மாலைமாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

சூழல் / சிறப்பு: இந்தப் பாடல் ‘மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வார்கள் – ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்தபின்னர் எந்தப் பக்கத்திலிருந்து (கடிகார, எதிர்க் கடிகாரச் சுழற்சியில்) பார்த்தாலும் அந்த மாலை ஒரேமாதிரி இருக்குமல்லவா? அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப்புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப்புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.

மாலைமாற்று வகைப் பாடல்கள் மற்ற பழந்தமிழ்ப் பாக்களைவிடக் கொஞ்சம் கடினமாகத் தோன்றுவது உண்மைதான் (இது தமிழ்தானா என்றுகூடப் பலருக்குச் சந்தேகம் வரும்) – ஆனால் பிரித்துப் படித்தால் ’அட, இவ்ளோதானா?’ என்று ஏதோ மர்ம முடிச்சு அவிழ்ந்ததுபோல் ஆனந்தம் பிறப்பது நிச்சயம். இப்படி ஒன்று இரண்டு அல்ல, பல பாடல்களைப் பாடியிருக்கிறார் திருஞானசம்பந்தர். அந்தத் தொகுப்பை இங்கே படிக்கலாம் – http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

முதலில், இந்தப் பாடலைப் பிரித்துப் படிக்கும் முறை:

யாம் ஆமா? (நாங்கள் கடவுள்களா? இல்லை)

நீ ஆம் ஆம்! (நீமட்டும்தான் கடவுள், ஆமாம்!)

மா யாழீ, (பெரிய யாழை ஏந்தியவனே)

காமா, (எல்லோராலும் விரும்பப்படுகிறவனே)

காண் நாகா, (நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே)

காணா காமா, (காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே)

காழீயா, (சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே)

மா மாயா, (பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே)

நீ மா மாயா (எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!)

ஆக, இந்தப் பாடலின் பொருள்:

நாங்கள் கடவுள்களா? இல்லை. நீமட்டும்தான் கடவுள், ஆமாம்!

பெரிய யாழை ஏந்தியவனே, எல்லோராலும் விரும்பப்படுகிறவனே, நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே, காமனை / மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே, சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே, பெரிய மாயைகளை / திருவிளையாடல்களைச் செய்பவனே, எங்களைப் பிற மாயைகளில் இருந்து காப்பாற்று!

துக்கடா:

 • இந்தப் பாடலை இசை வடிவத்தில் கேட்க –> http://www.youtube.com/watch?v=JxLWNmZ2b_4
 • ட்விட்டரில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு #365பா-வில் சேர்க்கச் சொன்னது என் நண்பர்கள் கண்ணபிரான் ரவிசங்கர் மற்றும் செந்தில்குமார் ( http://twitter.com/#!/SeSenthilkumar/status/91512812031062016 )  அவர்கள் இருவருக்கும் என் நன்றி
 • மாலைமாற்றுபற்றிய சுவையான கட்டுரை ஒன்று (விளக்கப் படத்துடன்) –> http://www.visvacomplex.com/MaalaiMaaRRu1.html

025/365

Advertisements
This entry was posted in சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், நண்பர் விருப்பம், பக்தி, வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

12 Responses to மாலைமாற்று

 1. Palindrome in Tamil Literature. Super!
  திருஞானசம்பந்தரே!

 2. அருமை , தமிழில் இப்படி palindrome இருக்கின்றதா என்பது இப்பொது தான் தெரிந்தது.

 3. Shankar Anand says:

  http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm

  திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
  (மூன்றாம் திருமுறை)
  3.117 சீகாழி – திருமாலைமாற்று

  பண் – கௌசிகம்

  திருச்சிற்றம்பலம்

  1257

  யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
  காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
  3.117.1
  1258.

  யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
  யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
  3.117.2
  1259.

  தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
  மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
  3.117.3
  1260.

  நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
  மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
  3.117.4
  1261.

  யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
  வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
  3.117.5
  1262.

  மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
  யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
  3.117.6
  1263.

  நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
  நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண.
  3.117.7
  1264.

  நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
  காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
  3.117.8
  1265.

  காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
  பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
  3.117.9
  1266.

  வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
  தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
  3.117.10
  1267.

  நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
  காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
  3.117.11

 4. புகழேந்தி says:

  இப்படியெல்லாம் தமிழில்சிறப்பு
  இருக்கிறது. தமிழர் இவ்வளவு
  திறம் பெற்றிருந்தார் என்பதெல்லாம்
  அனைவரும் அறிய வேண்டியவை.
  இதுபோல் சமகால கவிஞர்
  யாரும் நாலடியில் மாலைமாற்று
  பொழிப்புரை தேவைப் படாத்
  தமிழில் படைத்திருக்கின்றனரா?
  அறிய ஆவல். ஓரிரண்டு அடிகளில்
  அமைத்திருந்தாலும் ஆச்சரியமே.

 5. முதற்பாடலுக்கு மட்டுமே எல்லாரும் விளக்கமளிக்கிறீர்கள் மற்ற பாடல்களுக்கும் விளக்கம் இருந்தால் இழை குடுங்களேன் …. தவறாக எண்ண வேண்டாம் வேறு யாரிடம் கேட்பது 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s