தருமிக்குத் தந்தவன்

பொதியப் பொருப்பன் மதி அக்கருத்தினை

கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்

பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி

என்உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்

கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்

நூல்: கல்லாடம்

பாடியவர்: கல்லாடர்

’சுருக்’ விளக்கம்: கீழே உள்ள வீடியோவில்

முழு விளக்கம்:

பொதிகை மலையை ஆட்சி செய்யும் பாண்டியனின் சிந்தனையில் ஒரு கருத்து தோன்றியது. அதை யாராவது நல்ல தமிழ்ப் பாடலாக எழுதித் தந்தால் அவர்களுக்குப் ‘பொற்கிழி’ பரிசாகத் தருவதாக அறிவித்தான்.

அவன் நாட்டில் இருந்த ‘தருமி’ என்ற புலவனுக்கு அந்தப் பரிசைப் பெற ஆசை. ஆனால் அதற்கான நல்ல தமிழ்ப் பாடல் அவனுக்குக் கிடைக்கவில்லை.

என் உள்ளத்தில் குடி கொண்டு நல்ல பயன்களைத் தரும் இறைவன், தேன் சொட்டும் மலர் மாலை அணிந்த பார்வதியைத் தன் உடலில் பாதியாகச் சேர்த்துக்கொண்டவன், கருணையே உருவான சிவபெருமான், தருமிக்கு உதவி செய்யத் தீர்மானித்தான். ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்கிற செந்தமிழ்ப் பாடலை எழுதிக் கொடுத்தான்.

துக்கடா

 • பழந்தமிழ் இலக்கிய நூல்களில் கல்லாடத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. காரணம் அதில் மிகக் கடினமான, பொருள் விளங்கிக்கொள்ளச் சிரமமான பாடல்கள் பல நிறைந்திருப்பதுதான். ஒருவர் இதைமட்டும் ஊன்றிப் படித்துப் புரிந்துகொண்டுவிட்டால், வேறு எந்த இலக்கியமும் அவருக்குச் சிரமமாக இருக்காது என்று சொல்வார்கள். இதைக் குறிக்கும்வகையில், ’கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்று ஒரு பழமொழி உண்டு
 • ’கல்லாடம்’ நூல் முழுவதும் உரையுடன் இணையத்தில் உள்ளது என்றுதான் நினைவு. ஏனோ இன்று தேடியபோது எனக்குக் கிடைக்கவில்லை. உங்களுக்குக் கிடைத்தால் சொல்லுங்கள். இங்கே இணைப்புக் கொடுத்துவிடலாம்
 • இந்தப் பாடலில் சுட்டிக்காட்டப்படும் ‘கொங்குதேர் வாழ்க்கை’தான் தமிழகத்தில் மிகப் பிரபலமான சங்கப் பாடல், குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள அந்தப் பாடலும் அதன் பின்னணியும் நாளைய ‘365பா’வில் வரும்
 • அதற்குமுன்னால் ‘கொங்குதேர் வாழ்க்கை’யை மிகப் பிரபலமாக்கிய ’தருமி’ நாகேஷ் – சிவா(ஜி)பெருமான் வீடியோ இங்கே (28வது நிமிடத்திலிருந்து):

015/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, கல்லாடம், சிவன், Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தருமிக்குத் தந்தவன்

 1. Pingback: நறியவும் உளவோ? « தினம் ஒரு ’பா’

 2. கல்லாடம் 11th CE நூல்! சங்க காலப் புலவர் கல்லாடனார் அல்ல!
  கல்லாடம் link http://library.senthamil.org/063.htm

  • என். சொக்கன் says:

   ஆமாம். அப்படிதான் எழுதியிருக்கிறேன் – ஏதாவது தவறா?

   லிங்குக்கு நன்றி – விளக்கத்தைக் காணோமே 😦

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 3. Thiagarajan says:

  கல்லாடம் ‍ – மூலமும் உரையும் இங்கு உள்ளது http://www.tamilvu.org/library/l4f00/html/l4f00por.htm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s