365பா
இந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:
Disclaimer
The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.RSS Links
என் மற்ற வலைப்பதிவுகள்
Archives
- May 2012 (30)
- April 2012 (29)
- March 2012 (33)
- February 2012 (30)
- January 2012 (31)
- December 2011 (32)
- November 2011 (30)
- October 2011 (30)
- September 2011 (32)
- August 2011 (32)
- July 2011 (28)
-
Blog Stats
- 58,734 hits
Monthly Archives: September 2011
இளைத்தேன்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் …..வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த …..வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் …..நேர் உறக் கண்டு உளம் துடித்தேன் ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு …..இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன். நூல்: திருவருட்பா (#3471) பாடியவர்: இராமலிங்க வள்ளலார் (மிகச் … Continue reading
Posted in கருணை, திருவருட்பா, நவரசங்கள், வள்ளலார்
13 Comments
கீச்சுக் கீச்சு
காணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல் பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தாக்கால் கீச்சுக்கீச்சு என்னும் கிளி. நூல்: தனிப்பாடல் பாடியவர்: ஔவையார் சூழல்: சோழன் சபை. அரைகுறை ஞானம் கொண்ட சில புலவர்கள் அலட்டலாகத் தங்களுடைய புகழைத் தாங்களே ‘பாடி’க்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த ஔவையாருக்குச் சிரிப்புதான் வந்தது. இந்தப் பாடலைப் … Continue reading
Posted in ஔவையார், கிண்டல், குறும்பு, தனிப்பாடல், நவரசங்கள், வெண்பா
11 Comments
அஞ்சாதே
குவளை நாறும் குவை இரும் கூந்தல் ஆம்பல் நாறும் தேன் பொதி துவர் வாய் குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன துண் பல் தித்தி, மாஅயோயே நீயே, ‘அஞ்சல்’ என்ற என் சொல் அஞ்சலையே யானே, குறுங்கால் அன்னம் குவவு மணல் சேர்க்கும் கடல் சூழ் மண்டலம் பெறினும், விடல் சூழலன் யான், நின்னுடை … Continue reading
Posted in காதல், குறிஞ்சி, குறுந்தொகை, நவரசங்கள், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்
6 Comments
அவன் உரை
அட்டு ஆனானே குட்டுவன் அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து வளிமுனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் சொரிசுரை கவரு நெய்வழிபு உராலின் பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல நல்நுதல் விறலியர் ஆடும் தொல் நகர் வரைப் பின் அவன் உரை ஆனாவே நூல்: பதிற்றுப் பத்து (#47) … Continue reading
Posted in சிவன், சேரன், பதிற்றுப்பத்து, புறம்
1 Comment
யானும் புலவனா?
அறம் உரைத்தானும் புலவன்;முப் பாலின் திறம் உரைத்தானும் புலவன் – குறுமுனி தானும் புலவன்; தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனில்! நூல்: தனிப்பாடல் பாடியவர்: பொய்யாமொழிப் புலவர் சூழல்: இப்பாடல் குறித்து ஒரு கதை உண்டு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பலமுறை விளக்கியுள்ள அந்தக் கதையையே இதன் சூழலாகக் கொள்ளலாம் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் … Continue reading
Posted in கதை கேளு கதை கேளு, தனிப்பாடல், தன்னடக்கம், தமிழ், நாடகம், வெண்பா
3 Comments
சீர் இளமைத் திறம் வியந்து
பல்உயிரும் பல உலகும் ….படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லைஅறு பரம்பொருள்முன் ….இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் ….கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ….ஒன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு ….அழிந்து ஒழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறம்வியந்து ….செயல்மறந்து வாழ்த்துதுமே! நூல்: மனோன்மணீயம் பாடியவர்: சுந்தரம் பிள்ளை (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் … Continue reading
Posted in தமிழ், நாடகம், மனோன்மணீயம், வாழ்த்து
4 Comments
ஞாயிறு கடல் கண்டாஅங்கு
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள் செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் நூல்: திருமுருகாற்றுப்படை (வரிகள் 1 முதல் 6 … Continue reading
Posted in நக்கீரர், நண்பர் விருப்பம், பக்தி, முருகன்
27 Comments
புதிரு போடப் போறாரு @kryes
சின்ன வயசில் தமிழ்ப் பாடம் படித்துப் பரீட்சை எழுதின ஞாபகம் இருக்கா? #365paa வலைப்பதிவில் இத்தனை பாடல்களைக் கொடுத்தபின்னும் பரீட்சை வைக்கலைன்னா எப்படி? நண்பர் @kryes உங்களுக்கு ஒரு சின்னத் தேர்வு வைக்கிறார். பத்தே கேள்விகள், எல்லாம் எளிமையானவை, இதுவரை #365paa வரிசையில் வெளியாகியுள்ள பாடல்களை அடிப்படையாகக் கொண்டவை. உங்க PaaQ என்ன? முயற்சி செஞ்சு … Continue reading
Posted in புதிர், Uncategorized
Leave a comment
நெஞ்சே, அங்கேயே இரு
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப நீல் நிறப் பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி குவை இரும் புன்னைக் குடம்பை சேர அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலை தாழை தளரத் தூக்கி, மாலை அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனைய, … Continue reading
Posted in அகநானூறு, அகம், காதல், தோழி, நெஞ்சுக்குச் சொன்னது, நெய்தல், பிரிவு
4 Comments
வெண்ணெய் ஏன் உண்டாய்?
உண்டாய் உலகுஏழ் முன்னமே ….உமிழ்ந்து மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய்ச் சிறுமனிசர் ….உவலை யாக்கை நிலை எய்தி மண்தான் சோர்ந்தது உண்டேலும் ….மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் அண்டாவண்ணம் மண் கரைய ….நெய் ஊண் மருந்தோ, மாயோனே! நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (திருவாய்மொழி #2726) பாடியவர்: நம்மாழ்வார் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய … Continue reading
Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், கண்ணன், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி
11 Comments