உருகிய பாவை

முனிபரவும் இனியானோ – வேத

—–முழுப்பலவின் கனிதானோ

கனியில் வைத்த செந்தேனோ – பெண்கள்

—–கருத்துருக்க வந்தானோ

தினகரன்போல் சிவப்பழகும் – அவன்

—–திருமிடற்றில் கறுப்பழகும்

பனகமணி இருகாதும் – கண்டால்

—–பாவையும்தான் உருகாதோ!

வாகனைக் கண்டு உருகுதையோ – ஒரு

—–மயக்கம் அதாய் வருகுதையோ

மோகம் என்பது இதுதானோ – இதை

—–முன்னமே நான் அறிவேனோ

ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற

—–அன்னை சொல்லும் கசந்தேனே

தாகமின்றிப் பூணேனே – கையில்

—–சரிவளையும் காணேனே!

நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: திரிகூடநாதர்மேல் காதல் கொண்ட வசந்தவல்லி பாடுவது

(பெரும்பாலும் நேரடியாகவே அர்த்தம் புரிந்துவிடும் பாடல்தான் இது. ஆகவே முடிந்தவரை பாட்டில் இருக்கும் சொற்களையே பயன்படுத்தியிருக்கிறேன்)

இவன் (அகத்திய) முனிவர் வணங்குகிற இனியவனோ, வேதம் என்கிற முழுப் பலாவின் கனியோ, அந்தக் கனிக்குள் இருக்கும் செந்தேனோ, பெண்களின் நெஞ்சை உருக்க வந்தவனோ!

சூரியனைப்போல் இவனுடைய சிவப்பழகு, கழுத்தில்மட்டும் கருப்பழகு, இரு காதுகளிலும் பாம்பு ஆபரணங்கள்.. இதையெல்லாம் கண்டு இந்தப் பாவை உருகி நிற்கிறாள்!

அடடா, இந்த அழகனைப் பார்த்து என் மனம் இளகுகிறதே, ஒருமாதிரி மயக்கமாக வருகிறதே, இப்படி ஓர் உணர்வை நான் இதற்குமுன்னால் அறிந்ததில்லையே, மோகம் என்பது இதுதானா?

இவனைக் கண்டபிறகு, என் உடம்பெல்லாம் பசலை படர்ந்தது, தாய் சொல் கசந்தது, உடம்பெல்லாம் மெலிந்து கை வளையல்கள் கழன்றுவிட்டன, இவன்மேல் கொண்ட காதலைத்தவிர என் உடலில் வேறு ஆபரணங்களே இல்லை!

துக்கடா:

 • ’திருக்குற்றாலக் குறவஞ்சி’ முழுமையாக (விளக்க உரையுடன்) வாசிக்க: http://218.248.16.19/library/l5510/html/l5510ind.htm
 • இந்தப் பாடல் புன்னாகவராளி ராகம், ரூபக தாளத்தில் பாடப்படுமாம் – ஆடியோ வடிவம் தேடினேன், கிடைக்கவில்லை, உங்களுக்குக் கிடைத்தால் கொடுங்கள், இந்தப் பதிவில் சேர்த்துவிடலாம்

006/365

This entry was posted in அகம், காதல், குறவஞ்சி, சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பெண்மொழி, வர்ணனை. Bookmark the permalink.

13 Responses to உருகிய பாவை

 1. Raviaa says:

  //பெரும்பாலும் நேரடியாகவே அர்த்தம் புரிந்துவிடும் பாடல்தான் இது// oh oh

  பசலை = spinach ??

  • என். சொக்கன் says:

   ’பசலை’ ரொம்ப நீளமா விளக்கவேண்டிய மேட்டர் 🙂 இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதப்பார்க்கிறேன், இப்போதைக்குக் ’காதலன் பிரிவினால் காதலி உடலில் நிறமாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும் நோய்’ன்னு வெச்சுக்குவோமா? 🙂

   • Raviaa says:

    இப்போ நினைவுக்கு வர மாதிரியிருக்கு !! #தமிழ் வாத்தியார் #சிம்ம செப்பனம்

   • என். சொக்கன் says:

    🙂

 2. Raviaa says:

  ////பெரும்பாலும் நேரடியாகவே அர்த்தம் புரிந்துவிடும் பாடல்தான் இது//

  மதிப்பிடு அதிகம்மாயில்லை ?

  • என். சொக்கன் says:

   ஏன்ங்க? முனி, இனியான், வேதம், முழுப்பலவு, கனி, வைத்த, செந்தேன், பெண்கள், உருக்க வந்தானோ, தினகரன், சிவப்பழகு, அவன், கறுப்பழகு, இரு, காது, கண்டால், பாவை, உருகாதோ, கண்டு, ஒரு, மயக்கம், அதாய், வருகுது, மோகம், என்பது, இதுதானோ, முன்னமே, நான், அறிவேனோ, எல்லாம், பெற்ற, அன்னை, சொல், கசந்தேனே, தாகம், இன்றி, பூணுதல், கை, வளை, காணேன் …. பெரும்பாலான சொற்கள் நாம் இன்றைக்கும் பயன்படுத்தக்கூடியதாகதானே இருக்கிறது? அதைத்தான் சொன்னேன்!

   • Raviaa says:

    உண்மைத்தான் ! ரிலேடிவலி சுலபம் தான் ! எல்லா பாடல்களுக்கும் இப்படியே எழுதிடப்போறிங்க . பயந்துவிட்டேன் !! 🙂

   • என். சொக்கன் says:

    //ரிலேடிவ்லி சுலபம்// அதான் மேட்டர். நான் சொல்ல மறந்த வார்த்தையைப் பிடிச்சுட்டீங்க

 3. சுப இராமனாதன் says:

  திரிகூடராசப்பக் கவிராயர் நக்மாவை வர்ணித்து எழுதிய பாடலுக்கு விளக்கம் எழுதுமையா. 🙂


  http://www.gugalyrics.com/INDIRAIYO-IVAL-LYRICS/431774/

 4. சுப. இராமனாதன் says:

  பின்வரும் திரைப்படங்களில் வந்த (இலக்கியப்) பாடல்களில் உள்ள இலக்கிய வரிகளை விளக்குபவர்களுக்கு, தமிழ் இணையம் என்றென்றும் நன்றி நவிலும். 🙂

  காதலன் – இந்திரையோ…
  தேவர் மகன் – மாசறு பொன்னே வருக…
  தளபதி – குனித்த புருவமும் கொவ்வை…
  இருவர் – நறுமுகையே… (பாடலில் வரும் பல இலக்கியத் தாக்கங்கள்)
  திருவிளையாடல்(?) – முத்தைத் தரு பத்தித் திருநகை…

 5. Pingback: மும்முனைப் போட்டி « தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s