மருந்து

இடர்தீர்த்தல், எள்ளாமை, கீழினம் சேராமை,

படர்தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடைதீர்த்தல்,

கண்டவர் காமுறும் சொல் காணின், கல்வியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்

நூல்: ஏலாதி

பாடியவர்: கணிமேதாவியார்

நூல் சிறப்பு: ’ஏலாதி’ என்ற வார்த்தை ஏலம் (ஏலக்காய்) முதலான 6 மூலிகைகளைக் குறிக்கிறது. அவை: ஏலக்காய், லவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு, இந்த ஆறு மூலிகைகளையும் சேர்த்துச் செய்யப்படும் மருந்து பல நோய்களைத் தீர்த்து நம்மை நீண்ட நாள் வாழவைக்கும். அதுபோல, ‘ஏலாதி’ என்கிற இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றினால் உலகில் நல்லபடி வாழலாம் என்ற பொருளிலேயே இதற்கு ‘ஏலாதி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நிறையப் படித்து அறிந்த மேதைகள் எழுதும் நூல்களை நாம் வாசித்தால் பல தகவல்கள், பேருண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம், பயன் பெறலாம்.

ஆனால், நீங்கள் கீழே உள்ள இந்த ஆறு விஷயங்களைமட்டும் பின்பற்றினாலே போதும், ஞானிகள் எழுதிய புத்தகங்களையெல்லாம் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை:

  1. அடுத்தவர்களுக்கு வந்த துன்பங்களைத் தீர்ப்பது
  2. யாரையும் கேலியாக இகழ்ந்து பேசாமல் தவிர்ப்பது
  3. கீழ்த்தரமாக நடந்துகொள்பவர்களிடம் சேராமல் ஒதுங்கிக்கொள்வது
  4. பசியோடு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சாப்பாடு போடுவது
  5. மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பழி சொல்லும் வகையில் நடந்துகொள்ளாமல் இருப்பது
  6. நம்மோடு பழகுகிறவர்கள் விரும்பும் சொற்களைப் பேசுவது

033/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஏலாதி. Bookmark the permalink.

One Response to மருந்து

  1. Pingback: தவிர்க்கவேண்டிய மூன்று « தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s