தினம் ஒரு ’பா’

கற்பித்தானா?
கல்லைத்தான் மண்ணைத்தான்

….காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான்

….எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?

அல்லைத்தான் சொல்லித்தான்

….ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்

….புவியில்தான் பண்ணினானே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்

சூழல்: வறுமையில் வாடும் ஒரு புலவர். தன்னுடைய நிலைமையை எண்ணி வருந்திப் பாடுகிறார்

தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா, என்னைப் படைத்தபோதே கையில் கொஞ்சம் தங்கத்தைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கவேண்டும், இல்லாவிட்டால், கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும்.

அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் படுகின்ற துன்பத்தை எங்கே சொல்லி நோவது? இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே!

துக்கடா

உரையைவிடப் பாட்டுதான் நன்றாகக் களை கட்டுகிறது. இல்லையா?

அதனால்தான், ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள் அழகான வசனமாகப் பயன்படுத்தப்பட்டன. மீதிப் பாட்டையும் சேர்த்துப் படித்தால் அந்தக் காலக் கவிஞர்கள் அனுபவித்த வேதனை முழுசாகப் புரியும்

231/365

அமுதம்!
அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல்வண்ணன்

உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு உழைத்து ஆண்டு

இன் அமிர்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்

‘நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமிழ்து பில்கு உற்று

அறத்தின் விளை ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும்

நிறத்துவர் இதழ்க் குயில் நினைப்பிடை அல்லால்

புறத்தும் உளதோ?’ என மனத்தொடு புகன்றான்

நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், கோலம் காண் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: ஜனகனின் சபையில் எல்லார் முன்பாகவும் தோன்றுகிறாள் சீதை. அப்போது ராமன் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்

’இந்த ஜனகனின் மகள், முன்பு கன்னி மாடத்தில் நான் பார்த்த பெண்தானா?’ என்று ராமனுக்குச் சந்தேகம்.

’அவளாகதான் இருக்கும்’ என்று ஒரு மனம் சொல்கிறது, ‘ம்ஹூம், இருக்காது’ என்று இன்னொரு மனம் மறுக்கிறது. ஒரே குழப்பம்.

இப்போது, சீதை வருகிறாள். அவள் முகத்தைக் கண்டதும் ராமனுக்கு மகிழ்ச்சி. ‘அவளேதான் இவள்’ என்று உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டான். அந்த ஆனந்தத்தில் திளைத்தான்.

முன்பு ஒரு காலத்தில், தேவர்களும் அசுரர்களும் கஷ்டப்பட்டுப் பாற்கடலைக் கடைந்தார்கள். அந்த உழைப்பின் பலனாக, அவர்களுடைய உயிரை என்றும் உடலில் நிலைத்து நிற்கச் செய்யும் அமுதம் தோன்றியது. அதைக் கண்டு இந்திரனும் மற்றவர்களும் மகிழ்ந்தார்கள்.

இப்போது சீதை என்கிற கன்னி அமுதத்தைக் கண்டு ராமன் அடைந்த மகிழ்ச்சியும் அதேமாதிரியானதுதான்.

அப்போது, ராமன் தன் மனத்துக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டான்:

’சிவந்த இதழ்களைக் கொண்ட இந்தக் குயிலை அன்றைக்கு நான் கன்னிமாடத்தில் பார்த்தேன். தேனில் ஊறிய இனிப்புபோல், நல்ல அறச் செயல்களைச் செய்வதனால் கிடைக்கும் பலன்களைப்போல் இனிமையானவளாக இவள் எனக்குத் தோன்றினாள்.’

‘அந்தக் கணமே, அவள் என்னுடைய நெஞ்சுக்குள் புகுந்துவிட்டாள். இப்போதும் அங்கேதான் நிரந்தரமாகக் குடியிருக்கிறாள்.’

‘ஆச்சர்யமான விஷயம், என் மனத்துக்குள்மட்டும் வாழ்கிறாள் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண், இங்கே வெளியே உயிரோடு வந்து நிற்கிறாளே. ஆச்சர்யம்தான்!’

230/365

பவனி
இடியின் முழக்கொடு படரும் முகிலென

….யானைமேல் கனபேரி முழக்கமும்

துடியின் முழக்கமும் பரந்து திசைக் கரி

….துதிக்கையால் செவி புதைக்கவே,

அடியர் முழக்கிய திருப்பல்லாண்டு இசை

….அடைத்த செவிகளும் திறக்க, மூவர்கள்

வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம்,

….மறைகள் ஒருபுறம் வழங்கவே,

பவனிவந்தனரே,

மழவிடைப் பவனி வந்தனரே!

நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: திரிகூடநாதர் (சிவபெருமான்) வீதியில் பவனி வருகிறார்

முதலில், யானைகள் நடந்துவருகின்றன. அவற்றின்மேல் பெரிய முரசுகளை வைத்து அடிக்கிறார்கள். பலத்த சத்தம் எழுகிறது. அதைப் பார்க்கும்போது, மேகங்களுக்கு நடுவே ஒலிக்கும் இடி ஓசையைப்போல் இருக்கிறது.

முரசு ஒலியும், கூடவே உடுக்கையின் ஒலியும் சேர்ந்து பலமாக ஒலிப்பதால் எங்கும் சத்தம் அதிர்கிறது. எட்டுத் திசைகளையும் காவல் காக்கும் யானைகள் இந்த ஓசையைக் கேட்டுப் பயந்துபோகின்றன. தும்பிக்கையால் தங்களுடைய காதைப் பொத்திக்கொள்கின்றன.

அதன்பிறகு, பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் சிவபெருமானைப் போற்றிப் பாடும் ‘திருப்பல்லாண்டு’ இசை இனிமையாக ஒலிக்கிறது. மூடிய காதுகள் திறக்கின்றன.

அடுத்து, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களும் பாடிய தமிழ்மறையாகிய தேவாரப் பாடல்கள் பாடப்படுகின்றன, வேதங்களும் பாடப்படுகின்றன, இத்தனையையும் கேட்டுக்கொண்டு காளையின்மீது பவனி வருகிறார் திரிகூடநாதர்.

துக்கடா

இன்றைய ‘சிவராத்திரி’ சிறப்புப் பாடல் இது!

திருக்குற்றாலக் குறவஞ்சியில் வருகிற அருமையான பத்து பவனிப் பாடல்களில் ஒன்றைமட்டும்தான் இங்கே தந்திருக்கிறேன். மிச்சத்தைத் தேடிப் படியுங்கள், நேராக ஒரு கோயில் ஊர்வலத்தில் நின்றதுபோல் பிரமை ஏற்படுவது நிச்சயம்!

‘அஷ்டதிக்கஜங்கள்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அஷ்டம் (எட்டு) + திக்கு (திசை) + கஜங்கள் (யானைகள்) = எட்டு திசைகளையும் காவல் காக்கும் அந்த யானைகள்தான் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை ராவணன் என்ன செய்தான் தெரியுமோ? தேடுங்கள்

யானைகளுக்கு மேகங்கள் உவமை, அந்த யானைகளுக்குமேலே ஒலிக்கும் முரசுச் சத்தத்துக்கு அந்த மேகங்களுக்கு இடையே ஒலிக்கும் இடிச் சத்தம் உவமை. மிகப் பொருத்தமானது!

229/365

அலை எப்போது அடங்கும்?
பெரும் கால் ஆடிய சென்றார் ஒருங்கு உடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்று அற்றால்

இல் செய் குறைவினை நீக்கி அறவினை

மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு

நூல்: நாலடியார் (#332)

பாடியவர்: சமண முனிவர்கள்

சிலர் தான தர்மங்களே செய்யமாட்டார்கள். கேட்டால் ‘முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகளையெல்லாம் குறைவில்லாமல் முழுமையாகச் செய்து முடித்துவிடுகிறேன், அதன்பிறகுதான் மற்றவர்களுக்கு உதவி செய்ய நேரம் ஒதுக்கமுடியும்’ என்பார்கள்.

கடலுக்குக் குளிக்கச் செல்கிற ஒருவன் ‘அலை அதிகமாக உள்ளது, இந்த அலைகளெல்லாம் அடங்கியபின் குளித்துக்கொள்ளலாம்’ என்று கையைக் கட்டிக்கொண்டு காத்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்? அதுபோன்ற மடத்தனம்தான் இதுவும்!

அலைகளுக்கு நடுவே சமாளித்துக் குளிப்பதுபோல், இல்லறக் கடமைகளைக் கவனித்தபடி தன்னால் இயன்ற நன்கொடைகளை அளிப்பது, பொதுநலத்துக்காகப் பாடுபடுவதுதான் நல்லது.

துக்கடா

இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றன்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு

228/365

விவசாயி!
மெய்ம்மையாம் உழவைச் செய்து

….விருப்பு எனும் வித்தை வித்திப்

பொய்மையாம் களையை வாங்கிப்

….பொறை எனும் நீரைப் பாய்ச்சித்

தம்மையும் நோக்கிக் கண்டு

….தகவு எனும் வேலி இட்டுச்

செம்மையுள் நிற்பர் ஆகில்

….சிவகதி விளையும் அன்றே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருநாவுக்கரசர்

உண்மையான விவசாயம் என்பது எது தெரியுமா?

மனம் ஆகிய வயலில், நம்முடைய ஆசைகளை / விருப்பங்களை / பற்றுதல்களை விதையாக விதைக்கவேண்டும், பொய்யாகிய களைகளை நீக்கவேண்டும், பின்னர் அந்த வயலில் பொறுமையை நீராக ஊற்றிக் காத்திருக்கவேண்டும், அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் நம்மை நாமே கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளவேண்டும், நம்மைச் சலனப்படுத்தக்கூடிய விஷயங்கள் அருகே வந்து நம் கவனத்தைக் குலைத்துவிடாதபடி அந்த மன வயலைச் சுற்றிலும் வேலி அமைத்துக் காப்பாற்றவேண்டும்.

இப்படிச் சிறப்பாக விவசாயம் செய்தால், அதன் பலனாக நம் மனத்தில் விளைந்து நிற்கப்போகும் பயிர், சிவபெருமானுடைய பாதங்களைச் சென்று அடைகிற வரம்!

துக்கடா

இந்தப் பாடல் ஒலி வடிவத்தில் கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது, இதேமாதிரியான ஒரு கருத்தில் பாரதியார் எழுதிய ஒரு கவிதை கிடைத்தது. அந்தக் கவிதை கீழே, அந்தக் கட்டுரைக்கான இணைப்பு இங்கே : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamil%20Mani&artid=252256&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81

அன்பு நீர் பாய்ச்சி, அறிவு எனும் ஏர் உழுது,

சாத்திரக் களை போக்கி, வேதப் பயிர் செய்து,

இன்பப் பயன் அறிந்து தின்பதற்கு மஹாசக்தியின்

வேண்டுகின்றோம், அதனை அவள் தருக!

227/365

பாவி மனம் தூங்கலையே!
கேளாய் எல்ல தோழி! அல்கல்

வேணவா நலிய வெய்ய உயிரா

ஏமான் பிணையின் வருந்தினேன் ஆகத்

துயர் மருங்கு அறிந்தனள்போல அன்னை

’துஞ்சாயோ என் குறுமகள்’ என்றலின்

சொல் வெளிப்படாமல் மெல்ல என் நெஞ்சில்

’படுமழை பொழிந்த பாறை மருங்கில்

சிரல்வாய் உற்ற தளவின் பரல் அவல்

கான்கெழு நாடன் பரந்தோர்க்குக்

கண்ணும் படுமோ’என்றிசின் யானே!

நூல்: நற்றிணை (#61)

பாடியவர்: சிறு மோலிகனார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலி தன் தோழியிடம் பேசுகிறாள்

என் தோழி, உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும், கேள்,

நேற்று இரவு, வழக்கம்போல் என்னுடைய காதலனை ஆசையுடன் நினைத்தேன். உடனே என் உடம்பெல்லாம் கொதித்துவிட்டது. அம்பால் அடிபட்ட ஒரு மானுடைய துணை மானைப்போலப் பெருமூச்சுடன் படுக்கையில் புரண்டு தவித்தேன், துடித்தேன்.

இதை என்னுடைய தாய் கவனித்துவிட்டாள். ‘சின்னப் பொண்ணே, நீ இன்னும் தூங்கலியா?’ என்று விசாரித்தாள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. எனக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டேன். இப்படி:

‘நிறைய மழை பெய்த காட்டு நிலம். அங்கே ஒரு கல் பாறை. அதன் அருகே சிச்சிலிப் பறவையின் வாயைப் போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. பக்கத்தில் பரல் கற்கள் நிறைந்த பள்ளங்கள்.

இத்தகைய கானகத்தின் தலைவனாகிய என் காதலனை நினைத்தபிறகு, எனக்கு எப்படித் தூக்கம் வரும்?’

துக்கடா

இந்தப் பாடல் தோழி சொன்னதாகப் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாடலை வைத்துப் பார்க்கும்போது அது காதலி சொன்னதாகதான் இருக்கவேண்டும்

இன்றோடு ஏழு நாள் ‘அக’க் கொண்டாட்டம் நிறைவடைகிறது. இனிமேல் நாளைமுதல் பக்திக்கும் அறிவுரைக்கும் மற்ற பாடல்களுக்கும் இடம் உண்டு

226/365

உயிர் தர வா
ஒண்சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது

தெண்கடல் அழுவத்துத் திரைநீக்கா எழுதரூஉம்

தண்கதிர் மதியத்து அணிநிலா நிறைத் தரப்

புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலியான்று

வள் இதழ் கூம்பிய மணிமருள் இரும் கழி

பள்ளி புக்கதுபோலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!

தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறமாறத்

தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே,

உறையொடு வைகியபோதுபோல் ஒய் என

நிறை ஆனாது இழிதரூஉம் நீர்நீந்து கண்ணா(ள்)ட்கு

வாராய் நீ புறமாற, வருந்திய மேனியா(ள்)ட்கு

ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே,

கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழுற்ற கோடல்வீ

இதழ்சோரும் குலைபோல இறைநீவு விளையா(ள்)ட்கு

இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகித்

தன் துணைப் பிரிந்த யாஅம் தனிக் குருகு உசவுமே,

ஒண்சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்

நண்பகல் மதியம்போல் நலம் சாய்ந்த அணியா(ள்)ட்கு

என்வாங்கு,

எறிதிரை தந்திட இழிந்த மீன் இன் துறை

மறிதிரை வருந்தாமல் கொண்டு ஆங்கு, நெறி தாழ்ந்து

சாயினள் வருந்தியாள் இடும்பை

பாய் பரிக் கடும் திண் தேர் களையினோ இடனே.

நூல்: கலித்தொகை

பாடியவர்: நல்லந்துவனார்

சூழல்: நெய்தல் திணை : காதலியை விட்டு வெளியூர் சென்றான் காதலன். அவனைப் பிரிந்து இவள் படும் அவஸ்தையைப் பார்க்கமுடியாத தோழி அந்த ஊருக்குச் சென்று காதலனைச் சந்திக்கிறாள், நிலைமையை எடுத்துச் சொல்கிறாள்

சூரியன் மலையைச் சென்று சேர்ந்துவிட்டது. ஆனாலும் உலகம் இருண்டுவிடவில்லை. கடலின் அலைகளைக் கிழித்துக்கொண்டு எழுந்து வருகிறது நிலா. அதன் ஒளி எங்கும் பரவுகிறது.

பறவைக் கூட்டங்களெல்லாம் சாப்பிட்டு முடித்துத் தங்களுடைய கூடுகளுக்குச் சென்றுவிட்டன. அதனால் கடற்கரையில் சத்தம் அடங்கிவிட்டது, மலர்கள் நிறைந்த, நீலமணியின் நிறம் கொண்ட இந்த  உப்பங்கழி தூங்குவதுபோல் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கடற்கரை நிலத்துக்குச் சொந்தக்காரனாகிய தலைவனே,

நீ உன்னுடைய காதலியைப் பிரிந்து வந்துவிட்டாய். அதனால், நீல மலரில் நீர்த்துளி நிற்பதுபோல் அவளுடைய கண்கள் கண்ணீரில் மிதக்கின்றன. தனிமையில் வாடுகின்ற அவளுக்குத் துணையாக இருப்பவை, கடலில் ஆரவாரம் செய்யும் அலைகள்தான்!

மணம் உள்ள காந்தள் மலரின் மகரந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுகின்றன, அதன் இதழ்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்து கீழே விழுகின்றன, அதுபோல, நீ திரும்பி வரவில்லையே என்று வருந்தும் உன் காதலியின் கைகளில் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தபடியிருக்கின்றன.

இருள் நிறைந்த இரவு நேரத்தில், அவளுக்குத் துணை வேறு யார்? அசையும் காற்றுமட்டும்தான்!

நண்பகல் நேரம். வானத்தில் சூரியன் பிரகாசமாகத் தோன்றுகிறது. அந்த வெளிச்சத்தில் அங்கே இருக்கும் நிலா வெளியே தெரியாமல் மங்கிவிடுகிறது. அதுபோல, உயிர்த் துணைவனாகிய நீ அவளைக் கைவிட்டுவிட்டாய், ஆகவே, அவள் வேறு வழியில்லாமல் இணையைப் பிரிந்து வருந்துகின்ற ஒரு குருகுப் பறவையைத் தன் சிநேகிதியாக்கிக்கொண்டிருக்கிறாள்.

ஒரு மீன் கடலில் நிம்மதியாக வாழ்கிறது. திடீரென்று ஒருநாள் அந்தக் கடலில் தோன்றுகிற ஓர் அலை அந்த மீனைக் கரையில் தூக்கிப் போடுகிறது. மூச்சுவிடமுடியாமல் திணறுகிறது அந்த மீன்.

அப்போது, அதே அலை மீண்டும் திரும்பி வருகிறது, மீனைக் கடலுக்குள் கொண்டுசென்று காப்பாற்றிவிடுகிறது.

அதுபோல, பாய்ந்து ஓடும் குதிரைகளைக் கொண்ட  உன்னுடைய பெரிய தேரில் ஏறி அவளைப் பிரிந்து வந்துவிட்டவனே, அதே தேரில் மீண்டும் ஏறித் திரும்பி வா, அவளைப் பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள், அவள் உயிரைக் காப்பாற்று, அதற்கு ஏற்ற நேரம் இதுதான்!

துக்கடா

சங்கப் பாடல்களின் அடர்த்திக்கு இந்தப் பாடல் இன்னுமோர் உதாரணம். தோழி சொல்லும் அனைத்து உதாரணங்களும் கடல் மற்றும் கடல் சார்ந்தவை, காட்சியை அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறவை!

’நண்பகல் மதியம்போல்’ என்பது அற்புதமான உவமை. பகல் நேரத்திலும் வானத்தில் நிலா இருக்கிறது, ஆனால் வெளியே தெரிவதில்லை என்கிற செய்தியை மிக அழகாகக் காதல் பாட்டினுள் நுழைத்திருக்கிறார் கவிஞர்

குறிப்பாக, அந்தக் கடைசி நான்கு வரிகளில் உள்ள மீன் : அலை : உயிர், காதலி : காதலனுடைய தேர் : உயிர் ஒப்பீடு அற்புதமானது, வியக்கவைக்கும் உவமை!

225/365

சில சொட்டு(க்)கள்
கண் களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்

செம்பாகம் அன்று, பெரிது!

நெஞ்சத்தார் காதலவர் ஆக வெய்து உண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து!

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாது செய்வேன்கொல் விருந்து?

நூல்: திருக்குறள் (#1092, #1128, #1211)

பாடியவர்: திருவள்ளுவர்

கள்ளத்தனமாக அவனை அடிக்கடி பார்க்கிறேன். இந்தக் காதல் தரும் இன்பத்தில் பாதிக்குமேல், அந்தத் திருட்டுப் பார்வை தருகிற சுகம்தான்!

அவன் என்னுடைய நெஞ்சுக்குள் இருக்கிறான். அதனால் நான் சூடான பொருள்களைச் சாப்பிட அஞ்சுகிறேன், அவனைச் சுட்டுவிடுமே!

எங்கேயோ இருக்கும் என் காதலனை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டது இந்தக் கனவு. எங்கள் காதலுக்குத் தூதாக வந்திருக்கும் இந்தக் கனவுக்கு என்ன பரிசு தருவது?

துக்கடா

இந்த மூன்று குறள்களைத் தேர்வு செய்வதற்காக, இன்பத்துப் பால் மொத்தமும் இன்னொருமுறை படித்தேன், #365paa தரும் இன்பங்களில் இதுவும் ஒன்று

முதல் குறள் ‘பார்வை ஒன்றே போதுமே’ எனப் பாட்டு வடிவம் பெற்றது தெரியும், அந்த இரண்டாவது குறளை கவிஞர் வாலி தமிங்கிலீஷில் மொழிபெயர்த்து ஒரு சினிமாப் பாட்டுக்குள் பயன்படுத்தியிருக்கிறார், தெரியுமோ? :>

இந்தக் குறள்களின் வெண்பா வடிவம்:

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று, பெரிது!

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து?

224/365

செம்மண்ணில் கலந்த தண்ணீர்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்பு உடை நெஞ்சம்தாம் கலந்தனவே!

நூல்: குறுந்தொகை (#40)

பாடியவர்: செம்புலப் பெயல்நீரார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள், ‘இவன் என்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ?’ என்று அவள் நெஞ்சுக்குள் ஓர் அச்சம். அதைப் போக்குவதற்காக அவன் சொல்லும் வார்த்தைகள் இவை

பெண்ணே,

நேற்றுவரை நீ யார்? நான் யார்? இருவருக்குமே ஒருவரை ஒருவர் அறிமுகம் இல்லை. உன்னுடைய தந்தையும் என்னுடைய தந்தையும் எந்த வழியிலும் உறவினர்கள் இல்லை.

நிலைமை அப்படியிருக்க, நீயும் நானும் ஒருவருக்கு ஒருவர் எப்படி அறிமுகமானோம்? அதுவும் புரியவில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், செம்மண்ணில் தண்ணீர் கலந்தபிறகு, மண் எது நீர் எது என்று பிரிந்து அறியமுடியாததுபோல், அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டறக் கலந்துவிட்டன. இனி நமக்குள் பிரிவே கிடையாது.

துக்கடா

ஏற்கெனவே #365paa வரிசையில் இடம்பெற்ற பாடல் இது. முன்பு இதற்கு உரை எழுதியவர் நண்பர் @rsgiri : http://365paa.wordpress.com/2011/09/12/np02/

இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆகவே பாடலில் இடம் பெறும் முக்கியமான ஒரு வரியையே அவரது பெயராக்கிவிட்டார்கள்

தமிழ் சினிமாவில் இந்தப் பா, குறிப்பாக ‘செம்மண்ணில் கலந்த தண்ணீர்’ என்கிற வரி மிகப் பிரபலம். சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘நறுமுகையே’ உள்படப் பல திரைப்பாடல்களில் இந்த வரி எடுத்தாளப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை வீடியோவுடன் விளக்கும் பதிவு இது : http://karkanirka.org/2010/06/10/kurunthokai-40/ (இந்த இணைப்பைச் சுட்டிக்காட்டியவர் நண்பர் @scanman )

இந்தப் பாடலை (அல்லது தற்காலக் காதலைக்) கேலி செய்து எழுதப்பட்ட புதுக்கவிதை ஒன்று உண்டு. அதை எழுதியவர், கவிஞர் மீரா:

என் தந்தையும் உன் தந்தையும்

ஒரே ஊர்,

வாசுதேவ நல்லூர்.

என் தந்தையும் உன் தந்தையும்

ஒரே ஜாதி,

திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்

நானும் நீயும் உறவின்முறை,

எனது ஒன்றுவிட்ட

அத்தை பெண் நீ.

எனவே

அன்புடை நெஞ்சம்

தாம் கலந்தனவே!

223/365

தேரை விரட்டு
படுமழை பொழிந்த பயமிகு புறவின்

நெடுநீர் அவல பகுவாய்த் தேரை

சிறுபல்லியத்தின் நெடுநெறிக் கறங்கக்

குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி

செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப

வெம்சின அரவின் பை அணந்தன்ன

தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்

திரிமருப்பு இரலை தெள் அறல் பருகிக்

காமர் துணையொடு ஏமுற வதியக்

காடு கவின் பெற்ற தண்பதப் பெருவழி

ஓடு பரி மெலியாக் கொய்சுவல் புரவித்

தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப

ஊர்மதி வலவ தேரே சீர்மிகுபு

நம்வயின் புரிந்த கொள்கை

அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே!

நூல்: அகநானூறு (#154)

பாடியவர்: பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்

சூழல்: முல்லைத் திணை, வேலை முடிந்து திரும்புகிற காதலன் தன்னுடைய தேர்ப்பாகனை ‘விரட்டு’கிறான்

தேர்ப் பாகனே,

பலத்த மழை பொழிகிறது. பயனுள்ள முல்லை நிலத்தின் ஆழமான பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அவற்றில் தங்கியிருக்கும் பிளந்த வாய்த் தேரைகள் சத்தமிடும், ஒலி பல வாத்தியங்கள் கலந்த இசையைப்போல வழி நெடுகிலும் கேட்கிறது.

சிறிய புதர்களில் இருந்து உதிர்கின்ற நீண்ட காம்புகளைக் கொண்ட பிடவப் பூக்கள் செம்மண் நிலமெங்கும் உதிர்ந்து கோலம் போடுகின்றன. கொடூரமான கோபத்தைக் கொண்ட பாம்பின் படம் போல காந்தள் பூக்கள் மலர்ந்து விரிந்து மணக்கின்றன.

முறுக்கிய கொம்பைக் கொண்ட ஆண் மான், தெளிவான நீரைக் குடிக்கிறது. பின்னர் தன் மனத்துக்குப் பிடித்த துணை மானுடன் சென்று தங்குகிறது.

இப்படியாக, மழையும் குளுமையும் இந்தக் காடுமுழுவதையும் அழகு செய்திருக்கின்றன. காட்டின் நடுவே உள்ள பெரிய பாதையில் வேகமான குதிரைகளை ஓட்டிச் செல்கிறாய் நீ.

உன்னுடைய குதிரைகளின் பிடரி மயிர் அளவாகக் கத்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றின் கழுத்தில் உள்ள மாலைகள் கால்வரை தழைந்து தொங்குகின்றன, அந்த மாலைகளில் உள்ள மணி கம்பீரமாகச் சத்தமிடுகிறது.

பாகனே, தேரை இன்னும் வேகமாக ஓட்டு. அழகிய மாமை நிறம் கொண்ட என் காதலி, என்மீது ஆசை வைத்திருக்கும் அந்த அரிவையைச் சீக்கிரமாகச் சென்று சேர்வோம்.

துக்கடா

கார்காலம் தொடங்கிவிட்டது. அவன் காதலியிடம் திரும்பவேண்டிய நேரமும் வந்துவிட்டது. காட்டில் பெய்யும் மழையும் குளிரும் தண்ணீரில் கத்துகின்ற தவளைகளும் செம்மண்ணும் அதில் கிடக்கும் பூக்களும் காற்றில் மிதக்கும் வாசனையும் மான்களும் சகலமும் அவனுக்கு அவளை நினைவுபடுத்துகின்றன. அவளும் இதேபோல் ஏங்கிக் காத்திருப்பாள் என்பதற்காகவும், ‘கார்காலத்தில் திரும்புவேன்’ என்று அவளுக்குக் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும் டிரைவரிடம் காரை, ச்சே, தேரை ‘ஓவர் ஸ்பீடில்’ ஓட்டச் சொல்கிறான். இந்த சிம்பிள் மேட்டரைச் சொல்வதற்கு எத்தனை செறிவான கவிதை!

இந்தப் பாடலில் நான் இன்று தெரிந்துகொண்ட வார்த்தை ‘பல்லியம்’ : பல வாத்தியங்கள் சேர்ந்து ஒலிக்கும் Orchestraவாம்!

222/365