365பா
இந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:
Disclaimer
The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.RSS Links
என் மற்ற வலைப்பதிவுகள்
Archives
- May 2012 (30)
- April 2012 (29)
- March 2012 (33)
- February 2012 (30)
- January 2012 (31)
- December 2011 (32)
- November 2011 (30)
- October 2011 (30)
- September 2011 (32)
- August 2011 (32)
- July 2011 (28)
-
Blog Stats
- 58,734 hits
Monthly Archives: February 2012
ஆடல் மகளிர்
ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார் தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ கருங்கோட்டிச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப… நூல்: நெடுநல்வாடை (வரிகள் 67 முதல் 70வரை) பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் சூழல்: வாகைத் திணை, கூதிர்ப் பாசறை, அதாவது ஐப்பசி, கார்த்திகை … Continue reading
Posted in நாடகம், புறம், வர்ணனை
11 Comments
யாருக்குப் பைத்தியம்?
பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடை சேப்பின் உள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம் கொய்குழை அகைகாஞ்சித் துறை அணி நல் ஊர! அன்பிலன், அறனிலன் எனப்படான் என ஏத்தி நின் புகழ் பல பாடும் … Continue reading
எங்கொள்வன்?
உள்ளன மற்று உள் ஆப் புறமே சில மாயம் சொல்லி ’வள்ளல் மணிவண்ணனே’ என்று என்றே உனையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே உனைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன், வெள்ளத்து அணை கிடந்தாய், இனி உன்னை விட்டு எங்கொள்வனே? நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல் பாடியவர்: நம்மாழ்வார் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பெருமாளே, … Continue reading
Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நம்மாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு
9 Comments
முன்றில், கறுப்பு, சிவப்பு
முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! * கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள நிறத்துறு உணர்த்தற்கும் உரிய என்ப! நூல்: தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் & சொல்லதிகாரம்) பாடியவர்: தொல்காப்பியர் ’முன்’ என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘இல்’ என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும் அதாவது, முன் … Continue reading
Posted in இலக்கணம், தொல்காப்பியம்
21 Comments
குருநாதா!
அபகார நிந்தை பட்டு உழலாதே ….அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே ….உனை நான் நினைத்து அருள் பெறுவேனோ! இபமாமுகன் தனக்கு இளையோனே, ….இமவான் மடந்தை உத்தமி பாலா, ஜெபமாலை தந்த சற்குருநாதா, ….திரு ஆவினன்குடிப் பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் முருகா, யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, இமவான் என்கிற … Continue reading
Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன்
4 Comments
பாட்டுப் பாடத் தெரியுமா?
கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே. முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு, முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர், யாமும் பாரியும் உளமே, குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே. நூல்: புறநானூறு (#110) பாடியவர்: கபிலர் சூழல்: நொச்சித் திணை, மீதி விவரம் ‘முன்கதை’யில் காண்க முன்கதை பறம்பு … Continue reading
Posted in கதை கேளு கதை கேளு, கபிலர், கிண்டல், புறநானூறு, புறம், வீரம்
15 Comments
க(வி)சடதபற
துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த கோடல் தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் பொடித்துத் தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக் கடி படைத்துக் காட்டித்துக் காடு நூல்: தனிப்பாடல் பாடியவர்: காளமேகம் காந்தள் மலர்கள் ஒளி பொருந்திய அரும்புகளை முளைக்கவிட்டன. கொன்றை மலர்கள் பொன் போல் ஒளிர்கின்ற மாலைகளைத் தொங்கவிட்டன. தோகை மயில்கள் கூத்தாடத் … Continue reading
Posted in காளமேகம், தனிப்பாடல், வர்ணனை, வார்த்தை விளையாட்டு, வெண்பா
12 Comments
கற்பித்தானா?
கல்லைத்தான் மண்ணைத்தான் ….காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் ….எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா? அல்லைத்தான் சொல்லித்தான் ….ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் ….புவியில்தான் பண்ணினானே! நூல்: தனிப்பாடல் பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர் சூழல்: வறுமையில் வாடும் ஒரு புலவர். தன்னுடைய நிலைமையை எண்ணி வருந்திப் பாடுகிறார் தாமரைப் பூவில் வாசம் செய்யும் … Continue reading
Posted in சினிமா, தனிப்பாடல், வறுமை
6 Comments
அமுதம்!
அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான், கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல்வண்ணன் உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு உழைத்து ஆண்டு இன் அமிர்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான் * ‘நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமிழ்து பில்கு உற்று அறத்தின் விளை ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் … Continue reading
Posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், காதல், நாடகம், ராமன்
20 Comments
பவனி
இடியின் முழக்கொடு படரும் முகிலென ….யானைமேல் கனபேரி முழக்கமும் துடியின் முழக்கமும் பரந்து திசைக் கரி ….துதிக்கையால் செவி புதைக்கவே, அடியர் முழக்கிய திருப்பல்லாண்டு இசை ….அடைத்த செவிகளும் திறக்க, மூவர்கள் வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம், ….மறைகள் ஒருபுறம் வழங்கவே, பவனிவந்தனரே, மழவிடைப் பவனி வந்தனரே! நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி பாடியவர்: திரிகூடராசப்பக் … Continue reading
Posted in சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பக்தி, பண்டிகை
2 Comments