நறியவும் உளவோ?

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

நூல்: குறுந்தொகை (#2)

பாடியவர்: இறையனார்

சூழல்: குறிஞ்சித் திணை – காதலியைப் பார்த்துக் காதலன் சொல்வது (இந்தச் சூழல் பற்றி இன்னும் விளக்கமாக வாசிக்க இங்கே செல்லலாம் –> http://goo.gl/3xOWH)

‘சுருக்’ விளக்கம்: யப்பா தும்பி, பூப்பூவா சுத்தி வர்றியே, இதுவரை நீ எத்தனை பூ பார்த்திருப்பே? அதுல எந்தப் பூவுக்காச்சும் என் காதலி கூந்தல் அளவு வாசம் உண்டா?

முழு விளக்கம்: (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அழகான சிறகுகளைக் கொண்ட தும்பியே, பூப்பூவாகச் சென்று தேனை ஆராயும் வாழ்க்கை உன்னுடையது, ஆகவே நீ இதுவரை ஏராளமான பூக்களை வாசனை பார்த்திருப்பாய்.

உன்னிடம் ஒரு கேள்வி. நேர்மையாக பதில் சொல், நீ பார்த்ததைச் சொல். என்னைச் சந்தோஷப்படுத்துவதற்காக எதையாவது சொல்லாதே:

என்மீது உரிமை கொண்ட என் தோழி (காதலி) மயில்போல் மென்மையானவள், வரிசையான பற்களைக் கொண்டவள், அவளுடைய கூந்தலைவிட நறுமணம் கொண்ட ஒரு மலரை நீ நுகர்ந்திருக்கிறாயா?

துக்கடா:

 • முதலில், நேற்றைய ‘365பா’வைப் படித்துவிடவும் –> https://365paa.wordpress.com/2011/07/20/015/
 • ’இறையனார்’ என்பது சிவபெருமானின் புனைபெயர் என நம்பப்படுகிறது. அதை வைத்து ஒரு சுவாரஸ்யமான கதையும் உண்டு – பாண்டிய மன்னன் – திடீர் சந்தேகம் – ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?’ – தன் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பரிசு அறிவிக்கிறான் – தருமி என்ற புலவருக்கு உதவுவதற்காக, மன்னனின் கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் இந்தப் பாடலை எழுதுகிறார் சிவபெருமான் / இறையனார் – அதைத் தருமி அவையில் முன்வைக்க, நக்கீரர் மறுக்கிறார் – பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் இல்லை’ என்கிறார் – சிவபெருமான் கோபமாகி நெற்றிக்கண்ணைத் திறக்க, நக்கீரர் சாம்பலாக, சிவனின் கோபம் தீர, நக்கீரர் திரும்பி வர, கடைசியில் எல்லாம் சுபம்
 • நேற்று கொடுத்த அதே வீடியோ இங்கேயும் (கீழே) – 28வது நிமிடத்திலிருந்து பார்க்கலாம் – இதில் சிவன் யார், தருமி யார் என்று உங்களுக்குத் தெரியும், நக்கீரராக நடிப்பவர் யார் தெரியுமோ? (@kryes மற்றும் @RagavanG இருவரும் பதில் சொல்லக்கூடாது :>)
 • அதெல்லாம் சரி, உண்மையில் பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா, இல்லையா? 😉
016/365
Advertisements
This entry was posted in அகம், கதை கேளு கதை கேளு, குறிஞ்சி, குறுந்தொகை, வர்ணனை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to நறியவும் உளவோ?

 1. venkat says:

  AP Nagarajan

 2. “காமம் செப்பாது கண்டது மொழிமோ” – இதுக்கு வெளக்கஞ் சொல்லவே இல்லையே! நீக்கீரரே, இப்போ உம்ம சான்ஸ்! சொக்கன் மீது நெற்றிக் கண்ணைத் திறங்க! 🙂

  • என். சொக்கன் says:

   மன்னிக்கவும் 🙂 சேர்த்துவிட்டேன் :>

 3. “மயில்இயல் செறிஎயிற்று – இத விட ஒரு கவிதையில் என்ன எழுத முடியும் ஐயா” – தருமியின் புலம்பல் அழகு!:)

  மகடூஉ குணத்துள் ஒன்றான = பயிர்ப்பு! (அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு) ! அது இவளுக்கு இருப்பதால், பயிலாத பொருள் மீது வியப்பு தோன்றி, தள்ளி நிற்கக் கூடும் அல்லவா? அப்படி ஆகி விடக் கூடாதே என்பதற்காக, உசாராப் “பயிலியது கெழீஇய நட்பு”-ன்னு சொல்லுறான்!:)

  பயிலியது கெழீஇய = பழகப் பொருத்தமான….”நட்பாம்”! காதல்-ன்னு வெளிப்படையாச் சொல்லாம, “நட்பு”-ன்னு கொஞ்ச நாள் ஏமாத்திக்கிட்டுத் திரியும் இக்காலக் காதலர்கள் போலவே இல்ல? 🙂 எக்காலமும் காதல், காதல் தான்-யா!:) முருகா!

 4. மயிலியல் = மயில் போன்ற ஒயில் உள்ள பூ!
  செறியெயிறு = அடுக்கடுக்கா அமைஞ்சிருக்கும் பூ!
  அரிவை கூந்தல் = பூ!
  இப்படி அவ கூந்தலைப் பூ-ன்னு இவனே இத்தனை முன்னொட்டு சொல்லி முடிவு கட்டிட்டான்!
  பாவம், இனி தும்பி என்ன பண்ணும்? இதுல தும்பிக்கு அறிவுரை வேறு! என் நாட்டுத் தும்பி என்பதால் எனக்குப் பிடிக்குமே-ன்னு சொல்லாம, உண்மையச் சொல்லு-ன்னு!:)

  எனக்காக யாரும் தீக்குளிக்க வேணாம்-ன்னு இன்றைய அரசியலார் சொன்னா என்ன பொருள்? இன்னுமா குளிக்கலை?-ன்னு தானே பொருள்!
  அதே போல, எனக்காகச் சொல்லாதே, இவள் மயிலியல் செறிஎயிற்றுப் பூ! சொல்லு தும்பியே சொல்லு! சொல்லு அஞ்சலி சொல்லு:))

  • என். சொக்கன் says:

   நன்றி கேஆரெஸ் 🙂 ட்விட்டரில் சொன்னதுபோல், இந்தப் பாடல்களுக்கு நீங்கள் சொல்லும் விளக்கங்கள், கூடுதல் விவரங்கள் இன்னும் சுவை கூட்டுகின்றன – எனக்கு ரிப்போர்ட்டர் ஸ்டைலுக்குமேல் எழுதவரவில்லையே என்று ஏக்கமாக உள்ளது 🙂 தொடரவும், நன்றி 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 5. amas32 says:

  பள்ளியில் மனப்பாட செய்யுள்ளாகப் படித்தது. மிக அருமையாக சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தமிழின் அழகை உங்கள் தினமும் ஒரு பா பதிவுகளின் முலம் படித்து மகிழ்கிறேன்
  amas32

  • என். சொக்கன் says:

   நன்றி amas32

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 6. சே. இரவிகிட்டயோ இராகவன்கிட்டயோ கேட்டுச் சொல்லலாம்ன்னு பார்த்தா முந்திரிக்கொட்டையாட்டமா இரவிசங்கர் ஐயாவே(!) வந்து நிக்குறார்! 😦 🙂

  • என். சொக்கன் says:

   அதெல்லாம் வெவரமா முன்னாடியே ப்ளாக் செஞ்சுடுவோம்ல 😉

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 7. Pingback: தித்தித்திருக்குமோ? « தினம் ஒரு ’பா’

 8. Pingback: ஞாயிறு கடல் கண்டாஅங்கு « தினம் ஒரு ’பா’

 9. nandan says:

  என்ன ஒரு ரசனை

 10. GiRa ஜிரா says:

  கொங்குதேர் வாழ்க்கை – இந்தப் பாடலைப் பற்றி எவ்வளவோ அலசியாகி விட்டது. ஆனாலும் போதவில்லை.

  பாடலின் தொடக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள்ளேயே நிறைய விவரங்கள் ஒளிந்துள்ளன.

  கொங்கு தேர் வாழ்க்கை

  கொங்கு என்றால் பூந்தாது. மகரந்தம் என்று சொல்கின்றோமே.
  அப்படிப் பட்ட மகரந்தங்களை (தேர்)ஆராய்ச்சி செய்யும் வாழ்க்கையைக் கொண்டிருக்கிறதாம் வண்டு.

  தேனைப் பருகுவதற்காக ஒவ்வொரு மலராகச் சென்று அங்கிருக்கும் மகரந்தத்தையும் தேனையும் தேர்ச்சி செய்து பருகுவதே வாழ்க்கையாகக் கொண்டது வண்டு.

  ஆக வண்டு பலப்பல மலர்களைக் கண்டு தேர்ச்சி செய்துள்ளது என்று எடுத்த எடுப்பிலேயே certificate கொடுத்தாகி விட்டது. நீதிபதியாக இருக்க தும்பிக்கு மட்டுமே தகுதி இருக்கிறது என்று மிகப்பெரிய ஐஸ்.

  நிறைய கேஸ் பார்க்கும் வக்கீல். நிறைய கூட்டம் வரும் டாக்டர். நிறைய வீடுகள் கட்டிய பில்டர். இவர்களுக்குத்தானே மதிப்பு.

  அந்த மதிப்புதான் நிறைய பூக்களை ஆராய்ந்த தும்பிக்கும். Experience matters. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s