பொழுது

பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா

இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே.

*

காரே கூதிர் முன்பனி பின்பனி

சீர் இளவேனில் வேனில் என்றாங்கு

இருமூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே.

*

மாலை யாமம் வைகறை எற்படு

காலை வெங்கதிர் காயும் நண்பகல் எனக்

கைவகைச் சிறுபொழுது ஐவகைத்தாகும்.

நூல்: நம்பி அகப்பொருள் (#10, 11 & 12)

பாடியவர்: நாற்கவிராச நம்பி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

‘பொழுது’ என்பது இரண்டு வகைப்படும்:

 • பெரும்பொழுது
 • சிறுபொழுது

பெரும்பொழுது என்பது ஒரு வருடத்தில் வரும் ஆறு காலங்களைக் குறிக்கிறது. அவை:

 • கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
 • கூதிர்க்காலம் (ஐப்பசி, கார்த்திகை)
 • முன்பனிக்காலம் (மார்கழி, தை)
 • பின்பனிக்காலம் (மாசி, பங்குனி)
 • இளவேனில்காலம் (சித்திரை, வைகாசி)
 • முதுவேனில்காலம் (ஆனி, ஆடி)

சிறுபொழுது என்பது ஒரே நாளில் வரும் ஐந்து காலங்களைக் குறிக்கிறது. அவை:

 • மாலை (6 PM to 10 PM)
 • யாமம் (10 PM to 2 AM)
 • வைகறை (2 AM to 6 AM)
 • எற்பாடு (6 AM to 12 Noon)
 • காயும் நண்பகல் (12 Noon to 6 PM)

040/365

Advertisements
This entry was posted in அகம், இலக்கணம், பட்டியல். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s