மாலை என் வேதனை கூட்டுதடி

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்

பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,

இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர

நிலவுக் காண்பது போல அணி மதி ஏர் தர

கண் பாயல் போல் கணைக் கால மலர் கூம்ப

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச

முறுவல் கொள்பவை போல் முகை அவிழ்பு புதல் நந்த

சிறு வெதிர்ங் குழல் போகச் சுரும்பு இமிர்ந்து இம் என

பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்

கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர

மா வதி சேர, மாலை வாள் கொள

அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து

செந்தீச் செவ்அழல் தொடங்க வந்ததை

வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்

காலை ஆவது அறியார்

மாலை என்மனார், மயங்கியோரே.

நூல்: கலித்தொகை (நெய்தல் பாட்டு #2)

பாடியவர்: நல்லந்துவனார்

சூழல்: காதலனைப் பிரிந்த காதலி, மாலை நேரம் அவளை வருத்துகிறது, வேதனையுடன் தோழியிடம் புலம்புகிறாள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பல கதிர்களைக் கொண்ட சூரியன், பரந்து விரிந்த இந்த உலகத்தை வெளிச்சமாக்குகிறான். பின்னர், அதே சூரியன் அதே கதிர்களைச் சுருட்டி மடக்கிக்கொண்டு பகலை விழுங்குகிறான். மேற்குத் திசை மலையில் சென்று மறைகிறான்.

சக்கரத்தைக் கையில் கொண்ட விஷ்ணுவின் நிறத்தைப்போல் ஊரெங்கும் இருள். அழகான நிலா கொஞ்சமாக வெளிச்சம் தருகிறது.

தாமரை போன்ற மலர்கள் உறங்கும் கண்களைப்போலக் குவிந்துகொண்டன. தன்னுடைய புகழைக் கேட்பவர்கள்போலத் தலை தாழ்த்தி மரங்கள் உறங்கத் தொடங்குகின்றன. புதர்களில் மொட்டுகள் புன்முறுவல் செய்வதுபோல் மலர்கின்றன. புல்லாங்குழலின் இனிமையான இசையைப்போல வண்டுகள் ’இம்’ என்ற ஒலியை எழுப்புகின்றன. பறவைகள் தம்முடைய குஞ்சுகள் அனைத்தும் கூட்டில் உள்ளனவா என்று கவனிக்கின்றன. கறவைப் பசுக்கள் கன்றுகளின் ஞாபகத்தோடு தொழுவத்தை நோக்கி வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன. மற்ற விலங்குகளெல்லாம் தங்களுடைய வீட்டைச் சென்று சேர்கின்றன. அந்தணர்கள் முறைப்படி மாலை நேரச் சடங்குகளைச் செய்கிறார்கள். பெண்கள் விளக்குகளை ஏற்றுகிறார்கள்.

ஆனால், காதலர்களைப் பிரிந்த பெண்களுக்குமட்டும் இந்த மாலை நேரம் அழகானதாக இல்லை. அது கையில் வாளோடு வருகிறது. எங்கள் உயிரை உடலில் இருந்து பிரிக்கிறது. இதெல்லாம் புரியாதவர்கள்தான் ‘மாலைப் பொழுது இனிமையானது’ என்று சொல்வார்கள்.

024/365

This entry was posted in அகம், கலித்தொகை, தோழி, நெய்தல், பிரிவு, பெண்மொழி, மாலை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s