கொடு, விடு, எடு, கெடு

கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்

உயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின்

கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின்

வெகுளி கெடுத்து விடல்

நூல்: நான்மணிக்கடிகை (#81)

பாடியவர்: விளம்பிநாகனார்

சூழல்: நான்மணிக்கடிகை என்பது 106 பாடல்களைக் கொண்ட சிறு நூல். ஒவ்வொரு பாடலிலும் நான்கே வரிகளில் நான்கு கருத்துகளைச் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்வதால் புகழ் பெற்றது. உதாரணமாக, 106 Slides கொண்ட ஒரு powerpoint presentationனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள், அந்த Slideகள் ஒவ்வொன்றிலும் சரியாக நான்கே நான்கு Bullet Points – அறிமுகம், விளக்கம் என்றெல்லாம் நீட்டி முழக்காமல் சட்டென்று விஷயத்துக்கு வந்து முடிந்துவிடும் அல்லவா? – அதுதான் நான்மணிக்கடிகை. இந்தப் பாடலில் கொடுப்பது, விடுவது, எடுப்பது, கெடுப்பது என்கிற நான்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன:

  • ஒருவருக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? சாப்பாடு கொடுங்கள்
  • உங்களுடைய பழக்கங்களில் ஏதாவது ஒன்றை விட்டுவிடவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உயிர்மீது ஆசை, பற்று வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதை விட்டுவிடுங்கள்
  • யாரையாவது ஆதரவு அளித்துக் காப்பாற்றவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய உறவினர்களிலேயே மிகவும் ஏழை யார் என்று பார்த்து அவர்களுக்கு உதவுங்கள்
  • எதையாவது கெடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய கோபத்தைக் கெடுத்துக்கொள்ளுங்கள்
004/365
Advertisements
This entry was posted in அறிவுரை, நான்மணிக்கடிகை. Bookmark the permalink.

10 Responses to கொடு, விடு, எடு, கெடு

  1. sivaramang says:

    மிகவும் அருமையான பாடல். அறிமுகத்திற்கு நன்றி!

  2. bmurali80 says:

    வெகுளியின் பொருள் சினம் என்று இப்போது தான் தெரிந்தது.

    • என். சொக்கன் says:

      வெகுளின்னா அப்பாவி இல்லையோ? ஓ, அது வேற வெகுளியோ? :))))

  3. ஒண்ணு ஈசி. மூணு முயற்சி செய்யலாம். ரெண்டும் நாளும் கஷ்டம் சாமி.

  4. #திருத்தம்: ரெண்டும் நாலும் 🙂

    • என். சொக்கன் says:

      முயற்சி செய்யும்வரை சந்தோஷம் 🙂

  5. salemdeva says:

    திருக்குறளைப் படித்து இதை முயற்சி செய்திருப்பாரோ..?! அருமை.

    • என். சொக்கன் says:

      திருக்குறளின் காலம் எது என்று நிச்சயமாகத் தெரிந்தால் சொல்லலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s