வேலை கெடக்குது கழுதை!

எல்லா வினையும் கிடப்ப, எழு நெஞ்சே

கல் ஓங்கு கானம் களிற்றின் மதநாறும்

பல் இரும் கூந்தல் பணிநோனாள் கார்வானம்

மெல்லவும் தோன்றும் பெயல்

நூல்: கார் நாற்பது (#24)

பாடியவர்: மதுரை கண்ணங்கூத்தனார்

சூழல்: திடீர்ப் பயணம். ‘மழைக்காலத்தில் திரும்பி வருவேன்’ என்று காதலிக்கு உறுதி சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றான் காதலன். அந்த மழைக்காலம் வந்துவிட்டது. ஆனால் போன வேலை இன்னும் முடியவில்லை. திரும்பிச் செல்லமுடியாத சூழ்நிலை. என்ன செய்வான் அவன்?

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நெஞ்சே,

கற்களும் குன்றுகளும் மலைகளும் உயர்ந்த காடுகளில் யானைகள் திரிகின்றன. அவற்றின் மத நாற்றம் எங்கும் வீசுகிறது. கருத்த வானத்தில் மழை மெல்லப் பெய்யத் தொடங்குகிறது.

நான் திரும்பி வருவதாகச் சொன்ன கார்காலம் வந்துவிட்டது. கருப்பான பெரிய கூந்தலை உடைய என் காதலி, இனிமேலும் என் பிரிவைத் தாங்கிக்கொண்டிருக்கமாட்டாள்.

வேலைகள் கிடக்கட்டும், நீ கிளம்பு, நாம் ஊருக்குப் போகலாம்!

துக்கடா

  • ’கார் நாற்பது’ என்பது மழைக்காலம் பற்றிய 40 பாடல்களைக் கொண்ட அழகான சிறு நூல். பதினெண் கீழ்க்கணக்கு பிரிவில் வருவது
  • இந்தப் புத்தகத்தை எளிய உரையுடன் வாசிக்க இங்கே செல்லலாம் –> http://pollachinasan.com/ebook3/3500/pdf/TM3456.pdf

043/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, கார் நாற்பது, தனிமை, பிரிவு, வர்ணனை. Bookmark the permalink.

4 Responses to வேலை கெடக்குது கழுதை!

  1. chinnapiyan v.krishnakumar says:

    நன்றி நன்றி . தொடர வேண்டும் உங்கள் பணி

  2. G.Ragavan says:

    இதுல கல் ஓங்கு கானம் களிற்றின் மதநாறும் என்பது ஆழ்ந்த கருத்து.

    தலைவனே, வேலைகளெல்லாம் கிடக்கட்டும். எழுந்து புறப்படு.

    மலைக்காடெங்கும் ஆனைகளின் மதநாற்றம். (கூடல் காலம் வந்ததை ஆனைகள் கூட அறிந்து கொண்டதால் பெருகுகிறது மதம். அது கூடலில் முடியும்)

    இருண்ட கூந்தலைக் கொண்ட உன் தலைவி தாங்கமாட்டாள். மழை வேறு பெய்யத் துவங்கி விட்டது. (விரைந்து கூடு)

    அந்தக்காலத்தில் இன்னன்ன பொழுதுகளில் (மாதவிலக்குக்குப் பின்னால், மழை மற்றும் குளிர் காலங்களில்) தலைவியோடு கூடிய ஆக வேண்டும் என்ற வகையில் இலக்கியங்கள் கூறுகின்றன. பெண் பசித்துக் கிடந்தாலும் கிசித்துக் கிடக்கக்கூடாது என்பதற்காக.

    • என். சொக்கன் says:

      சுவாரஸ்யமான விளக்கத்துக்கு நன்றி ராகவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s