365பா

ட்விட்டரில் நிறைய ‘365’ ப்ராஜெக்ட்களைப் பார்க்கிறேன். குறிப்பாக, நண்பர் ஸ்கான்மேன் (டாக்டர் விஜய் – http://www.twitter.com/scanman)  தினம் ஒரு ஃபோட்டோ எடுத்து வலையேற்றும் ப்ராஜெக்ட் மிகச் சுவாரஸ்யமானது.

எனக்குப் புகைப்பட ஞானம் கிடையாது. ஆகவே, எனக்குத் தெரிந்த எதையாவது செய்யலாம் என்று நினைத்தேன் – இந்த வலைப்பதிவில் தினம் ஒரு பழம்பாடலைத் தேர்ந்தெடுத்து எளிய / சிறிய விளக்கத்தோடு எழுதலாம் என்று யோசனை. முடிகிறதா பார்க்கலாம்!

சில முன்னெச்சரிக்கைகள்:

 • நான் பழம்பாடல் பிரியன்மட்டுமே, மற்றபடி கவிதை விஷயத்தில் எனது அழகுணர்ச்சி ரொம்பக் குறைவு, நேரடிப் பொருளில்மட்டுமே திருப்தி அடைந்துவிடுகிறவன் – ஆகவே, இந்தப் பாடல்களில் தென்படும் நுணுக்கமான அழகியல் அம்சங்களை / இறைச்சிப் பொருள்களை / மாற்று அர்த்தங்களை என்னால் வியந்து பாராட்டமுடியாமல் போகலாம், அப்படி நான் தவறவிடும் விஷயங்களை நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்
 • இங்கே நான் எழுதுகிற விளக்கங்கள் எனக்குப் புரிந்த அளவில்மட்டுமே, தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் – சுட்டிக்காட்டினால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்
 • இந்த விளக்கங்கள் பண்டித மொழிநடையிலன்றி சகஜமான உரையாடல் பாணியில்தான் இருக்கும், தேவைப்பட்டால் எங்கேயாவது ஆங்கிலம்கூடக் கலந்திருக்கும், கோபப்படவேண்டாம், மொழிச் சுத்தத்தைவிட, வாசிப்பு இலகுவாக இருப்பதுதான் முக்கியம் என்பது என் கட்சி!
 • இந்தப் பாடல்களைத் தேர்ந்தெடுக்க நான் எந்தக் கண்டிப்பான வரையறைகளையும் வைத்துக்கொள்ளப்போவதில்லை – தினமும் ஒரு தமிழ்ப் பாடல் என்பதைத் தவிர. ஆகவே, இதை எப்படி விடப்போச்சு, அதை எப்படிச் சேர்க்கலாம், இந்தப் பாட்டைவிட அந்தப் பாட்டு பெட்டர் என்றெல்லாம் தயவுசெய்து கோபப்படாதீர்கள், அப்படிக் கவனித்து, எடைபோட்டுத் தொகுப்பதெல்லாம் டெய்லி ப்ராஜெக்டுக்குச் சரிப்படாது
 • வேறு முன்னெச்சரிக்கைகள் அவ்வப்போது சேர்க்கப்படும், ஜாக்கிரதை :>

பின்னெச்சரிக்கை ஒன்று:

 • ’எதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை?’ என்று யோசித்தீர்களானால் உங்களுக்குத் தமிழ் இணையம் புதுசு என்று அர்த்தம் 😉

***

என். சொக்கன் …

06 07 2011

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 365பா

 1. salemdeva says:

  அருமையான முயற்சி..!! வாழ்க உங்கள் தமிழார்வம்..!!

  • என். சொக்கன் says:

   நன்றி சேலம் தேவா

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 2. Jagan says:

  ஆஹா, சதா கரண்ட் அஃபேர்ஸ், மொக்கை தமிழக அரசியல், வில்லங்கம் பிடித்த ப்திவுலக அரசியல் போன்றவை தவிர்த்து இது போல் படிக்க நன்றாக இருக்கும். வந்தனம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s