கறை நல்லது

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து

கடி உடை வியன் நகர் அவ்வே; அவ்வே

பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து

கொல் துறைக் குற்றிலமாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே

நூல்: புறநானூறு

பாடியவர்: ஔவையார்

சூழல்: வஞ்சப் புகழ்ச்சி அணி – அதியமானின் நண்பர் ஔவையார். தன்னுடைய சிநேகிதனை எதிர்த்துத் தொண்டைமான் என்ற அரசன் படையெடுத்து வருகிறான் என்று ஔவையார் கேள்விப்பட்டார். அந்தப் போரை நிறுத்துவதற்காகத் தூது சென்றார். ஔவையாரைப் பார்த்த தொண்டைமானுக்கு ஒரே குஷி. இந்தக் காலத்தில் சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு உள்நாட்டு ராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை தருவதுபோல், தொண்டைமான் தன்னுடைய படைகள், ஆயுதங்கள், போர்க் கருவிகளையெல்லாம் ஔவையாருக்குச் சுற்றிக் காண்பிக்கிறான். ‘இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று கர்வத்தோடு கேட்கிறான். ஔவையார் அவனைப் புகழ்வதுபோல் கிண்டலடிக்கிறார், ‘அதியமான் உன்னைவிடப் பெரிய வீரன்’ என்று சொல்லாமல் சொல்கிறார்.

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தொண்டைமானே,

உன்னுடைய போர்க் கருவிகளெல்லாம் பளபளப்பாக, மிகவும் அழகாக, கம்பீரமாக, வலிமையாக இருக்கின்றன. அவற்றுக்கு மயில் தோகையால் அலங்காரம் செய்து, மாலை சூட்டியிருக்கிறீர்கள். நெய் பூசிப் பளபளப்பாக்கியிருக்கிறீர்கள். காவல் மிகுந்த அரண்மனையில் பத்திரமாகப் பாதுகாத்துவைத்திருக்கிறீர்கள். பிரமாதம்!

என்னுடைய அரசன் அதியமான் நல்லவன்தான். அவனிடம் நிறைய செல்வம் உள்ளபோது எல்லோருக்கும் வாரிக் கொடுப்பான். ஒருவேளை அதிகப் பொருள் இல்லாவிட்டால், இருப்பதைப் பலரோடு பகிர்ந்துகொண்டு சாப்பிடுவான்.

ஆனால் அவனுடைய ஆயுதங்கள், படைக்கலங்களெல்லாம் அரதப் பழசு. அவற்றை யாரும் இப்படி அலங்கரித்து வைக்கமாட்டார்கள். சொல்லப்போனால், அதியமான் படையின் ஆயுதங்களில் பெரும்பாலானவை எந்நேரமும் கொல்லன் பட்டறையில்தான் கிடக்கும். ஏன் தெரியுமா?

அதியமானின் படை அடிக்கடி பகைவர்களோடு சண்டையிடச் செல்லும். தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களைக் குத்திக் கொல்வதால் அவர்களுடைய ஆயுதங்கள் முறிந்துபோகின்றன, அவற்றின் முனை சிதைந்து, கைப்பிடி உடைந்து வீணாகிக் கிடக்கின்றன. கொல்லர்கள் எப்போதும் அவற்றைப் பழுதுபார்த்துச் சரிசெய்துகொண்டிருக்கிறார்கள்.

028/365

Advertisements
This entry was posted in அறிவுரை, அவமதிப்பு, ஔவையார், கதை கேளு கதை கேளு, தூது, புறநானூறு, புறம், பெண்மொழி, போர்க்களம், வஞ்சப் புகழ்ச்சி. Bookmark the permalink.

5 Responses to கறை நல்லது

  1. G.Ragavan says:

    இதெல்லாம் மேலாண்மை படிக்கிறவங்களுக்குப் பாடமா வைக்கனும். என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்

    • என். சொக்கன் says:

      சத்தமாச் சொல்லாதீங்க, அவ்வையார்’ஸ் மேனேஜ்மெண்ட் கான்செப்ட்ஸ்ன்னு ஒரு புக் போட்றுவாங்க 😉

  2. chinnapiyan v.krishnakumar says:

    என்னே ஒரு பாடல்.வஞ்சபுகழ்ச்சி அருமை..கொண்டுவந்து காட்டியதற்க்கு.நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s