நாயகி!

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச

சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு

வாயகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று

ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

நூல்: அபிராமி அந்தாதி (#50)

பாடியவர்: அபிராமி பட்டர்

 • நாயகி
 • நான்முகி (நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனின் தலைவி)
 • நாராயணி (நாராயணனின் தலைவி)
 • கை நளின பஞ்ச சாயகி (கைகளில் ஐந்து அம்புகளைக் கொண்டவள்)
 • சாம்பவி (சம்பு – சிவனின் தலைவி)
 • சங்கரி (சங்கரன் – சிவனின் தலைவி)
 • சாமளை (சாமளா தேவி)
 • சாதி நச்சு வாய் அகி மாலினி (கொடும் விஷத்தை வாயில் கொண்ட பாம்பை அணிந்தவள்)
 • வாராகி (வராக – பன்றி முகம் கொண்டவள்)
 • சூலினி (திரிசூலம் ஏந்தியவள்)
 • மாதங்கி (மதங்க முனிவரின் மகள்)

என்று இத்தனை பெயர்களையும் உடைய அபிராமி அன்னையைச் சரண் புகுந்தால், நமக்குப் பாதுகாப்பு!

Update: துக்கடா

 • இந்தப் பாடலின் ஒலிவடிவங்கள் இரண்டை வலையேற்றிக் கொடுத்த நண்பர் @kryes அவர்களுக்கு நன்றி
 1. சீர்காழி கோவிந்தராஜன் குரலில்
 2. இளையராஜா இசையில், சேர்ந்திசையாக

038/365

Advertisements
This entry was posted in அபிராமி, அபிராமி பட்டர், பக்தி, பட்டியல். Bookmark the permalink.

One Response to நாயகி!

 1. சாதி நச்சு வாயகி என்பதை என் தோழியின் ஃபேஸ்புக் அப்டேட்டில் பார்த்தேன், அதற்குப் பொருள் தேடியபோது இங்கே அழைத்து வந்தது.

  ஸம் கர என்றால் நன்மை செய் என்றும், நன்மை பயப்பவனே சம் கரன் – சங்கரன் என்றும் பொருள். சங்கரி என்றால் நன்மை செய்பவள், நலன் அருள்பவள் நல்லன எல்லாம் தருபவள்.

  நாராயணி என்றால் அவன் தலைவி என்பதை விட, நாரணன் தங்கை என்பதாலும் காத்தல் மற்றும் திருமகளுக்கு மணாளன் எனவே, செல்வத்துக்கு அதிபதி எனும் குணங்கள் கொண்டவனின் சோதரி, அவளும் அதே காத்தல் – தனம் தருதல் (பொருட்செல்வம்-கல்விச் செல்வம்-அருட்செல்வம்) எனும் குணங்களைக் கொண்டவள் என்பதால் நாராயணி என்று தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s