தரிசனம் கிடைக்காதா

பேணும் கொழுநர் பிழைகள் எலாம்

……….பிரிந்தபொழுது நினைத்து அவரைக்

காணும்பொழுது மறந்திருப்பீர்!

……….கன பொன் கபாடம் திறமினோ!

*

’வருவார் கொழுநர்’ எனத் திறந்தும்

……….’வாரார் கொழுநர்’ என அடைத்தும்

திருகும் குடுமி விடியளவும்

……….தேயும் கபாடம் திறமினோ!

*

செக்கச் சிவந்த கழுநீரும்

……….செகத்தில் இளைஞர் ஆர்உயிரும்

ஒக்கச் சொருகும் குழல் மடவீர்!

……….உம் பொன் கபாடம் திறமினோ!

நூல்: கலிங்கத்துப் பரணி (கடைதிறப்பு)

பாடியவர்: ஜெயங்கொண்டார்

சூழல்: கலிங்கப் போர் முடிந்து வீரர்கள் வீடு திரும்பினார்கள். ஆனால், அவர்கள் திரும்பி வருவதாகச் சொன்ன நேரம் தவறிவிட்டது, தாமதமாகிவிட்டது. இதனால் செல்லக் கோபம் கொண்ட அவர்களுடைய மனைவிகள் வீட்டுக் கதவைத் திறக்க மறுக்கிறார்கள். திகைத்துப்போன கணவன்கள் வெளியில் நின்று தவிக்கிறார்கள். அவர்கள்மீது இரக்கம் கொண்ட புலவர் அந்த மனைவிகளைப் பார்த்துப் பாடிய Recommendationதான் இந்தக் ‘கடை திறப்பு’ வரிசைப் பாடல்கள்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பெண்களே,

உங்களைக் காக்கும் கணவன் பக்கத்தில் இல்லாதபோது, அந்தப் பிரிவுத் துயரத்தால் அவன்மீது கோபம் வரும். அவன் எப்போதோ செய்த பிழைகளை நினைத்துப் பார்த்து எரிச்சலடைவீர்கள். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, நீங்கள் இப்போது கதவைத் திறக்காமல் இருப்பது நியாயம்தான்.

ஆனால், அதே கணவன் உங்கள் பக்கத்தில் வந்துவிட்டால், அவனைக் கண்டதும் எல்லாப் பிழைகளும் மறந்துவிடும். ஆகவே, முரண்டு பிடிக்காமல் உங்கள் வீட்டின் உயர்வான அழகிய கதவைத் திறந்துவிடுங்கள்!

*

இத்தனை நாளாக நீங்கள் பட்ட அவஸ்தை எனக்குத் தெரியும். தினந்தோறும் ‘இன்றைக்கு என் கணவர் வந்துவிடுவார்’ என்று கதவைத் திறந்துவைத்திருந்தீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, ’அவர் வரமாட்டார்’ என்று கோபம் கொண்டு கதவைச் சாத்தினீர்கள், மீண்டும் திறந்தீர்கள், மீண்டும் சாத்தினீர்கள், இப்படி ராத்திரி முழுக்கக் கதவைத் திறந்து மூடி விளையாடியதில் அந்தக் கதவின் கொக்கிகள் தேய்ந்துவிட்டன.

விளையாட்டு போதும், இப்போது உங்கள் கணவன் நிஜமாகவே வந்துவிட்டான். கதவைத் திறங்கள்.

*

இந்த உலகத்தில் வாழும் பெண்கள் கூந்தலில் நன்கு சிவந்த செங்கழுநீர் மலர்களைமட்டுமா செருகுகிறீர்கள்? கூடவே இளைஞர்களின் அரிய உயிரையும் சேர்த்துச் செருகிக்கொள்கிறீர்கள். எங்களை வதைத்தது போதும், உங்களுடைய பொன் கதவைத் திறந்துவிடுங்கள்!

துக்கடா

 • ’கலிங்கத்துப் பரணி’ உரையுடன் இங்கே கிடைக்கிறது. ஆனால் என்னால் வாசிக்கமுடியவில்லை. க்ளிக் செய்தால் வெறும் வெள்ளைப் பக்கங்கள்தான் வருகின்றன. இந்த மர்மத்தின் விளக்கம் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் –> http://www.tamilvu.org/library/l5920/html/l5920ind.htm
 • இந்த மூன்று பாடல்களில் இரண்டை ஒலிவடிவமாகக் கேட்கலாம். அதற்கான இணைப்புகள் இங்கே:
 1. ’வருவார் கொழுநர்’ எனத் திறந்தும் –> http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/audio/c01241t7.rm
 2. செக்கச் சிவந்த கழுநீரும் –> http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/audio/c01241t6.rm

022/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, ஊடல், கலிங்கத்துப் பரணி, பரணி. Bookmark the permalink.

14 Responses to தரிசனம் கிடைக்காதா

 1. Balaji Viswanathan says:

  Ungaluku agananooru purananooru padal vilakathodo kidaithal engalukum share seiyavum. Nandri .

 2. Yogi Yogi says:

  மனக் கதவை சொல்கிறார்கள் போலிருக்கிறது.

 3. கொழுநர் என்றால் கணவன் என்று பொருளா?

  • என். சொக்கன் says:

   ஆமாம் – ’தெய்வம் தொழாஅள் கொழுநர்த் தொழுது எழுவாள் / பெய்யெனப் பெய்யும் மழை’ என்று திருக்குறளில் வரும்

 4. Yogi Yogi says:

  அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
  எண்இலி கோடி தொகித்திடும் ஆயினும்
  அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
  எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

 5. rakkimk says:

  அருமை, அருமை!

 6. psankar says:

  The website that you linked in teh end is not using UNicode. It uses some other tamil font which we need to have on our machine to view text. You are having problems because of that.

 7. Tharusu says:

  பூங்கதவே தாழ் திறவாய்… 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s