவலனும் மாதவியும் கடல் காற்று வாங்கச் செல்கிறார்கள். அந்தக் கடற்கரை பற்றிய வர்ணனை இந்தப் பாடல்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அது இரவு நேரம். ஆனாலும், கோவலன், மாதவி உலவச் சென்ற கடற்கரை நன்கு வெளிச்சமாக இருக்கிறது. ஏன் தெரியுமா?

  • வண்ணப் பொருள்கள், சாந்துகள், பூக்கள், முகப் பூச்சுகள், பிட்டு, அப்பம், மற்ற பல உணவுகள், பிற பொருள்களை விற்பவர்கள் தங்களுடைய கடைகளில் பலப்பல விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள்
  • வெவ்வேறு தொழில்களைச் செய்கிறவர்கள் தங்களது கடைகளில் / தொழில் இடங்களில் விதவிதமான விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள்
  • நடுநடுவே மீன் விற்பவர்கள் பல விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள், வலையில் மீன் பிடிக்கும் மீனவர்களும் திமிலில் விளக்குகளை வைத்திருக்கிறார்கள்
  • கடலில் செல்லும் கலங்கள் (படகுகள்) கரையை அடையாளம் காண்பதற்காக ஒரு பெரிய விளக்கு ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது (’கலம்-கரை விளக்கம்’ பெயர்க்காரணம் இதுதான்!)
  • வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வேற்று மொழி பேசுபவர்கள் பல விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள்
  • பொருள்களைப் பாதுகாக்கும் ’பண்டசாலை’களின் காவலர்கள் நிறைய விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள்
இப்படி அந்தக் கடற்கரைமுழுவதும் கணக்குவழக்கில்லாமல் ஏகப்பட்ட விளக்குகள் எங்கேயும் ஏற்றிவைக்கப்பட்டிருப்பதால், அங்குள்ள மாவு போன்ற நுட்பமான மணலின்மீது ஒரு சின்னக் கடுகைப் போட்டால்கூட அது நன்றாக நம் கண்ணில் தெரியும்!
044/365
Advertisements
This entry was posted in பட்டியல், வர்ணனை, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s