நாட்டாமைகளுக்கு ஓர் அறிவுரை

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய்போலும்மே; மெய்போலும்மே.

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்

பொய்போலும்மே; பொய்போலும்மே.

அதனால்

இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே

இருவரும் பொருந்த உரையார் ஆயின்

மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்

மனம் உற மருகி நின்று அழுத கண்ணீர்

முறை உறத் தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வது ஓர் வாளாகும்மே.

நூல்: வெற்றிவேற்கை / நறுந்தொகை

பாடியவர்: அதிவீரராமப் பாண்டியர்

சூழல்: ஒரு பிரச்னையை எப்படி விசாரித்து நியாயம் சொல்வது என்பதற்கான வழிமுறையைச் சொல்லும் பாடல் இது

’சுருக்’ விளக்கம்: பேச்சில் மயங்கவேண்டாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது நிஜமும் பொய்யும் புரியாது. அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள். தீர விசாரித்து அறிவதே உண்மை.

முழு விளக்கம்:

ஒருவருக்கு நல்ல பேச்சுத்திறமை இருந்தால், அவர் பொய்யைக்கூட நிஜம்போல் சொல்லிவிடுவார்.

இன்னொருவர், உண்மைதான் சொல்கிறார், ஆனால் பாவம், அவருக்குச் சரியாகப் பேசத் தெரியவில்லை, எனவே அது நமக்குப் பொய்போலத் தோன்றுகிறது.

ஆக, ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்று வெறும் பேச்சைமட்டும் வைத்து முடிவு செய்வது சரியல்ல.

உங்கள்முன்னால் ஒரு பிரச்னை வந்து நிற்கும்போது, இருதரப்பினருடைய வாதத்தையும் தலா ஏழு முறை தெளிவாகக் கேளுங்கள். அதன்பிறகு, அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள்.

அப்படிச் செய்யாமல் மேலோட்டமான சொற்களில் மயங்கி, அவசரப்பட்டு ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால், நியாயம் தவறிவிடும். வழக்கில் தோற்றுப்போனவர் வருந்தி அழுவார். அந்தக் கண்ணீர், தப்பான தீர்ப்புச் சொன்னவரைச் சும்மா விடாது. அவருடைய சந்ததியையே அறுக்கும் வாள் ஆகிவிடும். மூன்று தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்கூட அவர்களைக் காப்பாற்றமுடியாது.

011/365

Advertisements
This entry was posted in அறிவுரை, நீதி, வெற்றிவேற்கை. Bookmark the permalink.

4 Responses to நாட்டாமைகளுக்கு ஓர் அறிவுரை

  1. நச்! நச்! நச்!
    புற்றில் வாள்-அரவம் அஞ்சேன்!
    “பொய்யர் தம் மெய்யும்” அஞ்சேன்!

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு!

    //மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்//
    மனுநீதி விடயத்தில் மட்டும் ‘அப்பீட்’ ஆயிக்குறேன்!! 🙂

    • என். சொக்கன் says:

      என்னைமாதிரி ‘மனு’வை மறந்துட்டு ‘நீதி’யைமட்டும் பாருங்கோ 😉

  2. மனம் உற மருகி நின்று அழுத கண்ணீர் // கவி உச்சம் இவ்வரிகள்தாம் இல்லையா?!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s