இவள் யாரோ?

ஆரோ இவர் ஆரோ

என்ன பேரோ, அறியேனே!

*

கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்

கன்னி மாடம் தனில் முன்னே நின்றவர் (ஆரோ

*

பண்ணிப் பதித்தால்போல் இரு ஸ்தனமும் கூடப்

பாங்கியர் இனமும் துரைத்தனமும்

எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப்

பெண்ணைப்போலக் கண்ணில் காணும் மங்கையர் (ஆரோ

*

பாக்கியம் என்பது இவர் தெ(த)ரிசனமே அது இங்கே

பலித்தது என்ன புண்ணியமோ, மனமே

மூக்கும் விழியும் தீர்க்கமாய் இன்னமும் பெண்கள்

பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமே கண்கள் (ஆரோ

*

சந்திர வி(பி)ம்ப முக மலராலே என்னைத்

தானே பார்க்கிறார் – ஒருக்காலே

அந்த நாளில் தொந்தம்போலே உருகிறார்,

இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (ஆரோ

நூல்: ராம நாடகக் கீர்த்தனைகள்

பாடியவர்: அருணாசலக் கவிராயர்

சூழல்: கன்னி மாடத்திலிருக்கும் சீதையைப் பார்த்த ராமருடைய பரவசம்

(ராமாயணத்தின் ஒரு காட்சியை நாடக வடிவில் தரும் இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன் – இன்றைய சினிமா பாடல்களைப்போலவே பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்று அமைந்திருக்கும் இந்தப் பாடல் எண்ணற்ற மேடைகளில் அரங்கேறியுள்ளது. தெளிவாகப் பதம் பிரித்துத் தந்திருப்பதால் மேலே உள்ள பாடலை அப்படியே படித்தாலே அர்த்தம் புரியும் – கீழே சாத்திரத்துக்காக ஒரு தொகுப்புரைமட்டும்)

இவர் யாரோ? என்ன பேரோ? தெரியவில்லையே!

*

அழகான மிதிலையில், கார்காலத்தில் இந்தக் கன்னி மாடத்தில்முன்னே வந்து நின்ற இவர் யாரோ?

*

செய்துவைத்தாற்போல் இவர் நெஞ்சு, துரைமார்கள்போல் கம்பீர நடை, தாமரைக் கண்களும் மூக்கும் தீர்க்கமான பார்வையையும் கண்டால் பெண்கள்கூட இந்த அழகியைத் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்வார்கள்.

இவரை நேரில் பார்ப்பதே பெரிய வரம்தான். அந்த வரம் இங்கே எனக்குக் கிடைத்திருக்கிறதே, நான் என்ன புண்ணியம் செய்தேனோ!

நிலா போல் மலர்ந்த முகத்தால் அவர் என்னைத்தானே பார்க்கிறார்? இவர் இன்றைக்கு இங்கே காட்சி தர என்ன காரணம்? ஒருவேளை, எங்கள் இருவருக்கும் முன்பிறப்புச் சம்பந்தம் இருக்கிறதோ?

034/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, காதல், நாடகம், ராமன், வர்ணனை. Bookmark the permalink.

4 Responses to இவள் யாரோ?

 1. Jeniffer says:

  This is not Rama’s Paravasam, But Sita’s. People generally mistake this for that.

  • mahakavi2013 says:

   Hello Jeniffer: It was sung by Rama as he walks along the street with Lakshmana and Viswamitra in Mithilai. SIta was at the forefront of the balcony in the gynecium. Read it again. The author of this post is right. The first caraNam says “பண்ணிப் பதித்தால்போல் இரு ஸ்தனமும்”. That is the give away phrase. Besides aruNAcala kavi says in the prelude to this song ” ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல் “. People have wrongly assumed that it is sung by Sita because of word “ivar”

 2. Pingback: ஆசை நோய்க்கு மருந்து உண்டா? « தினம் ஒரு ’பா’

 3. srinivasan says:

  Great.
  Our SALUTES to your EFFORTS.
  God Bless you.
  anbudan,
  srinivasan.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s