நண்பர் படைப்பு – 1

இந்தப் பதிவை எழுதியவர், நண்பர் சங்கர்:
நீங்களும் உங்களது விருப்பப் பாடல்களை விளக்கத்துடன் எழுதி அனுப்பலாம் 🙂
இப்பாடல் முத்தொள்ளாயிரத்திலிருந்து. முத்தொள்ளாயிரம் என்பது தமிழகத்தின் முவேந்தர்களைப் பற்றியும் அவர்களது நாடுகளின் பெருமைகளைப் பற்றியும் பாடுகிற பாடல்களின் தொகுப்பு . இங்கே இடம் பெற்றுள்ள பாடல் சேர நாட்டின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறது.
அல்லற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்டதென  வெரீஇப் புள்ளினந்தம்
கைச்சிறகார் பார்ப்பொடுக்கும் கவ்வை யுடைத்தரோ
நச்சிலை வேற் கோக்கோதை நாடு
அல்லற் பழனத் தரக்காம்பல் வாயவிழ – சேற்றில் அரக்கு (சிகப்பு) நிற ஆம்பல் மொட்டுகள் வாய்திறந்து  (மலரவும்) விழவும்
வெள்ளந்தீப் பட்டதென  வெரீஇப் – வெள்ளத்தில் தீ வந்ததோ என அச்சத்துடன்
புள்ளினந்தம் கைச்சிறகார் பார்ப்பொடுக்கும் கவ்வை யுடைத்தரோ – பறவைகள் தங்களுடைய சிறகுகளுக்குள் தங்கள் குஞ்சுப்பறவைகளை ஒடுக்கி கொண்டு ஆரவாரம் செய்யும்
நச்சிலை வேற் கோக்கோதை நாடு – நச்சு (விஷம்) தோய்ந்த வேல் உடைய கோதை மன்னனின் நாடு (சேர நாடு)
சேற்றில், அரக்கு (சிகப்பு) நிற ஆம்பல் மொட்டுகள் வாய்திறக்கவும் (மலரவும்) வெள்ளத்தில் தீ வந்ததோ என பயந்து பறவைகள் தங்களுடைய சிறகுகளுக்குள் தங்கள் குஞ்சுப்பறவைகளை ஒடுக்கி கொண்டு ஆரவாரம் செய்யும் நாடு, நச்சு (விஷம்) தோய்ந்த வேல் உடைய கோதை மன்னனின் நாடு (சேர நாடு)
துக்கடா: 
  • ௧)  இயல்பாக நடக்கும் நிகழ்வின் மேல் கவிஞர் தன்னுடைய கருத்தை ஏற்றிச் சொல்வதால் இது “தற்குறிப்பேற்ற அணி”யைச் சேர்ந்த பாடலாகும்
  • ௨) முத்தொள்ளாயிரத்தின் அனைத்து பாடல்களும் இங்கே கிடைக்கும் – http://www.chennailibrary.com/mis/muthollayiram.html
Advertisements
This entry was posted in சேரன், நண்பர் படைப்பு, நண்பர் விருப்பம், முத்தொள்ளாயிரம், வர்ணனை, வெண்பா, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to நண்பர் படைப்பு – 1

  1. psankar says:

    நன்றி நன்றி 🙂

  2. SOWMYA (arattaigirl) says:

    அருமை 🙂

    • psankar says:

      மிக்க நன்றி சௌம்யா. உங்கள் மின்னஞ்சல் முகவரியை விருப்பமிருந்தால் (sankar2u@gmail.com) கொடுக்கவும்.

  3. திருத்தம்: “அள்ளற்”
    பாடல் எண்: 14

    • psankar says:

      நன்றி செந்தில். அனால் என்ன திருத்தம் என்று புரியவில்லையே. நானும் “அல்லற்” என்று தானே எழுதி இருக்கிறேன் ? தயவு செய்து விளக்கவும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s