குணம் வருமோ?

பொல்லாத மூர்க்கர்க்கு எத்தனைதான்

——புத்தி போதிக்கினும்

நல்லார்க்கு உண்டான குணம் வருமோ?

——நடுச் சாமத்திலே

சல்லாப் புடவை குளிர் தாங்குமோ?

——பெரும் சந்தையினில்

செல்லாப் பணம் செல்லுமோ? தில்லை

——வாழும் சிதம்பரனே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: படிக்காசுத் தம்பிரான்

(நேரடியாகப் படித்தாலே பொருள் புரியக்கூடிய பாடல்தான். இருந்தாலும் ஒரு சாத்திரத்துக்கு விளக்கம் எழுதிவைக்கிறேன் :))

சிதம்பரத்தில் வாழும் இறைவனே,

நடுச்சாமப் பொழுது, நடுங்கவைக்கும் குளிர், அந்த நேரத்தில் ஒரு மெலிதான புடவையை எடுத்துப் போர்த்திக்கொண்டால் குளிர் தாங்குமா? ஒரு பெரிய சந்தையில் செல்லாத பணத்தைக் கொடுத்தால் யாராவது வாங்கிக்கொள்வார்களா? அதுபோல, பொல்லாதவர்களுக்கு நாம் என்னதான் அறிவுரை சொன்னாலும், அவர்களுக்கு நல்லவர்களுடைய குணம் வரவே வராது!

010/365

This entry was posted in அறிவுரை, ஆண்மொழி, தனிப்பாடல். Bookmark the permalink.

4 Responses to குணம் வருமோ?

 1. amas32 says:

  உரை நல்லதே 🙂
  amas32

  • என். சொக்கன் says:

   அட, ‘கறை நல்லது’வை நினைவுபடுத்தும் சுவையான பின்னூட்டம். நன்றி :>

 2. Mukundaraj Munisamy says:

  சொக்கன்,

  இந்த வரிகளின் பொருள் இப்படியும் இருக்குமோ?

  ”பெரும் சந்தையினில் செல்லாப் பணம் செல்லுமோ?”

  “ஒரு பெரிய சந்தையில் செல்லாத பணத்தைக் கொடுத்தால் யாராவது வாங்கிக்கொள்வார்களா?”

  பெரிய சந்தையிலேயே மாற்ற முடியாத பணத்தை, ஒரு சின்ன ஊர்/சந்தையில் மாற்ற முடியுமா? அதாவது, தாமஸ் குக்கிலேயே மாத்த முடியாத சோமாலியா பிராங்கை எங்க ஊர் கோயிஞ்சாமி பொட்டி கடையில எப்படி சார் மாத்தறது?
  அந்த மாதிரி, இது எல்லாம் தேறாத கேசுங்க, இதுங்களையெல்லாம் பேசி நல்லவனா மாத்த முடியாது!

  Mukund

  • என். சொக்கன் says:

   சுவாரஸ்யமான கோணம். நன்றி நண்பரே 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s