நான் முட்டாள்தான்

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக; மடந்தை நாமே!

நூல்: குறுந்தொகை (#20)

பாடியவர்: கோப்பெருஞ்சோழன்

திணை: பாலை

சூழல்: காதலன் சம்பாதிப்பதற்காகக் காதலியைப் பிரிந்து செல்கிறான். இந்தத் தகவலைக் காதலியிடம் சொல்கிறாள் தோழி. அதற்குக் காதலி சொல்லும் பதில் இந்தப் பாடல்

என் காதலருக்கு என்மேல் அன்பும் இல்லை, அக்கறையும் இல்லை, காசு சம்பாதிப்பதற்காக என்னைப் பிரிந்து போய்விட்டார்.

இப்படிப் பணத்துக்காகத் துணையைப் பிரிந்து போவதுதான் புத்திசாலித்தனம் என்றால், அவரே புத்திசாலியாக இருக்கட்டும், நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!

001/365

Advertisements
This entry was posted in அகம், குறுந்தொகை, பெண்மொழி, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to நான் முட்டாள்தான்

 1. முதல்பாட்டோட தலைப்பே அமர்க்களமா இருக்கேன்னு ஆசையா ஓடிவந்தா, அதைச் சொல்றது ‘தலைவி’. 😦

  ஆனா பாடல்ல அவன் இவன்னு ஏகவசனமாவா தலைவி தலைவனை(உரவோர்)க் குறிப்பிடறாங்க?

  உங்க பொருள்படிச்சு பாட்டைப்படிச்சா சுலபமான பாடல்மாதிரிதான் இருக்கு. A good start.

 2. என். சொக்கன் says:

  நன்றி ஜெயஸ்ரீ,

  காலத்துக்கு ஏத்தமாதிரி ‘அவர்’ எல்லாம் ‘அவன்’ ஆகவேண்டியதுதான் 🙂 (By the way, இது சப்பைக்கட்டு இல்லை, conscious ஆகச் செய்ததுதான், காதல் கவிதைகளில் ஒருவருக்குமட்டும் ‘அவர்’ போட்டால் அன்னியமாகத் தொனிக்கும்)

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

  • நானே அப்படித்தான் என்பதால் எனக்கு அதில் ஏதும் ஆட்சேபணை இல்லை. சும்மா, அந்தக் காலத்தில் வழக்கு எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன். கருத்து பழையதாக இருக்கும்போது வழக்கும் அப்படி இல்லாமல் இருப்பதுதான் அந்நியமாக இருக்கிறது. (இப்பொழுது பொருள் ஈட்ட தலைவிகளே தனியாகப் போகும்காலம்..)

   • என். சொக்கன் says:

    நீங்கள் சொல்வது சரிதான், ஏனோ எனக்கு இப்படி எழுதுவதுதான் பிடித்திருந்தது – கருத்தும் காலமும் பொருந்தாமல் போவது அபத்தமாக உள்ளது புரிகிறது – மாற்றிவிட்டேன், இனி இதுபோல் எழுதும்போது கவனமாக இருக்கிறேன், மிக்க நன்றி!

    – என். சொக்கன்,
    பெங்களூரு.

 3. சோழ மன்னன் இந்தப் பாடலை எழுதுவதற்கான சூழல் எப்படி அமைந்தது என்று தான் புரியவில்லை!

  • என். சொக்கன் says:

   அந்தக் காலத்தில் பல அரசர்கள் புலவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் தலைவா!

 4. தன் நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வை சோழ மன்னன எழுதுகிறானா? நிச்சயமாக அரசன் பொருளீட்ட வேறு ஊர் செல்லப் போவதில்லை! 🙂

  வடிவேலு பாஷையில் சொல்லப் போனால் பாடல் ரொம்ப சிம்பிளாக உள்ளது. நாமே வீட்டில் அப்படித்தான் கோபித்துக் கொள்வோம். நீங்கள் அறிவாளியாகவே இருங்கள், நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொல்வது கணவன் மனைவியின் குடும்பச் சண்டையில் ரொம்ப சகஜம்.

  ஆனால் போருளீட்டச் செல்லும் தலைவனைப் பார்த்து பிரிவாற்றாமையால் தலைவி இவ்வாறு சொல்கிறாள். என்ன செய்வது அவளை நன்றாக வைத்துக் காப்பாற்றவும் அந்தப் பொருள் தேவைப் படுகிறதே!

  amas32

 5. ஆனந்தன் says:

  நல்ல தன்னடக்கமான தலைப்பு! அவையடக்கத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்!

 6. GiRa ஜிரா says:

  புரவலன் புலவனாகிய பாடல் இது. 🙂

  அதிலும் ஒரு பெண்ணின் பார்வையில் கவிதை.

  சொற்களைக் கோர்த்திருக்கும் அழகை திரும்பத் திரும்பச் சுவைக்கிறேன். அலுக்கவேயில்லை.

  பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக
  மடவம் ஆக மடந்தை நாமே

  அடடா! இதுதான் புத்திசாலித்தனம்னா நான் முட்டாளாவே இருந்துக்கிறேன்.

  இந்த நூலுக்குப் போய் குறுந்தொகைன்னு பேர் வெச்சிட்டாங்களே! பெருந்தொகைன்னு பேர் வெச்சிருக்கலாம். படிச்சுப் படிச்சு நாம் மகிழ்ச்சி பெறுந்தொகைன்னும் வெச்சிருக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s