மாஸ்டர்பீஸ்!

மை வடிவக் குழலியர் தம் வதனத்தை

………..நிகர் ஒவ்வா மதியே! மானே!

செய்வடிவை, சிற்றிடையை, திருநகையை

………..வேய்த்தோளைத் தெய்வமாக

இவ்வடிவைப் படைத்த வடிவு எவ்வடிவோ?

………..யான் அறியேன்! உண்மையாகக்

கை படியத் திருமகளைப் படைத்து, இவளைப்

………..படைத்தனன் நல் கமலத்தோனே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: அம்பிகாபதி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

என் காதலியின் கூந்தல் கருமேகத்தின் வண்ணம் கொண்டது, அந்த மேகங்களுக்கு இடையில் தோன்றும் அவள் நெற்றியின் அழகுக்கு, அந்த நிலாகூட இணை ஆகாது!

அதேபோல், அவளுடைய எழிலான மருண்ட கண்களுக்கு, மான்களைக்கூட உவமை சொல்லமுடியாது!

அந்த அழகு, சின்ன இடை, புன்சிரிப்பு, மூங்கில்போல் திரண்ட தோள்கள்… இத்தனை அழகான இந்தத் தேவதையைப் படைத்தவர் யாரோ, எனக்குத் தெரியவில்லை!

ஒருவேளை, தாமரை மலரில் வாழும் பிரம்மன் இவளைப் படைத்திருந்தால், முதலில் திருமகளை / லட்சுமியை உருவாக்கி ஒத்திகை பார்த்திருப்பான். அதன்மூலம் கை பழகிக்கொண்டு, அதன்பிறகுதான் இவளைப் படைத்திருப்பான்.

துக்கடா:

  • இந்தப் பாடலைப் பாடிய அம்பிகாபதி, கம்பரின் மகன்
  • அம்பிகாபதி இந்தப் பாடலைத் தன் காதலி அமராவதியைப் பார்த்துப் பாடியதாகக் கருதப்படுகிறது

027/365

Advertisements
This entry was posted in அகம், காதல், தனிப்பாடல், வர்ணனை. Bookmark the permalink.

6 Responses to மாஸ்டர்பீஸ்!

  1. G.Ragavan says:

    ஒரு ஐயம். குழலியர் என்றால் பன்மை வந்து விடுகிறதே. ஒரு வேளை நிறைய பெண்களைப் பார்த்துப் பாடுறாரோ!

    • என். சொக்கன் says:

      அப்படிதான் அர்த்தம் வருகிறது 😉 பின்னால் சுதாரித்துக்கொண்டு ஒருமைக்கு மாறிக்கொள்கிறாரோ? :>

      • G.Ragavan says:

        ஒருவேளைக் குழலியள் என்றிருந்து படியெடுக்கும் போதோ அச்சுக்கோர்க்கும் போதோ குழலியர் என்றாகியும் இருக்கலாம். இவ்வளவு வெளிப்படையான தவறிருந்தால் திருவிளையாடல் தருமிக்கு நேர்ந்ததுதான் நேர்ந்திருக்கும்

      • என். சொக்கன் says:

        ’அர்’ விகுதிக்கு மரியாதை என்றுதான் அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது 🙂

  2. தற்கால சினிமாக் கவிஞர்கள் எல்லாம் எங்கிருந்து வரிகளை உருவுகிறார்கள் என இப்போதல்லவா புரிகிறது! :>

    • என். சொக்கன் says:

      நீரும் விஷமிதான், நான் நினைத்ததையே நினைத்திருக்கிறீரே 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s