கவிகள்

வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு

கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப்

புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்

கவிராயர் என்று இருந்தக்கால்

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: சில புலவர்கள் தங்களைக் ‘கவிராயர்கள்’ என்று திமிருடன் சொல்லிக்கொண்டார்கள். குறும்புக்காரரான காளமேகம் அவர்களைப் பார்த்துப் பாடுகிறார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

சிறந்த பூமியை ஆளும் அரசர்களால் போற்றப்படுகிற புலவர்களே,

நீங்கள் உங்களைக் ‘கவி’ராயர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அது உண்மைதானா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

உண்மையிலேயே நீங்கள் ‘கவி’ராயர்களானால், உங்களுடைய வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன்னால் இருக்கவேண்டிய இரண்டு கால்கள் எங்கே? உள்நோக்கிக் குழிந்திருக்கும் கண்கள் எங்கே?

பின்குறிப்பு: ’கவி’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு – கவிதை எழுதுபவர், குரங்கு. அந்தப் புலவர்கள் முதல் பொருளை வைத்துப் பெருமையடித்துக்கொள்ள, காளமேகம் இரண்டாவது பொருளை எடுத்துக்கொண்டு அவர்களைக் கிண்டலடிக்கிறார்

023/365

Advertisements
This entry was posted in அவமதிப்பு, கதை கேளு கதை கேளு, காளமேகம், கிண்டல், குறும்பு, சிலேடை, தனிப்பாடல். Bookmark the permalink.

3 Responses to கவிகள்

 1. http://www.youtube.com/watch?v=t4wyxFnrqkE இது, கண்ணதாசன் அண்ணாவுக்காக எழுதியதன் அடிப்படை என்று கொண்டாலும், கண்ணதாசன் இதிலிருந்து உந்துதல் பெற்றிருப்பாரோ? #டவுட்டு

 2. GiRa ஜிரா says:

  நாலெழுத்து படிச்சாலே திமிர் வந்துருது. காளமேகத்துக்கிட்ட வம்பிழுத்த “கவி”களும் அந்த வகை போல.

  இந்த மாதிரி கவிகள் ஔவையிடமும் வம்பிழுத்திருக்காங்க. அருணகிரியிடமும் வம்பிழுத்திருக்காங்க. அதுக்கு நல்லா வாங்கியும் கட்டிக்கிட்டாங்க.

  காளமேகம் குரங்கை நல்லா உத்துப் பாத்து தெளிவாப் புரிஞ்சு வெச்சிருக்காரு.

  அதான் எடுத்ததும் வால் எங்கேன்னு கேக்குறாரு.

  அடுத்து நீண்ட வயிறு. கெடச்சதையெல்லாம் மென்னு தின்னுக்கிட்டேயிருக்கும் குரங்கு. அதான் நீண்ட வயிறு.

  அடுத்து முன்னிரண்டு கால்கள். அடுத்து குழிந்த கண்கள். இப்பிடி ஒவ்வொன்னா அடுக்கி மானத்தைக் கப்பல் ஏத்தி விட்டுட்டாரு காளமேகம்.

  அதுக்கப்புறம் நாங்கள் கவிகள்னு யாரும் சொல்லீருப்பாங்களான்னு ஐயந்தான்.

 3. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டுல எங்கே எங்கேன்னு கேக்குறப் படிச்சதும் எனக்குப் பழைய பாட்டு ஒன்னு நினைவுக்கு வருது. நம்ம செயங்கொண்டார் எழுதுன பாட்டுதான். கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டரேதான்.

  கலிங்கத்துப்பரணியில போர்க்களக் காட்சிகள் நிறைய இருக்கும். அதுல ஒரு காட்சி. மாண்டு கிடக்கும் கணவனின் தலை மட்டும் மனைவி கையில் கிடைக்குது. ஐயோ! என்னவொரு கொடிய நிலை! அப்போ அவ கேக்குறா.

  பொருதடக்கை வாளெங்கே?
  மணிமார்பெங்கே?
  போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத பருவயிரத் தோளெங்கே?
  எங்கேயென்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.

  மேல குடுத்த மாதிரி பத்தி பத்தியா பிரிச்சிக் குடுத்தா பாட்டேல்லாம் எளிமையாப் புரியுதுல்ல.

  பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
  போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
  பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
  பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்

  செயங்கொண்டாரைப் பத்திச் சொன்னதும் இன்னொரு தகவலையும் சொல்லீரனும்னு தோணுது.

  கலிங்கத்துப்பரணிக்குக் கடவுள் வாழ்த்து எழுதும் போது இவர் சிவன், திருமால், நான்முகன், ஞாயிறு, முருகன், பிள்ளையார், கலைமகள், மலைமகள், எழுகன்னியர் (சப்தகன்னியர்)னு எல்லாருக்கும் வரிசையாப் பாடி வெச்சிருக்காரு. பின்னால பிரச்சனையாகக் கூடாதுன்னு நெனச்சிருந்திருக்கலாம்.

  இவர் எழுதிய இன்னொரு நூல் ஆதிநாதன் வளமடல். அதுல கடவுள் வாழ்த்து எப்படி தெரியுமா பாடியிருக்காரு?

  கொன்றை முடித்தார்க்கும் கோபாலர் ஆனார்க்கும்
  அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம் – இன்று
  மடப்பாவை யார் நம் வசமாகத் தூது
  நடப்பாரே தெய்வம் நமக்கு

  மூன்று மூர்த்திகளையும் தெய்வமல்ல என்று மறுத்து காதல் தூதுவர்களையே தெய்வம் என்கிறார் செயங்கொண்டார்.

  கொன்றை முடித்தார்க்கும் – கொன்றை மலரைச் சூடிய சிவனுக்கும்
  கோபாலன் ஆனார்க்கும் – கோபாலன் என்ற பெயரில் வந்து பிறந்த திருமாலுக்கும்
  அன்று படைத்தார்க்கும் – மண்ணுலகத்தை அன்று படைத்த நான்முகனுக்கும்
  ஆளல்லேம் – அடியவர்கள் அல்லர் நாங்கள்
  இன்று மடப்பாவை யார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு – காதல் நோயைத் தீர்க்கும் பாவையரிடம் நமக்காக தூது செல்வார் யாரோ, அவரே தெய்வம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s