உண்டேன்

வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
சுருக்குண்டேன், சோறு(உ)ண்டி லேன்

நூல்: தனிப்பாடல்
பாடியவர்: ஔவையார்
சூழல்: கீழே காண்க

பாண்டியன் வீட்டில் திருமணம். ஔவையாருக்கு அழைப்பு செல்கிறது. அவரும் புறப்பட்டு வருகிறார். ஆனால் கல்யாண வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். அந்தத் தள்ளுமுள்ளுக்கு நடுவே ஔவையாரால் சமாளிக்கமுடியவில்லை. சாப்பிடாமலே புறப்பட்டு வந்துவிடுகிறார்.

களைப்போடு வரும் ஔவையாரைப் பார்த்து யாரோ கேட்கிறார்கள். ‘என்ன பாட்டி? கல்யாண வீட்டில் சாப்பாடு பலமோ?’

‘உண்மைதான்’ என்கிறார் ஔவையார். ‘வளமையான தமிழை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்டவன் பாண்டியன் வழுதி, அவனுடைய வீட்டுக் கல்யாணத்தில் நான் உண்ட கதையைச் சொல்கிறேன், கேள்!’

’ராஜா வீட்டுக் கல்யாணம் அல்லவா? அங்கே ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் நெருக்குண்டேன், தள்ளுண்டேன் (நெருக்கித் தள்ளப்பட்டேன்), பசியால் சுருக்குண்டேன் (வயிறு சுருங்கினேன்), ஆனால் சோறுமட்டும் உண்ணவில்லை!’

பின்குறிப்பு: ட்விட்டரில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நண்பர் @kryesக்கு நன்றி 😉

003/365

Advertisements
This entry was posted in ஔவையார், கதை கேளு கதை கேளு, குறும்பு, தனிப்பாடல், நண்பர் விருப்பம், பாண்டியன், பெண்மொழி, வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

7 Responses to உண்டேன்

 1. jai says:

  wow nandri thalaiva for tamil blog

  • என். சொக்கன் says:

   நன்றி

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 2. நன்றி சொக்கரே, கேட்ட பாட்டை இட்டமைக்கு:)
  தமிழ்ப் பாக்களின் சுவையே தனி!
  அதுவும் ஒளவையின் வெண்பாக்களில் சும்ம்மா ஒரு எள்ளல், கம்பீரம், உவமை, நச்-கருத்து-ன்னு ரஜினி ரேஞ்சுக்கு இருக்கும்! 🙂

  நெருக்கு-உண்டேன், தள்-உண்டேன், நீள்பசியாலே சுருக்கு-உண்டேன், சோறு-(உ)ண்டி லேன்! ஆகா!

  • என். சொக்கன் says:

   நன்றி கண்ணபிரான் – ஔவையாரின் தனிப்பாடல்கள் புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியவில்லை, எளிமையும் கனமும் குறும்பும் உவமைகளும் ஆஹா ஆஹா!

   பை த வே, அப்பப்போ இப்படி ரிக்வெஸ்ட் கொடுத்தா எனக்குத் தேடும் நேரம் மிச்சமாகும் 😉

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 3. சுப. இராமனாதன் says:

  உண்டேன் என்ற சொல் மற்ற வார்த்தைகளில் வருவதை எவ்வளவு அருமையாகக் கையாண்டிருக்கிறார் புலவர்! அருமை!

  எனினும், வைரமுத்துதான் என்றும் என் முத்து! 🙂
  சொல்லாண்மையை விட பொருளாண்மையே அவர் சொத்து.

  இதே போல ‘தேன் தேன் தேன்’ என்னும் பாடலில் (திரைப்படம்: குருவி) தேன் என்ற சொல்லின் சொல்லாடல் நினைவுக்கு வருகிறது. http://www.paadalvarigal.com/281/thaen-thaen-thaen-kuruvi-song-lyrics.html

  • என். சொக்கன் says:

   நன்றி நண்பரே – வைரமுத்து இதைச் சிறப்பாகக் கையாண்டது உண்மைதான், அந்த விஷயத்தில் ஔவையும் காளமேகமும் அவரது முன்னோடிகள்,

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 4. GiRa ஜிரா says:

  இந்தப் பாடலை எழுதியது பிற்காலத்து ஔவையாகத்தான் இருக்க வேண்டும்.

  வழுதி என்பது பாண்டிய மன்னர்களின் பெயர். பாண்டியன் என்று கூடச் சொல்ல வேண்டாம். வழுதி, மாறன், செழியன் என்றாலே பாண்டியர்கள். அதே போல ஆதன் என்றால் சேரன்.

  அந்தக் காலத்தில் மன்னனாக இருப்பவம் படித்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. இன்றைக்குக் கல்விக்கனல் காமராஜர் படித்தாரா என்று கேட்டுக் கொண்டே அரைகுறைகள் அரசியல் செய்கின்றன.

  சரி. பாட்டுக்கு வருவோம். தமிழ்ப் பதிவில் அரசியல் எதற்கு! 🙂
  உண்டேன் உண்டேன் என்று பாட்டி அடுக்கும் போது உண்டு ஏன்? உண்டு ஏன்? என்று கேட்பது போலவே இருக்கிறேன்.

  நெருக்கு உண்டு ஏன்?
  தள் உண்டு ஏன்?
  சுருக்கு உண்டு ஏன்?
  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை “சோறு உண்டிலேன்”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s